24 செப்., 2014

Wifi Router ஆக Laptop யை மாற்ற

உங்கள் மடிக் கணினிக்கு கேபிள் மூலமான இணைய இணைப்பை வழங்கியிருக்குறீர்கள். எனினும் அந்த இணைப்பை பயன் படுத்தி உங்களிடம் உள்ள ஏனைய கணினிகளுக்கும்  கருவிகளுக்கும்  கேபிளின்றி வழங்க முடியுமா? அதாவது உங்கள் மடிக்ககணினியை ஒரு a WiFi router ஆகப் பயன் படுத்த முடியுமா? முடியும் என்பதே இக்கேள்விக்குரிய  விடையாகும்.

 இந்த வசதியைப் பெற மடிக்கணினியிலோ அல்லது டெஸ்க்டொப் கணினியிலோ  wifi வசதி இருக்க வேண்டும்.  தற்போது வரும் மடிக் கணினிகளில் wifi வசதியுண்டு. டெஸ்க்டொப் கணினி எனின் wireless network card பொருத்திக் கொள்ள வேண்டும்.  கணினியில் wifi வசதியிருப்பின் உங்கள் கணினியை ஒரு WiFi hotspot ஆக மாற்றிக் கொள்ள முடியும். இதனை விண்டோஸ் இயங்கு தளத்தில் Ad-Hoc Wireless Connection என அழைக்கப்படும். 
விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் ஒரு கணினியை WiFi hotspot ஆக மாற்றுவது எப்படி எனப் பார்ப்போம். முதலில்  Control Panel  ஊடாக அல்லது வேறு வழியில் Network and Sharing Center நுழையுங்கள். அப்போது ஒரு விசர்ட் தோன்றும். அங்கு  Set up a new connection or network என்பதைத் தெரிவு செய்யுங்கள்அப்போது திறக்கும் விண்டோவில் Set up a wireless ad hoc (computer-to-computer) network என்பதைத் தெரிவு செய்யுங்கள். அடுத்து  ad-hoc wireless network என்றால் என்ன என்பது பற்றி ஒரு விளக்கக் குறிப்பு காண்பிக்கப்படும். 

அடுத்து தோன்றும் விண்டோவில் உங்கள் கேபிளின்றிய இணைப்புக்கான ஒரு பெயரை வழங்குவதோடு விருப்பமான ஒரு பாதுகாப்பு முறையையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். 
WPA2 எனும் பாதுகாப்பு முறை விரும்பத் தக்கது. மேலும் அதற்கு ஒரு பாஸ்வர்டையும் வழங்குங்கள். பாதுகாப்பு அவசியமில்லை எனின் Open என்பதைத் தெரிவு செய்யலாம். அடுத்து Next க்ளிக் செய்ய விசர்ட் முடிவுக்கு வரும்.  இப்போது wirelss router இன்றி ஒரு  wirelss இணைப்பை உருவாக்கியாயிற்று.
இனி இந்த  இணைப்பைப் பயன் படுத்தி உங்களிடமுள்ள ஏனைய மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசி, டேப்லட் கணினி போன்றவற்றை இணையத்துடன்  கேபிளின்றி இணைக்கலாம். 

