24 ஆக., 2013

சரியான நேரத்தில்.......??

சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் ...!

1.
விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.

2.
உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.

3.
குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.

4.
தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...!

அழகிய முன்மாதிரி


21 ஆக., 2013

"ஸ்டாக் தீந்து போச்சு"


ரேஷன் கடையில் "ஸ்டாக் தீந்து போச்சு"ன்னு சொல்றாங்களா? இதோ நீங்கள் செய்யவேண்டியது! !!

உங்கள் ரேஷன் கடையில் ஏதோ ஒரு பொருளை நீங்கள் வாங்கச் செல்கிறீர்கள், ரேஷன் கடை ஊழியர் உங்களிடம் நீங்கள் கேட்கும் பொருளின் ஸ்டாக் இல்லை, தீந்து போச்சு, இன்னும் வரல்ல என்ற பதில்களை கூறுகிறார்களா? உண்மை நிலவரத்தை அறிய "உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை" ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்க மொபைல் போனை எடுங்க அதுல கீழ சொல்ற நம்பருக்கு கீழ வர்ற மாதிரி எஸ்.எம்.எஸ். அனுப்புங்க அவ்வளவுதான் மேட்டர் ஓவர்:

எஸ்.எம்.எஸ். அனுப்பவேண்டிய தொலைபேசி எண்: 9789006492, 9789005450, இந்த 2 நம்பர்ல ஏதாவது ஒரு நம்பருக்கு கீழ வர்ற மாதிரி எஸ்.எம்.எஸ். பண்ணுங்க:

[PDS] ஒரு ஸ்பேஸ் விடுங்க பிறகு [மாவட்டக்குறியீடு] அப்பறம் ஒரு ஸ்பேஸ் விடுங்க பிறகு [கடை எண்]. இதை டைப் செய்து அந்த தொலைபேசி எண்ணுக்கு அனுப்புங்க. மாலை 5 மணிக்குள்ள அனுப்பினீங்கன்னா உடனே பலன் கிடைக்கும்.

மாவட்ட எண், கடை எண் உங்கள் ரேஷன் கார்டிலேயே இருக்கும். (படத்தைப் பார்க்கவும்)

17 ஆக., 2013

share it........?????



     ரூபாய் நோட்டுக்களில் எழுதுவதானால் வருடத்திற்கு 2638 கோடி ருபாய் இழப்பு இந்திய அரசாங்கத்திற்கு ஏற்படுகிறது. இப்படி எழுதப்படும் ரூபாய் நோட்டுகள் பண பரிமாற்றத்துக்கு பயன்படாது ,உதாரனமாக நீங்கள் ATM களில் பணம் எடுக்கும் போது இந்த மாதிரியான நோட்டுகளை கண்டுபிடிக்க இயலாது .

DO SPREAD IT .. SHARE IT... INFORM IT .. ITS NEEDED ..Its our COUNTRY...
Why do some people love writing on the currency notes , any Idea ....???

RBI guidelines- Public News 4 a true Indian: Bcoz of written Rupee note, Indian Govt. has Rs.2638 Cr loss per year..plz don't write anything on Rupee Note bcoz they can't be used for std transactions..e.g u can't find written notes in ATM...plz paste it on ur status so that everyone become aware of the fact..

16 ஆக., 2013

Youtube வீடியோக்களை Download செய்வது எப்படி?...

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல்Youtube வீடியோக்களை Download செய்வது எப்படி?...

இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் விரும்பிபயன்படுத்...துவது YouTube தளத்ததைத்தான் இதில் எண்னற்ற வீடியோக்கள் உள்ளன அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவைபார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள் வீ டியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி YouTube தளத்தில் இல்லை பெரும்பாலனவர்கள் சில Down loader மென்பொருட்களை பயன் படுத்தி டவுன்லோட் செய்கின்றனர்.

சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் YouTube வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1.முதலில் YouTube தளத்துக்கு சென்று உங்களுக்கு விரும்பிய வீடியோ ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள்

2. இப்பொழுது நீங்கள் ஓபன் செய்த வீடியோ Link-இல் சின்ன மாற்றம் செய்ய வேண்டும் உதாரணத்துக்கு நீங்கள் ஓபன் செய்த வீடியோவின் Link இவ்வாறு இருக்கும் : www.youtube.com/watch?v=9DXqx7y5 ME0இதில் நீங்கள் YouTube.com இற்க்கு முன்னால் இரண்டு SS சேர்க்கவேண்டும்
உதாரணத்திற்கு www.ssyoutube.com/watch?v=9DXqx7y5 ME0இதபோல் இரண்டு SS சேர்த்து Enter ஐ அழுத்தவும்

3.இப்பொழுது http://en.savefrom.net/என்ற தளம் ஓபன் ஆகும் அதில் நீங்கள் Open செய்த வீடியோவின் Format மற்றும் Quality ஐ காண்பிக்கும் உங்களுக்கு தேவையான வீடியோ Format-இல் கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்அவ்வளவுதான்
ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்
-
http://www.youtube.com/watch?v=2AEHaQyJ ymw#at=81



[or]

http://en.savefrom.net/  இந்த வலை தளத்தை ஓபன் செய்து கொண்டு, நம் பார்த்துக்கொண்டிருக்கும், வீடியோ லிங்க் யை காப்பி செய்து, இந்த வலை தளத்தில் டவுன்லோட் பாரில், பேஸ்ட் செய்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

12 ஆக., 2013

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ???

பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். “ஐந்து பழம் பத்து ரூபாய்” என்று கூறினார். யாரும் பழம் வாங்க முன்வரவில்லை. சிரமப்பட்டு கீழே இறங்கினார்.

அடுத்து, இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். “ஆறு பழம் பத்து ரூபாய்!” என்றான் அவனுக்கு நல்ல விற்பனை! மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும் “ஐந்து பழம் பத்து ரூபாய்!” என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே கீழே இறங்கிவிட்டார். அடுத்து, “ஆறு பழம் பத்து ரூபாய்!” என்று கூவியபடி அதே பேருந்தில் ஏறிய இளைஞன் ஏகத்துக்கும் விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகர் இந்தக் காட்சியைப் பார்த்தார். முதியவரை அழைத்து, “இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறுபழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனையாகும்!” என்றார்.

முதியவர் சிரித்தபடி சொன்னார்: “அவன் என் மகன்தான் இந்தப்பழமும் அவனதுதான், “ஆறு பழம் பத்து ரூபாய்” என்று விற்றால்.... சட்டென்று வாங்குவதற்கு நம்ம சனத்துக்கு மனசு வராது அதனால் நான் “ஐந்து பழம் பத்து ரூபாய் என்று கூறிவிட்டுப் போவேன். அப்புறமா, “ஆறு பழம் பத்து ரூபாய்” என்று அவன் வந்து சொன்னதும்...... அடடா லாபமா இருக்கேன்னு சனங்க சட்டென்று வாங்குவாங்க.” என்றார்.

தேங்காய் _ சத்துப் பட்டியல்!

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்...

* தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.

* சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகினால், மாமிசம் உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும்.

* அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந்துள்ளது. 100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது.

* 'லாவுரிக் ஆசிட்' எனும் கொழுப்பு அமிலம் தேங்காயில் உள்ளது. இது ரத்தத்தில் உடலுக்குஅவசியமான எச்.டி.எல். வகை கொழுப்புகளை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்கிறது. எச்.டி.எல். கொழுப்புகள் ரத்தத்தைஎடுத்துச் செல்லும் கரோனரி தமனியில் தடை ஏற்படுவதை தடுக்கும் ஆற்றலுடையது.

* தேங்காய் தண்ணீர், கோடைக்கு உகந்த புத்துணர்ச்சி பானமாகும். இதில் ஒற்றைச் சர்க்கரை, எலக்ட்ரோலைட்டுகள், தாது உப்புக்கள் மற்றும் சைட்டோகைனைன் போன்ற பல உடல் செயற்காரணிகள் உள்ளன. பாஸ்படேஸ், கேட்டலேஸ், டீகைட்ரோஜனேஸ், பெராக்சைடேஸ், பாலிமரேஸ் போன்ற நொதிக் காரணிகளும் தேங்காய் நீரில் உள்ளன. இவை ஜீரணம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில்பங்கெடுக்கும் நொதிகளாகும்.

* தேங்காய் எண்ணை சமைப்பதிலும், கூந்தல் உறுதிக்கும், வேறுபல மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

* தேங்காய் நீரில் உள்ள சைட்டோகைனைன், முது மையை தடுக்கும் ஆற்றல் கொண்டதாக கண்டறியப்பட்டுள ்ளது. மேலும் ரத்தக் கட்டிகள் மற்றும் புற்றுக் கட்டிகளுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டது.

* தேங்காய் பருப்பில் தாமிரம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் உள்ளன.

* பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான போலேட், ரிபோ பிளேவின், நியாசின், தயாமின், பைரிடாக்சின் போன்ற வையும் சிறந்த அளவில் காணப்படுகிறது. இவை உடல் உள்ளுறுப்புகள் இயக்கத்திற்கும் , உடல் புத்துணர்ச்சிக் கும் அவசியமானவையாகு
ம்


* தேங்காய் பருப்பை அப்படியே சாப்பிடலாம்.

* வாழை, பலா, தேன், சர்க்கரை ஆகியவற்றுடன் தேங்காயை பூவாகத் துருவி கலந்து புதுருசியில் சுவைக்கலாம்.

