26 ஏப்., 2013

தொப்பை!


ஆயுளின் 10 வருடத்தைக் குறைக்கிறது தொப்பை!

‘லேசான தொப்பை ஆண்களுக்கு அழகு’ என்று சிலர் பெருமையாகச் சொல்வார்கள். ஆனால், தொப்பையால் உடலுக்கு பிரச்னைகள்தான் ஏற்படுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது. இதய நோய்கள், மாரடைப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், பக்க வாதம் என நீளும் இந்தப் பட்டியலில் புற்றுநோய் இணையும் ஆபத்து கூட இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தொப்பையைக் குறைக்க வேண்டுமானால் குனிந்து நிமிர்ந்து - உட்கார்ந்து எழுவது எல்லாம் பலன் தராது. அதிக நேரம் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் முதலியவை பலன் தரும். தவிர, கொழுப்பு குறைந்த உணவு வகைகளைச் சாப்பிட்டு, அதிக கலோரிகளைக் குறைக்க வேண்டும்.

சமீபத்திய ஆய்வுகளின்படி, அதிக உயரம் இருப்பவர்களை விடக் குள்ளமாக இருப்பவர்களுக்கே தொப்பை வருகிறதாம். அதோடு, தொப்பை விழுந்த பெண்களை விட ஆண்கள் விரைவாக அதைக் குறைத்துக் கொள்ள முடியுமாம். இதற்குக் காரணம் ஆண்களின் அடிவயிற்றுப் பகுதி யில் அதிகச் சதையும் கொழுப்பில்லாத திசுக்களும் இருப்பது தான். தூங்கும்போதுகூட அவை வயிற்றுப் பகுதியிலுள்ள கொழுப்பை எரித்து சக்தியாக மாற்றும்.

அதிக நேரம் டி.வி பார்த்தால் தொப்பை விழுகிறது என்கிறார்கள். சும்மா உட்காரப் பிடிக்காமல் அந்த நேரத்தில் நொறுக்குத் தீனி தின்ன ஆரம்பிப்பதாலும் கொழுப்பு அதிகரித்து தொப்பை ஏற்படுகிறது. பீர் போன்ற மது பானங்களைக் குடிப்பதால் நான்கில் ஒரு பங்கு கலோரிகள் தேவைக்கு அதிகமாக வயிற்றுப் பகுதியில் தொப்பையாக சேமிக்கப்படுகிறது என சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொப்பை குறையக் குறைய கொழுப்புப் பொருட்களின் மீதுள்ள ஆர்வமும் குறையும் என்கிறார்கள் அவர்கள்.

ஸ்லிம்மாக இருப்பவர்களை விட, தொப்பையோடு இருப்பவர்களுக்கு மூட்டுவலி, உயர் ரத்த அழுத்தம், கிருமித் தொற்றுகள், கை காலில் வாதம் தாக்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதோடு, ‘ஒல்லி யானவர்களைவிட அவர்கள் பத்து வருடம் முன்னதாகவே இறந்து விடும் ஆபத்தும் அதிகம்’ என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தொப்பை போட்டவர்களுக்கு மேலும் கொழுப்பு சேரும்போது, கண்புரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஹார்வார்டு பல்கலைக்கழக டாக்டர்கள் நடத்திய ஐந்து வருட ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது. உடல் பருமன் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைத் தூண்டி, சர்க்கரை நோய்க்கும் வழி ஏற்படுத்தித் தருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பருமனை குறைக்க ...........!!

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும். வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி,
முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

10 ஏப்., 2013

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க முயன்ற.....



டாக்டர் மில்லர் கண்ட அதிசயங்கள்
 
கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.

இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார்.

அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.

ஆனால், என்ன ஆச்சரியம்! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.

நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல; குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரை திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்தவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம்கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.

நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்பட்டிருந்தது மில்லரின் வியப்பைக் கூட்டியது.
குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத் தூக்கிவாரிப் போட்டது.

இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள் (4:82) என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.

இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவெனில், சிந்தனைகளில் தவறு இருக்கும்; தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால்தான் அது முடியவில்லை.

உலகில் எந்தப் படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது; இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.

டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்:
இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (21:30)
1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். பெருவெடிப்பு’ (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பலகோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை

இணைந்திருத்தல்என்பதைக் குறிக்க ரத்க்எனும் சொல் வசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்கு இணைந்த பொருளைக் குறிக்கும். சிதறல்என்பதைக் குறிக்க மூலத்தில்அல்ஃபத்க்எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். (ரத்க், ஃபத்க் சுப்ஹானல்லாஹ்!)

நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார்போலும். இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதைக் கண்டு திகைத்துப்போனார் மில்லர்.

இதை ஷைத்தான்கள் இறக்கிவிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல; அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211)

என்று கூறும் குர்ஆன்,”(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீரா!” (16:98)

என்று கட்டளையிடுகின்றது. ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்குமுன் என்னைவிட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?

டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்கவைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம்பெறுகின்றன. அவற்றை அற்புதங்கள்என்கிறார் அற்புதக் கூட்டங்கள் பல நடத்திய அவர்.

அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் மரணிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீலஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படையாகவே கூறுகிறது.

அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக்கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை -தான் நரகவாசி என்பதை- பொய்யாக்கியிருக்கலாம்.

ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப்பெற்றது.

அப்படியா?



1957ல் ரஷ்யா செயற்கைக்கோளை முதன் முறையாக விண்ணில் ஏவியது.
1958ல் அமெரிக்கா NASA (NATIONAL AERONAUTICS AND SPACE ADMINISTRATION) அமைப்பை ஏற்படுத்தியது.
இந்திய விண்வெளித் திட்டம் (SPACE PROGRAM IN INDIA)
விண்வெளி ஆராய்ச்சிக்காக INCOSPAR(Indian National Committee for Space Pogramme) 1962ல் ஏற்படுத்தப்பட்டது.
1969 இல் ISRO (INDIAN SPACE RESEARCH ORGANISATION) பெங்களூரில் ஏற்படுத்தப்பட்டது.
இந்திய விண்வெளித் திட்ட வரலாற்றில் 1970 ம் ஆண்டு ஆரியபட்டா, பாஸ்கரா, ரோகினி, ஆப்பிள் போன்ற செயற்கைக்கோள்கள் சோதனை செய்யப்பட்டன.
1980 இல் INSAT (Indian National Satellitte) மற்றும் IRS (Indian Remote Sensing Satellite) ஏவப்பட்டன.
Oct 1, 1971 இல் SHAR(Sriharikota High Altitude Range) ஏற்படுத்தப்பட்டது
இந்திய விண்வெளித் திட்டத்தில் 2002-2003 ம் ஆண்டு முக்கியமானதாகும். சதீஸ்தவான் (Sathhish Dhawan Space Centre, Sriharikota,Andhra) என 2002 இல் பெயர் மாற்றப்பட்டது,
2002 Sep 12 வானிலை ஆய்வு செயற்கைக்கோளான METSAT (Meterological Sattellite) PSLV உதவியுடன் புவியோடு ஒத்திசைவு கொண்டு இயங்கும் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. METSAT கோளிற்கு KALPANA -1 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
IRS வணிக நோக்கத்தில் அனுப்பப்பட்டது.
METSAT-வானிலை முன்னறிவிப்பில் பயன்படுகிறது.
ROHINI வானிலை ஆராய்ச்சிக்கு பயன்படுகிறது.
PSLV யைக் கொண்டு 1000-2000 kg கொண்ட Remote Sensing Sattellite ஐ விண்வெளிக்கு அனுப்பலாம்.
நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன்என்று பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.

 பிறக்கும்போது மனித உடலில் 300 எலும்புகள் உள்ளனவாம்;வளர்ந்த பின் 206 தான் உள்ளனவாம்

மனித இதயம் ஒரு நாளைக்கு 1,00,000 தடவைக்கு மேல் துடிக்கிறதாம்

தலை வெட்டுப்பட்டாலும் ஒரு கரப்பு பல நாட்கள் வாழுமாம்;கடைசியில் அது பட்டினியால் சாகிறதாம்!

பூமியின் எடை-6,600,000,000,000,000,000,000 டன்களாம்.

ஒரு சதுரக் காகிதத்தை ஏழு தடவைக்கு மேல் பாதியாக மடிக்க முடியாதாம்,

ஒரு வயலினில் கிட்டத்தட்ட 70 மரத்துண்டுகள் உள்ளனவாம்

மின்னலால் உண்டாகும் சூடு,சூரியனின் பரப்பில் உள்ள சூட்டை விட 5 மடங்கு அதிகமாம்.

உலகில் மிக அதிகமாக உள்ள பெயர் முஹம்மத் [Mohamed] என்பதுதானாம்

மின்சார பல்ப் கண்டு பிடித்த எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயமாம்

உலகில் 10 லட்சம் விதமான மிருகங்கள் உள்ளனவாம்

ஒரு சராசரி மனிதன் ஒரு ஆண்டில் 1460க்கும் மேற்பட்ட கனவுகள் காண்கிறானாம்.

முள்ளம்பன்றிகள் தண்ணீரில் மிதக்குமாம்.

சூரியன் ,பூமியை விட 330330 மடங்கு பெரியதாம்.

ஒரு 75 வயது மனிதன் வாழ்வில் 23 ஆண்டுகள் தூங்கியிருப்பானாம்!