23 செப்., 2014

கணினியில் android

இனி உங்கள் whatsapp மற்றும் viber போன்ற ஆண்டிராய்டு அப்ளிகேஷன்களை பயன்படுத்த விலை கொடுத்து ஸ்மார்ட் போன் வாங்கவேண்டிய தேவையில்லை.  உங்கள் வீட்டில் இருக்கும் கணினியைக் கொண்டே ஆண்டிராய்டு அப்ளிகேஷன் அனைத்தையும் பயன்படுத்தமுடியும்.
இந்த சேவையை அமெரிக்காவை சேர்ந்த ப்ளுஸ்டாக்ஸ் (bluestacks)  எனும் நிறுவனம் துவங்கியுள்ளது.  இதற்கு எந்த கட்டணமும் பெறப்படுவதில்லை என்பதுதான் இதன் தனிச் சிறப்பு. இனி இந்த இலவச வசதியினை உங்கள் கணினியில் எவ்வாறு நிறுவலாம் என்பதை விரிவாகக் பார்க்கலாம்.
1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
2. இதை உங்கள் Windows 7 கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இது பல நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.
3. இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன் ஆகி விடும். அப்படி இல்லை என்றால் Desktop Shortcut மூலம் ஓபன் செய்யலாம்.
4. இனி இது Google Play & உங்கள் Android Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும். உங்களுக்கு எந்த App வேண்டுமோ அதன் பெயரை வலது மேல் மூலையில் உள்ள “Search Icon” மீது கிளிக் செய்து தேடலாம்.
5. இன்ஸ்டால் ஆன App- களை My Apps பகுதியில் காணலாம். இணைய இணைப்பை பயன்படுத்தி App-ஐ டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த முடியும்.
6. உங்கள் கணணியில் Viber ஐ பயன்படுத்த வலது கீழ் மூலையில் உள்ள Search Icon இல் Viber என்று தேடுங்கள். பின்னர் Viber App-னை Android Phone – இல் Install செய்வது போன்று Install செய்து கொள்ளுங்கள்.
7. வரும் பகுதியில் BlueStacks – கில் நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர் கொடுத்து Register செய்து கொள்ள வேண்டும். இப்போது உங்களுக்கு Pin Number ஒன்று வந்திருக்கும்.
8. Application – ஐ இன்ஸ்டால் செய்து Pin Number – ஐ கொடுத்து Log In செய்து கொள்ளலாம்.
9. Log – in ஆன உடன் உங்கள் மொபைலில் உள்ள App – களை உங்கள் கணினியில் பயன்படுத்தும் BlueStacks உடன் Sync செய்து கொள்ளும் வசதி இருக்கும்.
இதில் குறிப்பிட்ட ஒரு App அல்லது அனைத்து App – களையும் உங்கள் கணினிக்கு Sync செய்து கொள்ளலாம்.
11. இனி Android App பயன்படுத்த உங்கள் Android Phone – ஐ பயன்படுத்த தேவையில்லை.
அதே போன்று உங்களுக்கு கணணியில் WhatsApp -னையும் பயன்படுத்த முடியும்.
http://www.bluestacks.com/

22 செப்., 2014

இயற்கை வலி நிவாரணி


விரலை அழுத்தினால் எல்லா நோயும் போயே போச்சு!


நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.
உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.

தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, "தலை வலிக்கிறது' என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம்.

மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது?
நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!

அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன.
விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.

மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, "ஆன்டாசிட்' மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.

மலச்சிக்கல் :
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.

கழுத்து வலி :
கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம்.
கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

உயர் ரத்த அழுத்தம் :
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும்.
நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது. காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது.
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது.

இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.

17 செப்., 2014

6 சுவை

                        6 சுவையும் அதன் ஆற்றலும்

துவர்ப்பு     -   உடலில் காயம் ஏற்படும் போது இரத்தத்தை உறையச் செய்யும்.

இனிப்பு      -   உடலின் தசையை அதிகமாக வளர்க்க உதவும்.

புளிப்பு        -  இரத்தக் குழாயில் உள்ள அழுக்கை நீக்கும்.

கார்ப்பு       -  உடல் உஷ்ணம், உணர்ச்சிகளைக் கூட்டும்.

கசப்பு          -  வேண்டாத கிருமிகளை அழிக்கும் சக்தி தரும்.

உவர்ப்பு    -   ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

Blood Donate _ யார் ? யாருக்கு ?


16 செப்., 2014

வெந்தயக் கீரை



சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை எனப்படுகிறது.
இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும்.
கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூக்கும் முன்னரேயே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறமுடையது.
சுமார் இரண்டரை அடி வரை வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும்.
வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம்.
இதை துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம்.
வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது.
·         சொறி, சிரங்கை நீக்குகிறது.
·         பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது.
·         வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர்.
·         இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது.
·         வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும்.
·         உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.
·         வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும்.
·         நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும்.
·         .இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும்.
·         இந்தக் கீரையை வதக்கி அதனுடன் வாதுமைப் பருப்பு, கசகச கோதுமை ஆகியவற்றைச் சேர்த்துப் பால்விட்டு அரைத்து நெய்விட்டுக் கிண்டி உட்கொண்டால் உடலுக்கு வலிமையும், வனப்பும் ஏற்படும். இடுப்பு வலி நீங்கும்.
·         வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து உண்டால் மார்பு வலி, மூக்கடைப்பு ஆகிய நோய்கள் நீங்கும். மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.
·         வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும்.
·         இந்தக் கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும்.
·         வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது.
·         இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.
·         வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது.
·         சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது.
·         வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.
·         வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்.
வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும்