22 மார்., 2014

பாங்கிற்குப் பதில்

முஅத்தின் (பாங்கு சொல்பவர்) 
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” 
(அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னால் நீங்களும் 
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்என்று சொல்லுங்கள்.
பின்பு அவர்
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்” 
(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதிமொழிகிறேன்) என்று சொன்னால் நீங்களும் 
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்”  என்று சொல்லுங்கள்.
பின்பு அவர்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” 
(முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிமொழிகிறேன்) என்று சொன்னால் நீங்களும் 
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்என்று சொல்லுங்கள்.
பின்பு அவர் 
ஹய்ய அலஸ் ஸலாஹ்” 
(தொழுகையின் பக்கம் வாருங்கள்) என்று சொன்னால் நீங்கள் 
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” 
(அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள்.
பின்பு அவர் 
ஹய்ய அலல் ஃபலாஹ்” 
(வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று சொன்னால் நீங்கள்
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” 
(அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள்.

பின்பு அவர் 
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” 
(அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னால் நீங்களும் 
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்என்று சொல்லுங்கள்.

பின்பு அவர் 
லா இலாஹ இல்லல்லாஹ்” 
(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை) என்று சொன்னால் நீங்களும் 
லா இலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை) என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள்.

உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)  _  நூல்: முஸ்லிம் 629

பாங்கிற்குப் பதில் சொன்ன பின் ஸலவாத் சொல்ல வேண்டும்

"
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். 
பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். 
பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்
அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். 
எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ் விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 628
ஸலவாத் சொன்ன பின்
வஸீலா என்னும் சொர்க்கத்திலுள்ள உயர் பதவி
நபி (ஸல்) அவர்களுக்கு கிடைக்க வேண்டி அல்லாஹ்விடம் கேட்கும் முறை

அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம (த்)தி ஆ( த்) தி முஹம்மதனில் வஸீல(த்)த வல்ஃபழீல(த்)த வப்அஸ்ஹு ம(க்)காம(ன்)ம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்
(பொருள்: ' முழுமையான இந்த அழைப்புக்குரிய இறைவனே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும், சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக !')
என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவருக்கு மறுமையில் நாளில் என்னுடைய பரிந்துரை அவசியம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  _  நூல்: புகாரி 614

அல்லது 
பின்வரும் துஆவையும் ஓதலாம்..

முஅத்தினின் (பாங்கு சொல்பவர்) அறிவிப்பை...
 (பாங்கு) கேட்கக்கூடியவர் (அதற்குப் பதில் கூறி, பாங்கு முடிந்த பின்பு)
அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன்” 
(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்) என்று கூறினால் அவருடைய (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)   _  நூல்: முஸ்லிம் 630