அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை
நினைவு கூர்ந்து போற்றுவோரைத்
தேடிய வண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர்.
அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால், “உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்” என்று அவர்கள் (தம்மில்) ஒருவரையொருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகின்றவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர்.
அப்போது அவ்வானவர்களிடம்,
அவர்களது இறைவன், “என் அடியார்கள் என்ன
கூறுகின்றனர்?” என்று
கேட்கின்றான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவான்.
“அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்” என்று வானவர்கள் கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், “அவர்கள் என்னைப் பார்த்திருக்கின்றார்களா?” என்று கேட்பான்.
அதற்கு இறைவன், “அவர்கள் என்னைப் பார்த்திருக்கின்றார்களா?” என்று கேட்பான்.
அதற்கு வானவர்கள், “இல்லை. உன் மீது
ஆணையாக அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை” என்று பதிலளிப்பார்கள்.
“என்னைப்
பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?” என்று கேட்பான்.
அதற்கு வானவர்கள், “உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள். இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப்
புகழ்ந்து துதிப்பார்கள்” என்று பதிலளிப்பார்கள்.
அதற்கு இறைவன், “அவர்கள் என்னிடம் என்ன வேண்டுகின்றார்கள்” என்று கேட்பான்.
அதற்கு இறைவன், “அவர்கள் என்னிடம் என்ன வேண்டுகின்றார்கள்” என்று கேட்பான்.
“அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தை கேட்கின்றனர்” என்று வானவர்கள் கூறுவார்கள்.
“அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?” என்று இறைவன் கேட்பான்.
“இல்லை. உன்
மீது ஆணையாக அதிபதியே, அதை அவர்கள் பார்த்ததில்லை” என்று வானவர்கள் கூறுவார்கள்.
அதற்கு இறைவன் “அவ்வாறாயின்
அதைப் பார்த்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்” என்று கேட்பான்.
“சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசை கொண்டு அதிக வேட்கையுடன்
தீவிரமாக அதைத் தேடுவார்கள்” என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்.
”அவர்கள் எதிலிருந்து பாதுகாப்பு தேடுவார்கள்?” என்று இறைவன் வினவுவான்.
”அவர்கள் எதிலிருந்து பாதுகாப்பு தேடுவார்கள்?” என்று இறைவன் வினவுவான்.
“நரகத்திலிருந்து” என்று வானவர்கள் பதிலளிப்பர்.
“அதனை அவர்கள் பார்த்திருக்கின்றார்களா?” என்று இறைவன் கேட்பான்.
வானவர்கள், “இல்லை, உன் மீது ஆணையாக அதை அவர்கள் பார்த்ததில்லை” என்று கூறுவர்.
வானவர்கள், “இல்லை, உன் மீது ஆணையாக அதை அவர்கள் பார்த்ததில்லை” என்று கூறுவர்.
அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்களின் நிலை என்னவாயிருக்கும்?” என்று கேட்பான்.
”நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை
மிகவும் அஞ்சுபவர்களாகவும்
இருப்பார்கள்” என்று
வானவர்கள் கூறுவர்.
அப்போது இறைவன், “ஆகவே அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை
நான் சாட்சிகளாக ஆக்குகின்றேன்” என்று கூறுவான்.
அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், “இன்ன மனிதன் உன்னைப் போற்றுகின்ற அவர்களில் உள்ளவன் அல்லன்.
அவன் ஏதோ ஒரு
தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்” என்று கூறுவார். அதற்கு இறைவன், “அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து
அமர்ந்த ஒருவன் அவர்களால்
பாக்கியமற்றவனாக ஆக மாட்டான்” என்று கூறுவான்.
அறிவிப்பவர் – அபூஹுரைரா (ரலி),
நூல் – புகாரி 6408
அறிவிப்பவர் – அபூஹுரைரா (ரலி),
நூல் – புகாரி 6408