7 மார்., 2022

Radio Garden

அன்புள்ள அனைவருக்கும், இப்போது இயர் போன் இல்லாமலும் உலகம் முழுவதும் வானொலி கேட்கலாம்!!!! இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) இணைப்பைக் கிளிக் செய்யும் போது, உலகம் சுழல்வதைக் காணலாம். பச்சை நிற புள்ளிகள் உள்ளன, அதில் நீங்கள் தொட்டால் அந்த இடத்திலிருந்து நேரடி வானொலியைக் கேட்கலாம். உங்கள் உள்ளூர் வானொலியை முயற்சிக்கவும்!!!!

2 நவ., 2021

பாங்கு சப்தம் கேட்டால் செய்ய வேண்டிய அமல்கள் 🤲

  சப்தம் கேட்டால் நாமும் பாங்கில் உள்ள வாசகங்களை கூற வேண்டும்!

தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள்!

பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள்!

பின்பு அவர், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லுங்கள்!

பின்பு அவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று சொன்னால் நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள்!

பின்பு அவர் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்னால் நீங்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லுங்கள்!

பின்பு அவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள்!

பின்பு அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்.

(நூல் : முஸ்லிம் : 629)

💜 பாங்கு கூறி முடிந்த பின்பு நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும்!

• ஸலவாத் சில வார்த்தைகள் மாற்றங்கள் உடன் மொத்தமாக 7 வெவ்வேறு ஸலவாத்கள் உள்ளன!

• அதில் சிலவைகள் பலகீனம் ஆகும் ஸஹீஹான 4 ஸலவாத்களை மட்டும் இங்கே குறிப்பிட்டு உள்ளோம்!

• இதில் நாம் ஏதேனும் ஒன்றை ஓதி கொண்டாலே போதுமானது!

❤️ முதல் ஸலவாத் :

‘ அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா
இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத் ’

‘ அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா
இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத் ’

பொருள் : இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்தைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய்!

(நூல் : புகாரி : 3370)

❤️ இரண்டாம் ஸலவாத் :

'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்திக்க வ ரசூலிக்க கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம'

பொருள் : யா அல்லாஹ்! நீ இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீது கருணை புரிந்ததைப்போன்று, உனது அடியாரும் தூதருமாகிய முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது கருணை புரிவாயாக! மேலும், இப்ராஹீமின் மீதும், இப்ராஹீமின் குடும்பத்தார் மீதும் அருள் புரிந்ததைப்போன்று, உனது அடியாரும் – தூதருமாகிய முஹம்மத் மீதும், முஹம்மதின் குடும்பத்தார் மீதும் நீ அருள்புரிவாயாக!

(நூல் : புகாரி : 4798)

❤️ மூன்றாவது ஸலவாத் :

‘ அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா அஸ்வாஜிஹி, வ துர்ரியத்திஹி, கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம, வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி, கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம. இன்னக்க ஹமீதும் மஜீத் ’

பொருள் : இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியர் மற்றும் சந்ததியினருக்கும் நீ கருணை புரிவாயாக! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியர் மற்றும் சந்ததியினருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்!

(நூல் : முஸ்லிம் : 686)

❤️ நான்காவது ஸலவாத் :

‘ அல்லாஹும்ம, ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம,வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த அலா ஆலி இப்றாஹீம ஃபில் ஆலமீன இன்னக்க ஹமீதும் மஜீத் ’

பொருள் : இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக! அகிலத்தாரில் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் அளித்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சமளிப்பாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்!

(நூல் : முஸ்லிம் : 682)

💜 ஸலவாத் கூறுவதன் சிறப்பு :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்!

(நூல் : முஸ்லிம் : 687)

💟 பாங்கு துஆ :

• ஹதீஸ்களில் இரண்டு துஆக்கள் உள்ளது நமக்கு எந்த துஆ மனனம் உள்ளதோ அந்த துஆவை ஓதி கொள்ளலாம்!

• பாங்கு கூறி முடித்த பின்பு ஸலவாத் ஓதிய பின்பு கிழே ஏதேனும் ஒரு துஆவை ஓத வேண்டும்!

اَللّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا اَلْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِيْ وَعَدْتَهُ

‘ அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ஃபளீல(த்)த வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு ’

பொருள் : முழுமையான இந்த அழைப்புக்குரிய இறைவனே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும், சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!

துஆவின் சிறப்பு : பாங்கோசை  கேட்ட பின்பு மேலே உள்ள துஆவை ஓதினால் அவருக்கு மறுமையில் நாளில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை அவசியம் கிடைக்கும்!

(நூல் : புஹாரி : 614)

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ  شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ  رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولاً وَبِالإِسْلاَمِ دِينًا

‘ அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன் ’

பொருள் : அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்!

துஆவின் சிறப்பு : பாங்கு கூறிய பின்பு மேலே உள்ள துஆவை ஓதினால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்!

(நூல் : முஸ்லிம் : 630)

💟 பாங்கு கூறும் பொழுது நம்முடைய சமூகம் செய்யும் சில அறியாமைகள் செயல்கள் :

❤️ ஸலவாத்துன்னாரிய்யா :

• நம்முடைய நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்க கூடிய ஒன்று தான் இந்த ஸலவாத் ஆகும்! இது இஸ்லாத்தில் கிடையாது!

• நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும்!

• நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு வெவ்வேறு ஸலவாத்கள் கற்று கொடுத்து உள்ளார்கள் ஆனால் ஒரு போதும் ஸலவாத்துன்னாரிய்யா என்ற ஸலவாத்தை சொல்லி கொடுக்க வில்லை!

• இந்த ஸலவாத்துன்னாரிய்யா பற்றி ஹதீஸ்களில் கிடையாது ஏன் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலயோ அல்லது ஸஹாபாக்கள் வாழ்ந்த காலத்திலயோ அல்லது தாபியீன்கள் - தபா தாபியீன்கள் வாழ்ந்த காலத்திலயோ இந்த ஸலவாத்துன்னாரிய்யா கிடையாது!

• மிகவும் பின்னால் வந்த சுபியாக்ள் கொள்கை கொண்ட வழிகேடு கொள்கை கொண்டவர்கள் அவர்களாக சுயமாக உருவாக்கி கொண்டு தான் இந்த ஸலவாத்துன்னாரிய்யா ஆகும்!

• இந்த ஸலவாத்துன்னாரிய்யா என்ற ஸலவாத் தெளிவான ஷிர்க் ஆகும் காரணம் அதன் பொருளை நாம் படித்தாலே நமக்கு புரியும்!

ஸலவாத்துன்னாரிய்யா பொருள் :

யா அல்லாஹ்! எவர் மூலம் சிக்கல்கள் அவிழ்ந்து விடுமோ; எவர் மூலம் கஷ்டங்கள் அகன்று விடுமோ; எவர் மூலம் தேவைகள் நிறைவு செய்யப்படுமோ; எவர் மூலம் ஆசைகள் பூர்த்தி செய்யப் படுமோ; எவருடைய திருமுகத்தின் மூலம் மேகத்திலிருந்து மழை பெறப்படுமோ அந்த எங்கள் தலைவர் மீது முழுமையாக நீ அருள் புரிவாயாக!

• அல்லாஹ்விற்கு மட்டும் உடைய தன்மைகளை நவதுபில்லாஹ் நபி (ஸல்) அவர்களை ஒப்பிட்டு கூறுகிறார்கள்!

(நபியே!) நீர் கூறும் : “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை!

(அல்குர்ஆன் : 10 : 49)

• நபி (ஸல்) அவர்களுக்கு பல சிறப்புகள் இருந்தாலும் அவர்கள் மனிதரே அல்லாஹ்வின் உதவி இன்றி எதுவும் அவர்களால் செய்ய முடியாது!

• இந்த ஸலவாத்துன்னாரிய்யாவை மக்கள் அதிகம் ஓத வேண்டும் என்று இதற்கு நிறைய சிறப்புகள் கூறுவார்கள் இந்த ஸலவாத்தை 4444 முறை ஓதினால் கஷ்டம் நோய் பிரச்சனை அனைத்துமே தீர்ந்து விடும் என்று ஆனால் இந்த ஸலவாத்தை ஓதுவதே முதலில் நம்மை பெரும் பாவத்தில் சேர்த்து விடும்!

❤️ ரூஹ்ஹானி வருவார்கள்?

• மக்கள் மத்தியில் உள்ள மற்றொரு பிரபலமான அறியாமை மஹ்ரிப் நேரத்தில் ரூஹ்ஹானி (இறந்தவர்களின் ரூஹ் (உயிர்)) வரும் என்று!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால்' அல்லது 'அந்திப் பொழுதாம்விட்டால்' உங்கள் குழந்தைகளை (வெளியே திரியவிடாமல்) தடுத்துவிடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவுகின்றன!

(நூல் : புகாரி : 5623)

• ஷைத்தான்கள் மற்றும் கெட்ட ஜின்கள் சூரியன் மறையும் நேரத்தில் தான் வெளியே வரும் இதை தான் நம்முடைய சமூகத்தினர் ரூஹ்ஹானி வரும் என்று கூறுவார்கள்!

• ஆனால் இறந்தவர்களால் ஒரு போதும் மீண்டும் வர முடியாது!

❤️ தலையை கட்டாயம் மறைக்க வேண்டுமா?

• பாங்கு கூறினால் நம்முடைய சமூகத்தில் உள்ள மற்றொரு அறியாமை பாங்கு கூறினால் பெண்கள் கட்டாயம் தலையை மறைக்க வேண்டும் என்று!

• ஆனால் இவ்வாறு செய்வதற்கு அல் குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ எந்த ஆதாரமும் கிடையாது! இது அறியாமை செயல் ஆகும்!

❤️ வேலைகள் எதுவும் செய்ய கூடாதா?

• பாங்கு கூறும் பொழுது எந்த வேலையும் செய்ய கூடாது! ஒரே இடத்தில் நிற்க வேண்டும் என்று நம்முடைய சமூகத்தில் ஒரு அறியாமை நிலவுகிறது ஆனால் இதற்கு ஸஹீஹான எந்த ஆதாரமும் கிடையாது! இவை எல்லாமே மூடநம்பிக்கையே!

• பாங்கு கூறினால் அதற்கு பதில் நாம் வேலை செய்து கொண்டே கூட கூறலாம்!

