اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَيْنَيْنِۙ
அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?
(அல்குர்ஆன் : 90:8)
ரெடினா (Retina) என்ற பகுதி கண்ணில் உள்ளே உள்ள ஒரு திரை போன்ற அடுக்கு
ஆகும்.இதில் பார்வைகளுக்கு தேவையான நரம்பு செல்கள் உள்ளன. ஒரு மனிதனுடைய
பார்வை திறனுக்கு ரெடினா என்ற உயிர் உள்ள போட்டோ பிலிம் இன்றியமையாத
திசுஆகும். அல்லாஹ்தஆலா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் அருளிய
காலங்களில் அறிவியலில் எந்த கண்டுபிடிப்புகள் கிடையாது. இவ்வாறு சூழ்நிலை
இருந்த அக்காலத்தில் அல்லாஹ் தன் அருள் மறையில் திருகுர்ஆனில் சூராபாதிர்
அத்தியாத்தில் வசனம் 8-ல் பார்வைகளை பற்றி இவ்வாறு கூறுகிறான். அதாவது;
أَفَمَن
زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ فَرَآهُ حَسَنًا ۖ فَإِنَّ اللَّهَ يُضِلُّ
مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۖ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ
حَسَرَاتٍ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا يَصْنَعُونَ
எவனுக்குத்
தீயகாரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதனை அழகாகக் காண்கிறானோ
அவனும், (எவன் தீயகாரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து
விலகிக்கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒரு போதும் ஆக மாட்டார்கள்)
நிச்சயமாக அல்லாஹ்தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான்.
தான் விரும்பியவர்களை நேரானவழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!)
அவர்களுக்காக உங்கள் உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு நீங்கள்
கவலைப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக
இருக்கின்றான்.(35:8)
وَمَا يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ۙ
குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 35:19)
وَلَا الظُّلُمٰتُ وَلَا النُّوْرُۙ
(அவ்வாறே) இருளும் ஒளியும் (சமமாகா).
(அல்குர்ஆன் : 35:20)
وَلَا الظِّلُّ وَلَا الْحَـرُوْرُ
(அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா).
(அல்குர்ஆன் : 35:21)
وَمَا يَسْتَوِى الْاَحْيَآءُ وَلَا الْاَمْوَاتُ اِنَّ اللّٰهَ يُسْمِعُ مَنْ يَّشَآءُ وَمَاۤ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِى الْقُبُوْرِ
அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், மண்ணறைகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
(அல்குர்ஆன் : 35:22)