ஆக்டோபஸ்ஸுக்கு 3 இதயங்கள் உள்ளனவாம்

உலகின் நீளமான நாள் _ ஜீன் 21

உலகின் குறுகிய நாள் _ டிசம்பர் 22

சிரிக்க வைக்கும் வாயு _ நைட்ரஸ் ஆக்ஸைடு

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு _ நார்வே

உலகிலே அதிக தங்கம் உற்பத்தி ஆகும் நாடு _ நைஜிரியா

இந்தியாவில் முதல் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்ட இடம்
 _
கொல்கத்தா

மிதிவண்டியை கண்டுபிடித்தவர் _ மேக்மில்லன்

இந்தியாவின் முதல் அனுமின் நிலையம் _ தாராபுரம்

அமெரிகாவிற்கு சுதந்திர சிலையை வழங்கிய நாடு _ ஃபிரான்ஸ்

இந்தியாவின் முதல் திரைப்பட இயக்குனர் _ தாதா சாஹிப் பால்கே

அரண்மனை நகரம் என அழைக்கப்படுவது _ கொல்கத்தா

தூக்கத்திற்கான ராகம் எது _ நீலாம்பரி

இங்லாந்தின் பூந்தோட்டம் என் அழைக்கப்படுவது _ கெண்ட்

இந்தியாவின் பிங்க் நகரம் என்பது _ ஜெய்பூர்.



*
சிலந்திகள் ஒரு வார காலம் வரை உணவு இல்லாமல் வாழ்கின்றன.

*
மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள் உள்ளன.

*
மண்புழு தோல்மூலம் சுவாசிக்கும்.

*
தேனீயால் பச்சை, நீலம், ஊதா நிறங்களை பிரித்தறிய முடியும்.

*
பூச்சி இனங்களில் தும்பியின் கண்கள் கூர்மையானவை.

*
பட்டாம் பூச்சிக்கு நூரையீரல் இல்லை. அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள `ஸ்பிராக்கிள்' என்னும் துளைகள் வழியாக சுவாசிக்கின்றன.

*
ஆண், பெண் இரண்டின் இனப் பெருக்க உறுப்புகளும் நத்தையில் காணப் படுகிறது. இதனால் அவை ஹெர்மப்ரோடைட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

*
யானையின்துதிக்கை ஒரு லட்சம் தசைகளால் ஆனது. அதன் இதயம் நிமிடத்திற்கு 28 தடவை மட்டுமே துடிக்கின்றன.

*
பூசணிக்கொடியின் வேர்கள் 2.4 கி.மீ. நீளம் வரை வளரும்.

*
நத்தைக்கு 25 ஆயிரம் பற்கள் உண்டு.

*
சாம்பிராணி ஒரு மரத்தின் பிசின் ஆகும்.

*
அன்னாசிப் பழத்திற்கு விதைகள் கிடையாது.

*
கரப்பான் பூச்சியின் இதயம் 13 அறைகளைக் கொண்டது.

*
தேனீ நம்மைக் கொட்டியதுமே வலி ஏற்படக் காரணம் அது பார்மிக் என்னும் அமிலத்தை நம் உடம்பில் செலுத்துவதாகும்.

*
தவளையின் இதயத்தில் மூன்று அறைகள் உள்ளன.

*
ஈசலுக்கு ஜீரண உறுப்பு கிடையாது. அதனுடைய ஆயுட்காலம் ஒரே ஒரு நாள் மட்டுமே. 24 மணி நேரத்திற்கு மேல் அதனால் வாழ முடியாது.

*
கறையான் வெப்பம் மிகுந்தநாடுகளில் இருக்கும். ஆண்,பெண் கறையான், ஆணும் பெண்ணும் அல்லாத கறையான் என அவற்றில் மூன்று வகை உண்டு.

*
வியர்வையை வெளியேற்றவே நாய்கள் நாக்கை தொங்க விடுகின்றன. ஏனெனில் நாய்களுக்கு மற்ற இடங்களில் வியர்வைச் சுரப்பிகள் இல்லை

*
பச்சோந்தி அடிக்கடி தன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் காற்றை நிறைய உள்ளிழுத்து சுய உருவை விட பல மடங்கு பருத்துக் காணப்படும். இதனுடைய நாக்கு மிகவும் நீளமானது. 10 அங்குலத்திற்கு அப்பால் உள்ள பூச்சியை ஒரேயொரு நொடியில் கவரக்கூடிய சக்தி படைத்தது. இவையெல்லாவற்றையும் விட மிகவும் வியப்பை ஏற்படுத்துவது பச்சோந்தியின் கண்கள்தான். ஒரு கண் நேரில் இருப்பதை உற்று நோக்க, மற்றொரு கண் பின்னால் இருப்பதை பார்க்கும். அற்புதமான அமைப்பை உடையது. உலகில் வேறு எந்த உயிரினத்திற்கும் இந்த அமைப்பு கிடையாது.

ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்!

கண்டிப்பாக அறியவேண்டியது!

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப்பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! ( அவர்களின் கவணம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது! )

மொழி.

பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்!
அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS)

ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாளான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.

வாகன‌ம் ஓட்டுதல்.

வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.
ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும்.
இதற்கு காரணம், ஆண்களின் ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக்கேட்டுக்கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.

பொய்ப்பேச்சு!
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை.
காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!

பிரச்சனைக்கான தீர்வுகள்.

பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.
ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாக திருப்தியடைந்துகொள்ளும்.
சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.

தேவைகள்.

மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
மகிழ்ச்சியின்மை.

ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்அவர்களால், அவர்களின் வேலையில் கவணம் செலுத்த முடியாது.
ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது.
உரையாடல்.

பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.

நடவடிக்கை.

பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!

ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்..!