25 ஜன., 2014

பூமியின் முளைகளாக இருக்கும் மலைகள்!


பூமியின் முளைகளாக இருக்கும் மலைகள் குறித்து அல்-குர்ஆன்!

கோள வடிவிலான இந்த பூமியின் மேற்பரப்பு (Outer Crust Of The Earth) மட்டுமே உறுதியாகவும், கடினமானதாகவும் இருக்கிறது. ஆனால், உள்பகுதியில் ஆழமாக செல்ல செல்ல அவைகள் அதிக வெப்பமுடையதாகவும், உருகிய நிலையிலும் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். பூமியின் மேற்பரப்பில் உள்ள இந்த இருகிய பகுதி (Outer Crust) பூமியின் மேற்பரப்பிலிருந்து 1 முதல் 10 கிலோமீட்டர் வரைதான். அதற்கு கீழே உருகிய நெருப்பு குழம்புகள் இருக்கின்றன.

இவ்வாறு பூமியின் மேற்பகுதி இறுகியும், உட்பகுதி இறுகாமல் உருகிய நிலையிலும் இருப்பதால், பூமியின் சுழற்சியின் காரணமாக மையவிலக்கு விசையால் (Centrifugal Force) பூமியின் மேற்பரப்பு நகர்ந்து இடம் பெயர்ந்தது என்று புவியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக உலக வரைபடத்தை காட்டுகிறார்கள். உல்கம் முழுவதிலும் வளைந்தும், நெளிந்தும் இருக்கும் பூமியின் நிலப்பரப்புகளை ஒன்று சேர்த்தால் அவை கச்சிதமாகப் பொருந்திக் கொள்ளும் என்கின்றனர்.

இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால் ஒரு காலத்தில் ஒரே துண்டாக இருந்த பூமியின் நிலப்பரப்புகள் எல்லாம் விலகி தனித்தனி துண்டுகளாகியது (Continental Drift) என்பதுதான். பூமியின் மேற்பகுதி கடினமானதாகவும், உட்பகுதி உருகிய நிலையிலும் இருப்பதால் தான் இது நடைபெற்றதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இவ்வாறு இந்த நிலப்பரப்புகள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்த வேளையில் ‘Folding Phenomena’ என்ற முறையில் நிலப்பரப்புகளில் மலைகள் தோன்ற ஆரம்பித்தன. இந்த மலைகள் பூமியின் மேற்பரப்பில் அல்லாமல் பூமிக்குள்ளும் ஆழமாகச் சென்று முளைகளாக அமைந்தன. அதனால்தான் வேகமாக நகர்ந்து கொண்டிருந்த கண்டத்தின் நிலப்பரப்புகள் அவ்வாறு வேகமாக நகராமல் நிலைநிறுத்தப்பட்டன. இவ்வாறு மலைகளை முளைகளாக நிலைநிறுத்தியதை அல்லாஹ்வும் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்.

நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?” (அல்குர்ஆன்: 78:6-7)

இன்னும் இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்” (அல்குர்ஆன்: 21:31)

அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கின்றீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அதன்மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான். மேலும், அதன்மீது எல்லாவிதமான பிராணிகளையும் அவன் பரவ விட்டிருக்கின்றான். இன்னும், நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்” (அல்குர்ஆன்: 31:10)

உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான். இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்)” (அல்குர்ஆன்: 16:15)

மலைகள் பூமிக்குள் இவ்வாறு முளைகளாக அமைந்திருக்காவிட்டால், நாம் வசிக்க முடியாத அளவிற்கு இந்த பூமி ஆடி, அசையும் என்கின்றனர் புவியியல் வல்லுணர்கள்.

வானம் பிளந்து ....... _ NASA வான்வெளி ஆய்வு நிலையம்..

வானம் பிளந்து மலரைப் போன்று மாறும் என்று கூறும் அல்குர்ஆன்!!! இதை உண்மை படுத்திய NASA வான்வெளி ஆய்வு நிலையம்

வானம் பிளந்து எண்ணையை ஒத்த மலரைப் போன்று சிவந்ததாக ஆகிவிடும் போது” -ஸூரா ரஹ்மான்,குர்ஆன் 55:37

வானம் பிளந்து போகும் அதாவது வானத்து கட்டுமானப் பொருட்கள் வெடித்துப் பிளந்து விடும். அப்போது அதன் தோற்றம் பூ போன்றிருக்கும். அந்த பூவும் எண்ணையை தடவி விட்டது போன்றிருக்கும் எனக் கூறுகிறது இந்த வசனம். இந்த நிகழ்வு எவ்வாறு அமையும் என்பது இறைவனே அறிந்த விஷயமாகும்.

எனினும் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் எமது வான்வெளியை இறைவனே ஆக்கி வைத்துள்ளான். அதாவது இப்போதும் நட்சத்திரங்கள் தமது வாழ்வின் மேற்குறிப்பிட்ட நிலையின் போது வெடித்துச் சிதறுகின்றன. அப்படி வெடித்த நட்சத்திரங்கள் சிலவற்றை 1999ம் ஆண்டு அக்டோபர் 31ல் அமெரிக்க வான்வெளி ஆய்வு நிலையமாகிய நாஸா (NASA)’ புகைப்படமெடுத்து வெளியிட்டது. வெடித்த அந்த ஒவ்வொரு நட்சத்திரத்தின் தோற்றமும் இந்த வசனம் சொல்வதைப் போன்று சிவப்பு ரோஜாவைப் போன்றிருந்தன.

விஞ்ஞானிகள் எண்ணை தடவிய சிகப்பு ரோஜாக்கள் என்றே அவற்றை வர்ணித்தனர். இந்த வர்ணனை அல்குர்ஆனின் அதே வசனமாகவே அமைந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியதாகும்.

இது போன்று சிறிய சிறிய வசனங்களும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து பயன் படுத்தப்பட்டுள்ளதை பார்த்து நாம் ஆச்சரியப்படுகிறோம். நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தை அல்லாது மனிதர்களின் வார்த்தை அல்ல என்பதற்கு இது போன்ற வசனங்கள் நமக்கு சிறந்த உதாரணங்கள் ஆகும்.

55:37 فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ

55:37. எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்