27 மார்., 2013

நில அளவைகள் அறிவோம்.

பழந்தமிழரின் அளவை முறைகள்...!


நில அளவைகள் பல்வேறு அளவுகளில் குறிப்பிடப்படுகின்றன. 

 

அது பற்றிய விவரம்:-

 

நில அளவை

 

1 ஹெக்டேர்           -2 ஏக்கர் 47 சென்ட்

1 ஹெக்டேர்           -10,000 சதுர மீட்டர்

1 ஹெக்டேர்           -100 ஏர்ஸ்

1 ஏக்கர்                 -0.405 ஹெக்டேர்

1 ஏக்கர்                 -4046.82 சதுர மீட்டர்

1 ஏக்கர்                 -43,560 சதுர அடிகள்

1 ஏக்கர்                  -100 சென்ட்

1 ஏக்கர்                  -4840 குழி (Square Yard)

1 ஏக்கர்                  -1 லட்சம் ச.லிங்க்ஸ்  

1 ஏக்கர்                  -3.5 மா

1 ஏர்ஸ்                  -1076 சதுர அடி

1 ஏர்ஸ்                  -2.47 சென்ட்

1 கிரவுண்ட்           -222.96 சதுர மீட்டர்

1 கிரவுண்ட்           -2400 சதுர அடிகள்

1 மைல்                 -1.61 கிலோ மீட்டர்

1 மைல்                 -1610 மீட்டர்

1 மைல்                 -5280 அடி  

1 மைல்                 -201.16 மீட்டர்

1 மைல்                 -8 பர்லாங்கு

1 சதுர மைல்        -640 ஏக்கர்

30 சதுர மைல்     -1 டவுன்சிப்

1 கிலோ மீட்டர்      -1000 மீட்டர்  

1 கிலோ மீட்டர்      -0.62 மைல்

1 கிலோ மீட்டர்      -3280 அடி

1 கிலோ மீட்டர்      -5 பர்லாங்கு
1 மீட்டர்                 -1.093613 கெஜம்

1 மீட்டர்                 -3.281 அடி

1 சதுர மீட்டர்        -10.76391 சதுர அடிகள்

1 சதுர மீட்டர்        -1.190 குழி

1 சதுர அடி            -0.0929 சதுர மீட்டர்

1 சதுர அடி            -144 ச.அங்குலம்      

1 சென்ட்               -435.6 சதுர அடிகள்

1 சென்ட்               -40.5 சதுர மீட்டர்

1 சென்ட்               -48.4 சதுர குழிகள்

1 சென்ட்               -1000 ச.லிங்க்ஸ்             

1 மனை                -2400 ச.அடி   

1 காணி                -24 மனை         

1 காணி                -1 .32 ஏக்கர்

1 காணி                -132 சென்ட்

1 காணி                -3 குழி

1 காணி                -1.32 ஏக்கர்

1 காணி                -57,499 சதுர அடி

1 குழி (Square Yard)-0.8361 சதுர மீட்டர் (Square Meter)
1 குழி                    -9 சதுர அடி

1 குழி                    -18 கோல்

1 வேலி                  -6.17 ஏக்கர்

1 வேலி                  -20 மா

1 குந்தா (Guntha)  -121 குழி = 101.17 சதுர மீட்டர்
1 குந்தா (Guntha)  -33 அடி  = 1089 சதுர அடி

1 அடி                    -12 இன்ச்

1 அடி                    -30.38 செ.மீ

1 பர்லாங்கு           -660 அடி

1 பர்லாங்கு           -220 கெஜம்

1 பர்லாங்கு           -10 செயின்

1 செயின்             -66 அடி  

1 செயின்             -100 லிங்க்

1 செயின்             -22 கெஜம்

1 செயின்             -66 அடி

1 லிங்க்                 -0.66 அடி

1 கெஜம்               -3 அடி

1 இன்ச்                 -2.54 செ.மீ

1 செ.மீ                  -0.3937 செ.மீ

1 கெஜம்               -0.9144 மீட்டர்

1 மா                      -100 குழி

1 கோல்                 -16 சாண் 

1 பாடகம்              -240 குழி

1 டிசிமல்               -1 ½ சென்ட்

 

முகத்தல் அளவைகள்


ஒரு ஆழாக்கு                          -168 மில்லி லிட்டர்.
ஒரு உழக்கு                             -336 மில்லி லிட்டர்.
ஒரு கலம்                                -64 ½ லிட்டர்.
ஒரு தூணி                              -21 ½ லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி                -தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி     -240 மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை                         -30 மில்லி லிட்டர்.
ஒரு குப்பி                               -700 மில்லி லிட்டர்.
ஒரு அவுன்ஸ்                         -31 கிராம்.

முன்னூற்று அறுபது நெல்    -ஒரு சோடு.
ஐந்து சோடு                             -ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு                   -ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு                      -ஒரு உரி.
இரண்டு உரி                            -ஒரு நாழி.
எட்டு நாழி                               -ஒரு குறுணி.
இரண்டு குறுணி                    -ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு                       -ஒரு தூணி.
மூன்று தூணி                         -ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை        -ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை        -ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை                                 -ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை                      -ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை                                      -ஒரு தோலா.
மூன்று தோலா                                           -ஒரு பலம்.
எட்டு பலம்                                                  -ஒரு சேர்.
நாற்பது பலம்                                             -ஒரு வீசை.
ஐம்பது பலம்                                              -ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு                                          -ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை            -130 மில்லி கிராம்.
ஒரு பணவெடை             -488 மில்லி கிராம்.
ஒருதோலா                      -12 கிராம் (அண்ணளவாக)

ஒருதோலா                       -11.7 கிராம் (துல்லியமாக)
ஒரு பலம்                         -35 கிராம்.
ஒரு வீசை                        -1400 கிராம்.
ஒரு விராகன்                    -4 கிராம்.

கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள்           -ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை                    -ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை               -ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை                             -ஒரு நாள்.
ஏழரை நாழிகை                               -ஒரு சாமம்.
ஒரு சாமம்                                        -மூன்று மணி.
எட்டு சாமம்                                       -ஒரு நாள்.
நான்கு சாமம்                                   -ஒரு பொழுது.
ரெண்டு பொழுது                              -ஒரு நாள்.
பதினைந்து நாள்                              -ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம்                                  -ஒரு மாதம்.
ஆறு மாதம்                                       -ஒரு அயனம்.
ரெண்டு அயனம்                              -ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு                               -ஒரு வட்டம்.