பிரண்டை சூரணம்.
(1) தேவையான அளவு பிரண்டை வாங்கி வந்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் மோரில் ஊறப் போடவும்.
மறுநாள் காலை மோரை வடித்து கொட்டி விட்டு பிரண்டையை மட்டும் வெயிலில் காய வைக்கவும் .
ஒவ்வொரு நாளும் புதிய மோர் பயன்படுத்தவும் .
இவ்வாறு ஏழு நாட்கள் செய்த பின்
மோரில் ஊற வைக்காமல் பிரண்டையை மட்டும் நன்கு வெயிலில்
காய வைத்து நன்கு காய்ந்த பின் எடுத்து அரைத்துத் தூளாக எடுக்கவும்.
2. சுக்குத் தூள்
தேவையான அளவு சுக்கு எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து தூள் செய்து கொள்ளவும்
3. நாட்டு சர்க்கரை கடைகளில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளவும்.
பிரண்டை
சுத்தி செய்த
சுக்குத் தூள்
நாட்டு சர்க்கரை
ஆகிய மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்துக் கலந்து ஒரு பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
இந்த சூரணத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து
நாள்தோறும் காலை இரவு குடித்து வர
மூட்டு வலி வீக்கம்
எலும்பு தேய்மானம்
இடுப்பு எலும்பு வலி
தோள்பட்டை வலி
போன்ற நோய்கள் படிப்படியாகக் குணமாகும்.
குறிப்பு
பிரண்டை சூரணமும்
சுத்தி செய்த சுக்குத் தூளும் நாட்டு மருந்துக் கடைகளில் தயார் நிலையில் கிடைக்க வாய்ப்புள்ளது.
அப்படிக் கிடைத்தால் மூன்று பொருட்களையும் சம அளவு நாட்டு மருந்துக் கடைகளில் இருந்து வாங்கி வந்து ஒன்றாக சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்......