26 மார்., 2018

சிறுநீரகங்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!!!

சிறுநீரகங்களைப்பற்றி  ஒவ்வொருவரும் கட்டாயம்   தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்!!! 

தற்போது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால், பலரும் சிறுநீரக நோய்களுக்கு உள்ளாகின்றனர்.

 உடல் உறுப்புக்களில் மிகவும் முக்கியமான ஒன்று தான் சிறுநீரகம்.
இந்த சிறுநீரகம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பல பணிகளை செய்கிறது. 
அதில் பலரும் அறிந்தது, சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை பிரித்து இரத்தத்தை சுத்தம் செய்யும் என்பது மட்டும் தான்.
ஆனால் சிறுநீரகம் வேறுசில பலரும் அறிந்திராத பணிகளையும் செய்து வருகிறது.   ஒருவருக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்படுவதற்கு  இரத்த அழுத்தமும், நீரிழிவும் முக்கிய காரணமாக உள்ளது.  
இந்த இரு பிரச்சனைகளும் கொண்டவர்களுக்கு சிறுநீரக நோய்கள் எளிதில் தாக்கக்கூடும். சரி, இப்போது சிறுநீரகங்களைப் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் பற்றி பார்ப்போமா!!!

 திரவ அளவு   சிறுநீரகங்கள் உடலின் திரவ அளவை நெறிப்படுத்த உதவும். டாக்ஸின்களை வெளியேற்றும் சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் டாக்ஸின்களை பிரித்தெடுத்து, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.  இரத்த அழுத்தத்தை சீராக்கும்  சிறுநீரகங்கள் ரெனின் என்னும் ஹார்மோனை வெளிப்படுத்தி, உடலின் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். 

ஆரோக்கியமான எலும்புகள் :  எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு சிறுநீரகங்கள் தான் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரங்கள் தான் வைட்டமின் டி-யை செயல்படுத்தி, எலும்புகளில் கால்சியம் சத்தை பராமரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. 

இரத்த சிவப்பணுக்கள்  சிறுநீரகங்கள் எரித்ரோபொயட்டின் என்னும் ஹார்மோனைத் தூண்டி எலும்புமஞ்சையில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது.  கனிமச்சத்துக்களை பராமரிக்கும்   சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கனிமச்சத்துக்களான சோடியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்தின் அளவை சீராக பராமரிக்கும். 

30 நிமிடத்திற்கு ஒருமுறை வடிகட்டும் சிறுநீரகங்கள் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒருமுறையும், உடலின் ஒட்டுமொத்த இரத்தத்தையும் வடிகட்டி, கழிவுகள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றும். 

ஒரு சிறுநீரகம் போதும்   மனிதன் உயிர் வாழ்வதற்கு 2 சிறுநீரகங்கள் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஒரே ஒரு சிறுநீரகம் இருந்தால் போதும்.  நீளம் மற்றும் எடை  சிறுநீரகங்கள் ஒவ்வொன்றும் 4.5 இன்ச் நீளமும், 5 அவுன்ஸ் எடையும் கொண்டிருக்கும்.  50 கேலன் இரத்தம் சுத்தமாகும்  ஒவ்வொரு நாளும் சிறுநீரகமானது 50 கேலன் இரத்தத்தை 140 மைல் குழாயின் மூலம் வடிகட்டுகிறது.