• அல்லாஹ் பாதுகாக்கணும் இன்றும் சில ஊர்களில் பாங்கு கூறினால் தலை வார கூடாது உண்ண கூடாது வீட்டு கதவு மூடி இருக்க கூடாது கழிவறை செல்ல கூடாது என்று எல்லாம் நிறைய கட்டுக்கதைகள் கூறுவார்கள் ஆனால் இதற்கு எல்லாம் எந்த ஆதாரமும் கிடையாது! இவை எல்லாமே மக்கள் அறியாமை ஆகும்!

@அல்லாஹ் போதுமானவன் 💞

4 மே, 2021

ஒட்டகம்


 

இறைவனின் படைப்புகளிலேயே மிகவும் அற்புதமான ஓர் படைப்பே ஒட்டகமாகும். 

 

இது பற்றி அல் குர்ஆனில் இறைவன் " ஒட்டகத்தை நாம் எவ்வாறு படைத்துள்ளோம்" என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? என்று.எம்மைப் பார்த்து அல்லாஹ் கேட்கின்றான்.. அதனைப் பற்றிய ஓர் ஆய்வு:

"ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!

ஒட்டகம் தனக்குத் தேவையான தண்ணீரையும் சேமித்துக் கொள்கிறது என்பதை பற்றி!..1,400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன !

பாலைவனத்து அரபிகளால் 160க்கும் அதிகமான செல்லப் பெயர்களால் அழைக்கப்படும், முக்கியமான பெயராக இறைவனின் பரிசு என்று அழைக்கப்படும் இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அதை திமிலாக்கி கொள்கிறது (சுமார் 45கிலோ எடை இருக்கும் அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்.) எதற்காக என்றால் தேவை காலத்திற்காக. உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது.

உணவு மட்டும் கிடைத்தால் போதும் நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் காலம் பயணம் செய்யும். உணவோ, நீரோ கிடைக்காவிட்டால் கூட இரண்டின் தேவையில்லாமல் ஒரு வார காலம் பயணம் செய்யும். குளிர் காலங்களில் ஆறு மாத காலம் வரை கூட நீர் அருந்தாமல் வாழும். நீர் கிடைத்தால் 100 லிட்டர் தண்ணீரை 10 நிமிடங்களுக்குள் குடித்து விடும். குடிக்கும் நீரை இரத்தத்தின் சிகப்பு அனுக்களில் ஏற்றிக் கொள்கிறது அதற்காக அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு விரிந்து இடமளிக்கிறது (மற்ற மிருகங்கள், மனிதர்களுக்கு ஒரு மடங்கு விரிந்தால் போதும் வெடித்து விடும்) மேலும் இரப்பையில் உள்ள நீர் அறைகளிலும் (WATER CELLS) நீரை ஏற்றிக் கொள்கிறது. மனிதனாகட்டும், மிருகமாகட்டும் எல்லாவற்றிற்கும் இர்த்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக (சுழுருNனு) இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்து மட்டும் முட்டை வடிவத்தில் (ROUND) இருக்கும்

குட்டிப் போட்டு பாலூட்டும் (மனிதன் உட்பட) பிராணிகளில் நீரிழைப்பை தாங்கி கொள்வதில் ஒட்டகத்திற்கு நிகராக வேறு எதுவுமில்லை. நீரிழப்பினால் வறட்சி ஏற்படும் சமயத்தில் மற்ற பிராணிகளின் மற்றும் மனிதன் இரத்தம் பாகு நிலைக்கு வந்து விடும். அதனால் இரத்த ஓட்டத்தின் வேகம் வெகுவாக குறைந்து விடும். அதன் காரணத்தால் வாழ தேவையான இதமான சூட்டை தோலுக்கு அளிக்க முடியாமல் எகிறும். பிறகு சூட்டினால் வெடிப்பு மரணம் (EXPLOSIVE HEAT DEATH) நிகழ்ந்து விடும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அப்படி நேராது. ஏனென்றால் உடல் திசுக்களில் உள்ள நீர் மட்டும் குறையாது. நீரில்லாமல் இதன் இர்த்தத்தில் நீர் அளவு குறையாது. நீரில்லாமல் நீண்ட நாள் வறட்சி ஏற்பட்டு, நீண்ட இடைவெளிக்குப்பிறகு நீர் அருந்தினால், அது குறைந்த அளவாக இருந்தால் கூட மற்ற பிராணிகளுக்கு (மனிதன்) நீர் போதை (Water Intoxication) ஏற்பட்டு இறப்பு நிகழந்துவிடும். ஆனால் ஒட்டகம் வறட்சிக்குப் பிறகு நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீரும் குடிக்கும். சாகவும் செய்யாது.

வெயிலின் சூடு 104 டிகிரியை அடைய வேண்டும்;. அப்போது தான் ஒட்டகத்துக்கு வியர்வையே வரும். அதுவரை வியர்க்காது. அதன் உடல் அளவிற்கு அதிகமான வியர்வை சுரப்பிகள் இருக்கவேண்டும். ஆனால் மிகவும் குறைவாக இருப்பது ஒரு தனித்தன்மையே ஆகும். மற்ற பிராணிகள் (மனிதன்) உடல் சூட்டை வியர்த்து குளிர்வித்துக் கொள்ளும். ஆனால் ஒட்டகம் மட்டும் பகல் காலங்களில் வெப்பத்தை 12 டிகிரி வரை சேர்த்து வைத்துக் கொள்ளும். அதனால் அதன் சூட்டை வியர்க்க வைத்து வெளியேற்றாமல் (வியர்ப்பது நீருக்கு நஷ்டம்) இரவின் குளிரான காற்றை பயன்படுத்தி வெளியாக்கி வடுகிறது.

ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது. நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள் 8 சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 சதத்திற்கும் அதிகமான கழிவுகளும், குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம். (நம்முடையதாக இருந்தால் வேலையை நிறுத்தி இருக்கும்) மிகவும் குறைந்த அளவு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது ஒட்டகம். அதன் உடம்பில் புரோட்டின் என்ற சத்து குறைய ஆரம்பித்தால் சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்துக் கொண்டு அதை (Microbial Synthesis) புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றி விடுகிறது அதன் உள் உறுப்புகள்.

மற்ற பிராணிகளின் (மனிதன்) மலம் காய்வதற்கு குறைந்தபட்சமாக இரண்டு நாட்கள் வேவைப்படும். ஆனால் ஒட்டகத்தின் மலத்தை போட்ட ஒரு சில மணி நேரத்தில் பற்றவைத்து விடலாம், என்ற அளவிற்கு நீரே கலக்காமல் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது ஒட்டகம். பசுமலம், சிறுநீர் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது. ஆனால் ஒட்டகம் 1 லிட்டர் நீரை கூட இழப்பதில்லை.

நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியில் மேல் விட்டு நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். (நாம் 1-லிட்டர் காற்றை சுவாசித்து வெளியேற்றினோம் என்றால் 16 மில்லி கிராம் நீரை இழந்திருப்போம்) ஆனால் ஒட்டகத்தின் மூச்சில் ஈரம் மிகவும் குறைவாக இருக்கும். ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசே~ மூக்கமைப்பு தான் இதன் காரணம். அதன் மூக்கிற்குள் அமைந்திருக்கும் இடுக்கான திசு அமைப்புகள். அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில், மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது. மேலும் அதன் மூக்கிலிருந்து வழியும் சளியைக் கூட அதன் மூக்கின் அமைப்பு உதட்டின் மேல் வெடிப்பு வழியா மீண்டும் வாய்க்குள் அனுப்பிவிடுகிறது. பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு. 



படித்ததில் பிடித்தது

8 பிப்., 2021

கண்கள் அருட்கொடை


 اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَيْنَيْنِۙ‏

அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?
(அல்குர்ஆன் : 90:8)

ரெடினா (Retina) என்ற பகுதி கண்ணில் உள்ளே உள்ள ஒரு திரை போன்ற அடுக்கு ஆகும்.இதில் பார்வைகளுக்கு தேவையான நரம்பு செல்கள் உள்ளன. ஒரு மனிதனுடைய பார்வை திறனுக்கு ரெடினா என்ற உயிர் உள்ள போட்டோ பிலிம் இன்றியமையாத திசுஆகும். அல்லாஹ்தஆலா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் அருளிய காலங்களில் அறிவியலில் எந்த கண்டுபிடிப்புகள் கிடையாது. இவ்வாறு சூழ்நிலை இருந்த அக்காலத்தில் அல்லாஹ் தன் அருள் மறையில் திருகுர்ஆனில் சூராபாதிர் அத்தியாத்தில் வசனம் 8-ல் பார்வைகளை பற்றி இவ்வாறு கூறுகிறான். அதாவது;


أَفَمَن زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ فَرَآهُ حَسَنًا ۖ فَإِنَّ اللَّهَ يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۖ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ
حَسَرَاتٍ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا يَصْنَعُونَ
எவனுக்குத் தீயகாரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதனை அழகாகக் காண்கிறானோ அவனும், (எவன் தீயகாரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக்கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒரு போதும் ஆக மாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ்தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான். தான் விரும்பியவர்களை நேரானவழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உங்கள் உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு நீங்கள் கவலைப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(35:8)

 وَمَا يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ۙ‏
குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 35:19)

وَلَا الظُّلُمٰتُ وَلَا النُّوْرُۙ‏
(அவ்வாறே) இருளும் ஒளியும் (சமமாகா).
(அல்குர்ஆன் : 35:20)

وَلَا الظِّلُّ وَلَا الْحَـرُوْرُ‏
(அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா).
(அல்குர்ஆன் : 35:21)

وَمَا يَسْتَوِى الْاَحْيَآءُ وَلَا الْاَمْوَاتُ  اِنَّ اللّٰهَ يُسْمِعُ مَنْ يَّشَآءُ  وَمَاۤ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِى الْقُبُوْرِ‏
அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், மண்ணறைகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
(அல்குர்ஆன் : 35:22)

 

பெண் கரு யாரால்?

தனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால், மனைவியை குறை கூறும் ஆண்கள் அறிந்து கொள்ளவே, இந்த பதிவு.

 اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍ نَّبْتَلِيْهِ فَجَعَلْنٰهُ سَمِيْعًا بَصِيْرًا

(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
(அல்குர்ஆன் : 76:2)

இது சொல்லப்பட்டது அறிவியல் என்றால் என்ன என்று அறியாத 1400ஆண்டுகளுக்கு முன்னர்.

