நொறுக்குத் தீனிக்கு பதில் பழத்துண்டுகள்
* நன்கு பழுத்த பழங்களில் மனித உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான எல்லாவித சத்துப் பொருட்களும் உள்ளன.
* தினமும் தேவையான அளவு பழங்களை சாப்பிட்டால் புற்றுநோய், இருதய நோய் மற்றும் இதர நோய்கள் வரும் அபாயம் மிகவும் குறைகிறது.
* பசிக்கும்போது நொறுக்குத் தீனியாக சிப்ஸ், எண்ணெய் பலகாரங்களுக்குப் பதில் பழத்துண்டுகளை உண்ண வேண்டும்.
* நீரிழிவு நோய் இருந்தால் அதிகம் மாவுச் சத்துள்ள வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழத்தை குறைவாக சாப்பிட வேண்டும்.
* அன்னாசி பழத்தில் உடலுக்கு தேவையான பல என்ஸைம்கள் உள்ளன. தினமும் 400 கிராம் பழத்தை மூன்று நான்கு முறையாக சாப்பிடலாம்.
* அளவுக்கு அதிகமான உடல் பருமனை குறைக்க விரும்புவோர் வாரம் 2 நாட்கள் பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும்.

பற்களை பாதுகாக்க...
* இரவில் படுப்பதற்கு முன் பல் துலக்க வேண்டும்.
*ஆறு மாத குழந்தையிலிருந்து ஆறு மாதத்திற்கு ஒருமுறை டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.
*பல் இடுக்குகளில் சிக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்ட அரைமணி நேரத் திற்குள் வாய் கொப்பளித்தல், பிரஷ் செய்தல், பல் குத்தி மூலம் அகற்றி விட வேண்டும்.
* சொத்தைப் பற்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அடைக்க வேண்டும்.
* ஈறு நோயினால் பற்களை இழக்காமல் இருக்க ஈறுகளில் ரத்தம் கசிதல், வீக்கம், வாய் துர்நாற்றம், பல்காரை படிதல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.
*பற்களை இழக்க நேரிட்டால் நான்கு மாதத்திற்குள் செயற்கை பல் பொருத்த வேண்டும்.
* சுழற்றக்கூடிய செயற்கைப் பல் மற்றும் கிளிப் அணிந்திருந்தால் ஒவ்வொரு முறையும் உணவுக்கு பின் கழற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
* முன்பு சிகிச்சைப் பெற்ற, அடைத்த பற்களில் ஏதேனும் தொந்தரவு இருந்தால் டாக்டரை அணுக வேண்டும்.

உணவு விழுங்குவதில்
சிக்கல் ஏற்படாமல் இருக்க...
*இரைப்பையில் உள்ள அமிலநீர், உணவு குழாயில் அழற்சி, புண் ஏற்படுத்துவதால் உணவு விழுங்குவதில் தடங்கல் ஏற்படுகிறது.
* இதை தவிர்க்க உணவு கட்டுப்பாடு அவசியம்.
* காபி, சாக்லேட், கூல்டிரிங்ஸ், புகையிலை தவிர்க்க வேண்டும்.
* உடல் எடையை குறைக்க வேண்டும்.
* இரவு உறங்கும்போது, தலைபக்கம் உயர்வாக இருக்கும் வகையில் படுத்தால், அமில எதிர்ப்பு குறையும்.
* இவை அனைத்தையும் மீறி, விழுங்குதலில் சிக்கல் தொடர்ந்தால் டாக்டரை அணுக வேண்டும்.

வாயுத்தொல்லை, இடுப்பு வலி நீங்க...
* உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாததே மூலக்காரணம்.
* வாயு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், அதிகமான நீர் அருந்த வேண்டும்.
* உடற்பயிற்சி அவசியம். மல்லாந்து படுத்துக்கொண்டு, இரு கால்களையும் நன்றாக உயர்த்த வேண்டும். முட்டி மடியக்கூடாது. நீட்டிய காலை மெதுவாக உயர்த்தி கீழே இறக்க வேண்டும். இதனால் வயிற்று தசைகளால் மலம் தள்ளப்பட்டு வெளியேற்றப்படும்.