8 பிப்., 2021

பெண் கரு யாரால்?

தனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால், மனைவியை குறை கூறும் ஆண்கள் அறிந்து கொள்ளவே, இந்த பதிவு.

 اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍ نَّبْتَلِيْهِ فَجَعَلْنٰهُ سَمِيْعًا بَصِيْرًا

(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
(அல்குர்ஆன் : 76:2)

இது சொல்லப்பட்டது அறிவியல் என்றால் என்ன என்று அறியாத 1400ஆண்டுகளுக்கு முன்னர்.

 கனடா நாட்டில் இருக்கும் Toronto நகரில் வாழும் மிகப்புகழ் பெற்ற கரு வளர்ச்சி நிபுணர் Dr.Keith L.Moore என்பவர் நயாகரா நீர் வீழ்ச்சி பகுதியில் நடை பெற்ற இஸ்லாமிய மருத்துவர் சபையின் 18 வது ஆண்டு கூட்டதில் ஓர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் டாக்டர் மூர் மனிதக் கரு வளர்ச்சி மற்றும் இனப் பெருக்கத்தைப் பற்றிப் பேசக்கூடிய புனித  திருக்குர்ஆனின் வசனங்களை விளக்கினார். ”

கருப்பயில் உள்ள சிசுவைப் பற்றிய  முதல் படம்  கி.பி.15 ம்  நூற்றாண்டில் வாழ்ந்த Leonardo da vinchi என்ற  இத்தாலியரால் வரையப்பட்டது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த Galen என்பவர் தன்னுடைய “கரு உருவாக்குதல்” என்ற நூலிலும் (Placenta), கருவை மூடியிருக்கும் மெல்லிய சவ்வைப்பற்றியும், விளக்கியிருந்தார். “மனிதக்கரு கருப்பையில் வளர்ந்தது என்பது  பற்றி கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவர்கள் அறிந்திருந்தனர்” என்பதர்கான சாத்தியக்கூறே கிடையாது. (ஏழாம் நூற்றாண்டில் தான் குர்ஆன் அருளப்பட்டது )

அப்படி இருக்கையில், குர்ஆன் இறங்கி மனிதக் கரு வளர்ச்சிப்பற்றி கூறக் கூடிய காலத்தில் வாழ்ந்த மருத்துவர்கள் மனிதக் கரு படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பதை அறிந்திருக்க சாத்தியமே இல்லை! இன்னும்  சொல்லப்போனால் கி.பி.15 ம் நூற்றாண்டு வரை “மனிதக் கரு படிப்படியாக  வளர்ச்சியடைகிறது” என்பதைப் பற்றி எவரும் பேசவோ நிரூபிக்கவோ இல்லை!

கி.பி.16ம் நூற்றாண்டுக்குப்பிறகு Microscope கருவியை Leewenhook என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட பிறகுதான் கோழிக் கருவின் ஆரம்ப நிலைகள் பற்றிய விளக்கங்கள் கிடைக்க ஆரம்பித்தன . அப்போது கூட மனிதக் கரு வளர்ச்சி பற்றி எவரும் விளக்கிடவில்லை!

கி.பி.20ம்  நூற்றாண்டில்  Streeter(1941)  என்பவரும்  முதன்  முதல்  கரு நிலைகளைப் பற்றிய முறையான விளக்கத்தை தந்தனர். அதற்குமுன் எவரும்  மனித கரு வளர்ச்சிப்பற்றிய முறையான விளக்கத்தை விளக்க இயலவில்லை! ஆனால் திருக்குர்ஆன் எழாம் நூற்றாண்டிலேயே மிகத் துல்லியமாக இந்த உண்மைகளை விளக்கி, இறை மறை என்பதற்கு சான்றாகத் நிகழ்கின்றது.

இப்போது மேற்கூறிய திருக்குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்!


திருக்குரானில் சொல்லப்படும் உண்மையை கனடா நாட்டில் டோரோன்ட்டோ கருவியல் ஆய்வு கழகம் ஆய்வு செய்து......

டாக்டர் கெய்த் L.மோரி (Dr.Keith L.Moore)

எல்லா பெண்களின்  குரோமஸோம்களும் X ஆகவே இருக்கும்.

ஆனால் ஆண்களின் குரோமஸோம்களில் மட்டும் X என்றும், Y என்றும் இரு வகையான குரோமஸோம்கள் இருக்கும்.

ஒரு ஆணின் விந்தில் 23வது குரோமஸோம்  X ஆக இருந்தால் அந்த கரு பெண்ணாக மாறும். X+X=Femal  (பெண் குழந்தை)

ஒரு ஆணின் விந்தில் 23வது குரோமஸோம் Y ஆக இருந்தால், அந்த கரு Y+X=Male  ((ஆண் குழந்தை)

என்ற அறிவியல் உண்மையை உலகுக்கு சொல்லி, 6ம் நூற்றாண்டில் திருக்குரானில் ஒரு குழந்தை ஆணாகவும், பெண்ணாகவும் உருவாக,

ஒரு ஆணின் விந்து துளி தான் காரணம் என்பதை சொல்வது தான் அறிவியல் உலகை வியக்க வைக்கிறது என்று தனது ஆய்வை எழுதி முடிக்கிறார். 

 உலகில் எவராலும் இந்த குர்ஆன் எனும் இறை வேதத்தை வெல்லமுடியாது. எவராலும் ஒரு குறையை சுட்டி காட்ட முடியாது.

இந்த வேதத்தை ஆய்வு செய்த 90% ஆய்வாளர்கள் யூதர்கள், கிறிஸ்தவர்கள், மற்றும் பல மதங்களை பின் பற்றும் சமூகத்தினர்.

உலக அரங்கில் எல்லா வேதங்களும் தோல்வி அடைந்து விட்டன ஆய்வில்.  திருக்குரானை தவிர.

உண்மையை சொல்வோம், உரக்க சொல்வோம்.