 கனடா நாட்டில் இருக்கும் Toronto நகரில் வாழும் மிகப்புகழ் பெற்ற கரு வளர்ச்சி நிபுணர் Dr.Keith L.Moore என்பவர் நயாகரா நீர் வீழ்ச்சி பகுதியில் நடை பெற்ற இஸ்லாமிய மருத்துவர் சபையின் 18 வது ஆண்டு கூட்டதில் ஓர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் டாக்டர் மூர் மனிதக் கரு வளர்ச்சி மற்றும் இனப் பெருக்கத்தைப் பற்றிப் பேசக்கூடிய புனித  திருக்குர்ஆனின் வசனங்களை விளக்கினார். ”

கருப்பயில் உள்ள சிசுவைப் பற்றிய  முதல் படம்  கி.பி.15 ம்  நூற்றாண்டில் வாழ்ந்த Leonardo da vinchi என்ற  இத்தாலியரால் வரையப்பட்டது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த Galen என்பவர் தன்னுடைய “கரு உருவாக்குதல்” என்ற நூலிலும் (Placenta), கருவை மூடியிருக்கும் மெல்லிய சவ்வைப்பற்றியும், விளக்கியிருந்தார். “மனிதக்கரு கருப்பையில் வளர்ந்தது என்பது  பற்றி கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவர்கள் அறிந்திருந்தனர்” என்பதர்கான சாத்தியக்கூறே கிடையாது. (ஏழாம் நூற்றாண்டில் தான் குர்ஆன் அருளப்பட்டது )

அப்படி இருக்கையில், குர்ஆன் இறங்கி மனிதக் கரு வளர்ச்சிப்பற்றி கூறக் கூடிய காலத்தில் வாழ்ந்த மருத்துவர்கள் மனிதக் கரு படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பதை அறிந்திருக்க சாத்தியமே இல்லை! இன்னும்  சொல்லப்போனால் கி.பி.15 ம் நூற்றாண்டு வரை “மனிதக் கரு படிப்படியாக  வளர்ச்சியடைகிறது” என்பதைப் பற்றி எவரும் பேசவோ நிரூபிக்கவோ இல்லை!

கி.பி.16ம் நூற்றாண்டுக்குப்பிறகு Microscope கருவியை Leewenhook என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட பிறகுதான் கோழிக் கருவின் ஆரம்ப நிலைகள் பற்றிய விளக்கங்கள் கிடைக்க ஆரம்பித்தன . அப்போது கூட மனிதக் கரு வளர்ச்சி பற்றி எவரும் விளக்கிடவில்லை!

கி.பி.20ம்  நூற்றாண்டில்  Streeter(1941)  என்பவரும்  முதன்  முதல்  கரு நிலைகளைப் பற்றிய முறையான விளக்கத்தை தந்தனர். அதற்குமுன் எவரும்  மனித கரு வளர்ச்சிப்பற்றிய முறையான விளக்கத்தை விளக்க இயலவில்லை! ஆனால் திருக்குர்ஆன் எழாம் நூற்றாண்டிலேயே மிகத் துல்லியமாக இந்த உண்மைகளை விளக்கி, இறை மறை என்பதற்கு சான்றாகத் நிகழ்கின்றது.

இப்போது மேற்கூறிய திருக்குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்!


திருக்குரானில் சொல்லப்படும் உண்மையை கனடா நாட்டில் டோரோன்ட்டோ கருவியல் ஆய்வு கழகம் ஆய்வு செய்து......

டாக்டர் கெய்த் L.மோரி (Dr.Keith L.Moore)

எல்லா பெண்களின்  குரோமஸோம்களும் X ஆகவே இருக்கும்.

ஆனால் ஆண்களின் குரோமஸோம்களில் மட்டும் X என்றும், Y என்றும் இரு வகையான குரோமஸோம்கள் இருக்கும்.

ஒரு ஆணின் விந்தில் 23வது குரோமஸோம்  X ஆக இருந்தால் அந்த கரு பெண்ணாக மாறும். X+X=Femal  (பெண் குழந்தை)

ஒரு ஆணின் விந்தில் 23வது குரோமஸோம் Y ஆக இருந்தால், அந்த கரு Y+X=Male  ((ஆண் குழந்தை)

என்ற அறிவியல் உண்மையை உலகுக்கு சொல்லி, 6ம் நூற்றாண்டில் திருக்குரானில் ஒரு குழந்தை ஆணாகவும், பெண்ணாகவும் உருவாக,

ஒரு ஆணின் விந்து துளி தான் காரணம் என்பதை சொல்வது தான் அறிவியல் உலகை வியக்க வைக்கிறது என்று தனது ஆய்வை எழுதி முடிக்கிறார். 

 உலகில் எவராலும் இந்த குர்ஆன் எனும் இறை வேதத்தை வெல்லமுடியாது. எவராலும் ஒரு குறையை சுட்டி காட்ட முடியாது.

இந்த வேதத்தை ஆய்வு செய்த 90% ஆய்வாளர்கள் யூதர்கள், கிறிஸ்தவர்கள், மற்றும் பல மதங்களை பின் பற்றும் சமூகத்தினர்.

உலக அரங்கில் எல்லா வேதங்களும் தோல்வி அடைந்து விட்டன ஆய்வில்.  திருக்குரானை தவிர.

உண்மையை சொல்வோம், உரக்க சொல்வோம்.