நன்றி:மருத்துவ-தகவல்

11 ஆக., 2013

இந்திய பொருளாதாரம்..........?



நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?

சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறை கூறுகிறோம்.

... விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...
கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 39.

இன்று 1 US $ = ரூ 61.09

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???

அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...

ஆனால் விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...

இதை தடுக்கவே முடியாதா...???

முடியும்.

நாம் மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...

அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 ) அந்நிய நாட்டு பொருளாதாரத்தை உயர்த்த முயற்சிக்காமல், இந்திய பொருளாதாரம் உயர, நாமும் சிறு முயற்சி எடுப்போமா?

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--

COLD DRINKS:-
வாங்கவும்:-
DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-
INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-
வாங்கவும்:-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-
INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

TOOTH PASTE:-
வாங்கவும்:-
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-
வாங்கவும்:-
USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-
வாங்கவும்:-
USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

BLADE:-
வாங்கவும்:-
USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

TALCUM POWDER:-
வாங்கவும்:-
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

MILK POWDER:-
வாங்கவும்:-
USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

SHAMPOO:-
வாங்கவும்:-
USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

MOBILE CONNECTIONS:-
வாங்கவும்:-
USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-
INSTEAD OF VODAFONE.

Food Items:-
வாங்கவும்:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-
INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

இந்தியனாக இருப்போம்... இந்திய பொருள்களையே வாங்குவோம்.

கீழே எந்த எந்த பொருள் எந்த நிறுவனம் தயாரிக்குது என்று பாருங்கள்...

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம்



"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

(http://cmcell.tn.gov.in/register.php

என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

(http://cmcell.tn.gov.in/login.php)

தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....

Chief Minister's Special Cell , Secretariat, Chennai - 600 009.

Phone Number : 044 - 2567 1764

Fax Number : 044 - 2567 6929

E-Mail : cmcell@tn.gov.in

இரத்த தானம் யார் செய்யக்கூடாது?


வாயுத் தொல்லையா?

வாயுத் தொல்லை என்பது பொதுவாக 35 வயதைக் கடந்த அனைத்து தரப்பினருக்குமே இருக்கக்கூடிய ஒரு இன்னல் எனலாம்.

ஒரு சிலருக்கு சிறிய அளவு உருளைக்கிழங்கை சாப்பிட்டாலே இந்த வாயுத் தொல்லை ஏற்படும். வேறு சிலருக்கு பருப்பு மற்றும் அவற்றில் செய்யப்படும் பதார்த்தங்களில் வாயுத் தொந்தரவு உருவாகும்.

வாயுத் தொல்லைக்கு ஏற்ற அருமருந்து வெள்ளைப் பூண்டு.

முடிந்தால் அப்படியே 4 பல் பூண்டை தோலுரித்து சாப்பிடலாம் அல்லது அடுப்பில் வைத்து கருகும் அளவுக்கு சுட்டு, பின்னர் அதன் தோலை உரித்து பாலுடன் சேர்த்து உண்ணலாம்.

வாயுத்தொல்லை இருப்பவர்கள் பூண்டு சாப்பிட்ட உடனேயே அதில் இருந்து விடுபட்டதை உணரமுடியும். வேண்டுமானால் பூண்டு காரம் போக, மோர் அருந்தலாம்.

பொதுவாக உணவுக்குப் பயன்படுத்தும் குழம்பில் வெள்ளைப்பூண்டை அன்றாடம் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

பெண்கள் குழந்தை பெற்ற பின் அதிகளவு சோர்வு இருக்கும் என்பதால், வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் பூண்டு குழம்பை சாதத்துடன் கொடுப்பார்கள். தவிர தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பூண்டு மிகவும் சிறந்ததாகும்.

எனவே பூண்டை அன்றாடம் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.

1 ஆக., 2013

மருத்துவம் பழகலாம் வாங்க.

பாரம்பரிய இயற்கை மருத்துவம்..!

1.மாதுளம்பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும்.

2.ஆஸ்துமா குணமாக வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வர நீங்கும்.

3.வாழைபட்டையை தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து ஓரிரு துளிகள் விட காதுவலி குணமாகும்.

4.கடற்சங்கை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவி வர இரண்டு நாளில் பருக்கள் மறையும்.

5.வண்டு,பூச்சி கடிக்கு வெள்ளைபூண்டை அரைத்து கடிவாயில் கட்ட விஷம் முறியும்.

6.புதிய ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

7.சப்பாத்தி பூ இலையை கட்டிகள் மீது கட்டி வந்தால் உடைந்த கட்டிகள் குணமாகும்.

8.தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு வலி குணமாகும்.

9.அகத்தி கீரை சாறு,அகத்தி கீரை பூ சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட்டு வர தொடர் தும்மல் நீங்கும்.

10.மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.