ஆண் உறுப்பு மேல் தோல் - ஓர் பார்வை

 இறைவ‌ன் ப‌டைப்பில் எதுவும் வீண் இல்லை!

ஆணுறுப்பின் மேல‌திக‌ தோலை வைக்காம‌லேயே இறைவ‌ன் ம‌னித‌னை ப‌டைத்திருக்க‌லாமே! என‌ ஒரு மாற்றுமத ச‌கோத‌ர‌ர் கேட்டார்...

அன்ப‌ரே!

இறைவ‌ன் உங்க‌ளை ப‌டைத்த‌ போது நிர்வாண‌மாக‌த்தானே ப‌டைத்தான். அப்ப‌டியென்றால் ஏன் உட‌லை ம‌றைத்து ஆடை அணிகிறீர்க‌ள்?  உங்க‌ளுக்கு அந்த‌ அறிவை கொடுத்த‌து யார்?

அது போன்றே த‌லை, அக்குள் மீசை, ம‌ர்ம‌ முடி என்ப‌து வ‌ள‌ரும் த‌ன்மை கொண்ட‌து. அத‌னை ஏன் வெட்டுகிறீர்க‌ள். அதை வ‌ள‌ராம‌ல் இறைவ‌ன் விட்டு விட‌லாமே என‌ நீங்க‌ள் ஏன் கேட்ப‌தில்லை.

இறைவ‌ன் ஆணுறுப்பிலும் பெண்ணுறுப்பிலும் மேல‌திக‌ தோலொன்றை வைத்து ப‌டைத்த‌மைக்குரிய‌ கார‌ண‌ காரிய‌த்தை ம‌னித‌ அறிவால் அறிந்து கொள்ள‌ முடியாது. இறைவ‌ன் ம‌கா ப‌டைப்பாள‌ன்.

ம‌னித‌ன‌து இத‌ய‌த்தில் ஏற்ப‌டும் அடைப்புக்கு பைபாஸ் செய்வ‌த‌ற்குரிய‌ மேல‌திக‌ ந‌ர‌ம்பை ந‌ம‌து காலில் இருந்தே வைத்திய‌ர்க‌ள் பெறுகிறார்க‌ள். ப‌ல‌ கால‌த்தின் முன்பு இவ்வெலும்பு அனாவ‌சிய‌மான‌தாக‌வே ம‌னித‌னுக்கு தெரிந்த‌து.

ஆக‌வே இறைவ‌ன் ப‌டைப்பில் எதுவும் வீண் இல்லை. ஆனாலும் அவ‌ற்றிலும் சில‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ன்மையை வைத்துள்ளான்.
 
ஆண் உறுப்பின் மேல‌திக‌ தோலை வைத்து இறைவ‌ன் ப‌டைத்த‌மைக்கு நாம் சில‌ கார‌ண‌ங்க‌ளை கூற‌ முடியும்.

ம‌னித‌ உட‌லில் வெளியே உள்ள‌ மிக‌வும் மெல்லிய‌ ப‌குதி அதுவாகும். குழ‌ந்தையாக‌ இருக்கும் போது அக்குழ‌ந்தை தாயின் க‌ருவ‌றையில் பாதுகாப்பாக‌ இருப்ப‌த‌ற்காக‌ அத‌ன் உறுப்புக்க‌ளை மூடி வைத்துள்ளான். க‌ண்ணுக்கு இமை கொடுத்து க‌ண்க‌ளை மூட‌வைத்தான்.

குழ‌ந்தை பிற‌ந்த‌ பின்தான் க‌ண் திற‌க்கிற‌து. க‌ண்ணை திற‌ந்து கொண்டே பிற‌ந்தால் என்ன‌ ந‌ட‌க்கும்? அழுக்குக‌ள் க‌ண்க‌ளுக்குள் செல்லும் என்ப‌தால் குழ‌ந்தையின் க‌ண்ணை மூடிய‌ப‌டி பிற‌க்க‌ வைத்த‌ இறைவ‌ன் மிக‌ப்பெரும் அறிவுடைய‌வ‌ன்.

வாய்க்குள் எதுவும் செல்ல‌ முடியாம‌ல் வாயையும் மூடிய‌வாறு ப‌டைத்தான். அடுத்த‌தாக‌ ம‌னித‌ உட‌லுக்குள் ஏதும் செல்லும் வ‌ழி ஆணுறுப்பாகும். அத‌னை தோலைக்கொண்டு மூட‌ வைத்தான்.

அந்த‌ தோல் இன்றி ப‌டைக்க‌ப்ப‌ட்டிருந்தால் இன்றைய‌ அவ‌ச‌ர‌ யுக‌த்தில் வைத்திய‌ர் தாயின் வ‌யிற்றை கீறி குழ‌ந்தையை எடுக்கும் போது வைத்திய‌ரின் அல்ல‌து ந‌ர்சின் ந‌க‌ம் அதில் கீறினால் அக்குழ‌ந்தையின் ஆணுறுப்பின் நிலை என்ன‌? இத‌னால்த்தான் அத‌னை மூடி வைத்து பிற‌க்க‌ வைத்தான்.

அத்துட‌ன் வைத்திய‌ர் ஒருவ‌ரின் க‌ருத்துப்ப‌டி கருப்பை உள்ளே குழந்தைக்குப் பாதுகாப்பாக இருக்கும் Amniotic fluid என்ற திரவம் காரமானது. அது சிசுவின் மிகவும் மென்மையான ஆண்குறியின் முற்பாகத்தைக் காயப்படுத்தி விடும். ஆகவே தான் அந்தப் பகுதி தோலினால் மூடப்பட்டு உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் அந்த முன்தோல் தேவைப்படுவதில்லை. ஆகவே அது அகற்றப்படுகின்றது.

குழ‌ந்தை பிற‌ந்த‌தும் அத‌ற்குரிய‌ ஆப‌த்துக்க‌ள் நீங்கி அக்குழ‌ந்தை இல‌குவாக‌ சிறு நீர் க‌ழித்து சுத்த‌மாக‌ இருக்கும் வ‌கையில் ஆணுறுப்பின் மெல்லிய‌ மூடு தோலை நீக்கும்ப‌டி இறைவ‌ன் வ‌ழி காட்டியுள்ளான்.

இறைவ‌னும் அவ‌ன் தூத‌ரும் சொன்ன‌த‌ற்காக‌ ஏன் எத‌ற்கு என்ற‌ கேள்வி கேட்காம‌ல் நாம் அத‌னை செய்கின்றோம். கார‌ண‌ம் இறைவ‌ன் சொன்ன‌தில் 100 வீத‌ம் உண்மை இருக்கும் என்ப‌தை ந‌ம்புப‌வ‌ன்தான் முஸ்லிம்.

மேற்ப‌டி தோலை நீக்குவ‌த‌ன் மூல‌ம் சிறு நீர் பிர‌ச்சினை வ‌ராம‌ல் இருப்ப‌தாக‌ வைத்திய‌ர்க‌ள் சொல்கின்ற‌ன‌ர்.
ஒருவ‌னின் ஆணுறுப்பின் மேல் தோல் நீக்க‌ப்ப‌ட்டால் அவ‌ன் சிறுநீர் க‌ழிக்கும் போது மிக‌ இல‌குவாக‌ க‌ழித்து விடுவான். அத்துட‌ன் சிறு நீர் அங்கு தேங்கி நிற்காது.

ஆனால் தோல் நீக்காத‌ ஆணுறுப்பினால் சிறு நீர் க‌ழிப்ப‌தாயின் அத‌னை இழுத்து மேலே  சுருட்டி சிறு நீர் க‌ழிக்க‌ வேண்டும். சிறு நீர் க‌ழித்து முடிந்த‌தும் அது தானாக‌ மூடிக்கொள்ளும். உள்ளே மிஞ்சிய‌ அசுத்த‌  சிறு நீர் உள்ளே இருந்து கொண்டிருக்கும்.

வ‌ய‌து வ‌ந்த‌ ஒருவ‌ரால் அத‌னை மேலே உருவி ஓர‌ள‌வு சுத்த‌ம் செய்ய‌ முடியும். ஆனால் குழ‌ந்தையால் சிறுவ‌ர்க‌ளால் முடியாது. இத‌னால்த்தான் குழ‌ந்தை ப‌ருவ‌த்திலேயே அத‌னை எடுத்து விடுகிறோம்.

இத்த‌கைய‌ ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளையும் அசுத்த‌த்தையும் க‌ருத்திற்கொண்டு இறைவ‌ன் சுன்ன‌த்து செய்து கொள்ளும்ப‌டி சொல்லியுள்ளான்.

சுன்ன‌த்து செய்யாத‌ பெரிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் சிறுநீர் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ வைத்திய‌சாலைக்கு சென்றால் முத‌லில் அந்த‌ மேல‌திக‌ தோலை வெட்டும்ப‌டியே வைத்திய‌ர்க‌ள் சொல்கிறார்க‌ள். ப‌ல‌ருக்கு இது ந‌ட‌ந்துள்ள‌து.

இன்னும் சில‌ருக்கு சிறு நீர் வெளியேற‌ பைப் போடுவ‌தாயின் தோலை நீக்காம‌ல் அத‌னை போடுவ‌து க‌ஷ்ட‌ம். வைத்திய‌சாலைக‌ளுக்கு சென்று பார்த்தால் இந்த‌ உண்மை புரியும்.

 ப‌ல‌ ந‌ன்மைக‌ள் உள்ள‌ சுன்ன‌த்து செய்துகொள்வ‌தை ம‌னித‌னுக்கு வ‌ழி காட்டிய‌ மார்க்கம் இஸ்லாமே ஆகும்.


 Thanks to: Tamil Dawah association

28 ஜன., 2021

நீதி துறையின் மொழி

 இந்திய சட்டதிட்டங்களின் முக்கிய வரைமுறைகள்
1 உச்சநீதிமன்றம் - Supreme Court
2 உயர்நீதிமன்றம் - High Court
3 நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Judicial Magistrate Court
4 மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் - District Munsif Court
5 தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Chief Judicial Magistrate Court
6 சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Special Judicial Magistrate Court
7 அமர்வு நீதிமன்றம் - Sessions Court
8 உரிமையியல் வழக்குகள் - Civil Cases
9 குற்றவியல் வழக்குகள் - Criminal Cases
10 எதிர்வாதி / எதிர்மனுதாரர் / பிரதிவாதி - Defendant
11 வாதி / மனுதாரர் /புகார்தாரர் - Plaintiff / Complainant /Petitioner
12. குற்றஞ்சாட்டப்பட்டவர் - Accused
13 பாதிக்கப்பட்ட தரப்பு - Adverse Party
14 கட்சிக்காரர் - Client
15 சங்கதி - Fact
16 மறு விசாரனை - Re Examination
17 ஆபத்தான கேள்வி - Risky Question
18 தடாலடி பதில் - Fatal Reply
19 குறுக்கு விசாரனை - Cross Examination
20 உண்மை உறுதிமொழி ஆவணம் - Affidavit
21 குற்றவாளி - Offender
22 குற்றச்சாட்டு - Charge
23 மெய்ப்பிப்பு - Proof
24 சொத்து - Property
25 குற்றம் - Offense
26 கட்டைவிரல் ரேகைப்பதிவு - Thumb Impression
27 திருட்டு வழக்கு - Theft Case
28 திருட்டுப் பொருள் - Stolen Property
29 பைத்தியம் - Insanity
30 சான்றொப்பம் - Attestation
31 சச்சரவு - Affray
32 தீர்ப்பு - Sentence
33 அவசரத்தன்மை மனு - Emergent Petition
34 கீழமை நீதிமன்றம் - Lower court
35 பரிகாரம் - Remedy
36 உறுத்துக் கட்டளை - Injection Order
37 நிரந்தர உறுத்துக் கட்டளை - Permanent Injection Order
38 வழக்கின் மதிப்பு - Suit Valuation
39 வழக்குரை - Plaint
40 வழக்குரையில் திருத்தம் - Amendment in Plaint
41 பண வழக்கு - Money Suit
42 அவதூறு வழக்கு - Defamation Suit
43 வறியவர் வழக்கு - Pauper Suit
44 எதிர்வுரை - Counter
45 எழுவினாக்கள் (சிக்கல்) - Issues
46 மேல்முறையீடு -Appeal
47 வரைமொழி வாதுரை - Written Argument
48 குற்றப்பத்திரிக்கை - Charge Sheet
49 தற்காலிக நிறுத்த மனு - Caveat petition
50 கோருரிமை மனு - Claim Petition
51 தடை நீக்கம் - Removal of obstruction
52 வழக்கில் சமரசம் செய்து கொள்ளல் - Compromise of suit
53 எதிர் மேல்முறையீடு - Cross Appeal
54 எதிர் மறுப்பு - Cross-objection
55 வறியவர்களால் தொடுக்கப்படும் வழக்குகள் - Suits by Indigent Persons
56 நீதிமன்றக் காப்பாளர் - Court Guardian
57 ஒத்தி வைத்தல் - Adjournment
58 சாட்சி - Witness..

#ஓர்_சட்ட_தகவல்_பகிர்வு

7 நவ., 2020

நம் கண்கள்


 பார்வை இறைவன் கொடுத்த மாபெரும் வெகுமதி. எதையும் மிகத் துல்லியமாகப் பார்த்து அறிந்துகொள்ள கண்களை அல்லாஹ் படைத்துள்ளான். இன்றைக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட ஒளிப்படக் கருவியின் (கேமரா) அதிகப்பட்ச துல்லிய அளவு (மெகா பிக்சல்) 10 முதல் 15 வரை ஆகும். ஆனால் அல்லாஹ் வழங்கியுள்ள கண்களின் துல்லிய அளவு 576 ஆகும். ஒளிப்படக் கருவியில் அகப்படாத நுண்ணிய பொருள்களையெல்லாம் நம் கண்கள் பார்த்துவிடும். அவ்வளவு கலைநுட்பத்தோடு அல்லாஹ் நம் கண்களைப் படைத்துள்ளான்.

பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அல்குர்ஆன்-(90:8)

பின்னர், (படைப்பாகிய) அதனைச் செப்பனிட்டுத்தன்னுடைய “ரூஹை” அதில்புகுத்தி (உங்களைஉற்பத்திசெய்கிறான்.) உங்களுக்குக் காதுகள், கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகுசிலரே! அல்குர்ஆன்-(32:9)

(பின்னர் ஆண், பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம் தாம் மனிதனை படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காகவே, செவியுடையவனாகவும் பார்வையுடையவனாகவும் அவனை ஆக்கினோம்.
அல்குர்ஆன்- (76:2)

29 டிச., 2018

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள் !


சுகர்னு docter கிட்ட போராங்க ..
அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.

ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார்.

அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார்.

அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.

அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்.

காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.

இதுல எந்த இடத்துலயும் அவன் Doctor ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.

1.       தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல.

2.       மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே  போகுதேனு அவன் யோசிக்கல.

3.       ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை.

4.       வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.

TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.

வீட்டுல இருக்கிற வெந்தயத்தை, காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.

பாடையில போகற வரைக்கும் அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.

👆👆👆 இந்த பதிவு நகைசுவையாகவும், யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.

மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.

அதனால் மனதுக்கும், உடலுக்குமான, முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..

              வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.

தொண்டை வரைக்கும்  அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.

1.       உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

2.       இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

3.       இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

4.       நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

5.       ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

6.       உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

7.       வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

8.       உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

9.       மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

10.   அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

11.   நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

12.   சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

13.   உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumor) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

ஆரோக்யம் அனுபவியுங்கள்.......!.