24 செப்., 2014

Wifi Router ஆக Laptop யை மாற்ற

உங்கள் மடிக் கணினிக்கு கேபிள் மூலமான இணைய இணைப்பை வழங்கியிருக்குறீர்கள். எனினும் அந்த இணைப்பை பயன் படுத்தி உங்களிடம் உள்ள ஏனைய கணினிகளுக்கும்  கருவிகளுக்கும்  கேபிளின்றி வழங்க முடியுமா? அதாவது உங்கள் மடிக்ககணினியை ஒரு a WiFi router ஆகப் பயன் படுத்த முடியுமா? முடியும் என்பதே இக்கேள்விக்குரிய  விடையாகும்.

 இந்த வசதியைப் பெற மடிக்கணினியிலோ அல்லது டெஸ்க்டொப் கணினியிலோ  wifi வசதி இருக்க வேண்டும்.  தற்போது வரும் மடிக் கணினிகளில் wifi வசதியுண்டு. டெஸ்க்டொப் கணினி எனின் wireless network card பொருத்திக் கொள்ள வேண்டும்.  கணினியில் wifi வசதியிருப்பின் உங்கள் கணினியை ஒரு WiFi hotspot ஆக மாற்றிக் கொள்ள முடியும். இதனை விண்டோஸ் இயங்கு தளத்தில் Ad-Hoc Wireless Connection என அழைக்கப்படும். 
விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் ஒரு கணினியை WiFi hotspot ஆக மாற்றுவது எப்படி எனப் பார்ப்போம். முதலில்  Control Panel  ஊடாக அல்லது வேறு வழியில் Network and Sharing Center நுழையுங்கள். அப்போது ஒரு விசர்ட் தோன்றும். அங்கு  Set up a new connection or network என்பதைத் தெரிவு செய்யுங்கள்அப்போது திறக்கும் விண்டோவில் Set up a wireless ad hoc (computer-to-computer) network என்பதைத் தெரிவு செய்யுங்கள். அடுத்து  ad-hoc wireless network என்றால் என்ன என்பது பற்றி ஒரு விளக்கக் குறிப்பு காண்பிக்கப்படும். 

அடுத்து தோன்றும் விண்டோவில் உங்கள் கேபிளின்றிய இணைப்புக்கான ஒரு பெயரை வழங்குவதோடு விருப்பமான ஒரு பாதுகாப்பு முறையையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். 
WPA2 எனும் பாதுகாப்பு முறை விரும்பத் தக்கது. மேலும் அதற்கு ஒரு பாஸ்வர்டையும் வழங்குங்கள். பாதுகாப்பு அவசியமில்லை எனின் Open என்பதைத் தெரிவு செய்யலாம். அடுத்து Next க்ளிக் செய்ய விசர்ட் முடிவுக்கு வரும்.  இப்போது wirelss router இன்றி ஒரு  wirelss இணைப்பை உருவாக்கியாயிற்று.
இனி இந்த  இணைப்பைப் பயன் படுத்தி உங்களிடமுள்ள ஏனைய மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசி, டேப்லட் கணினி போன்றவற்றை இணையத்துடன்  கேபிளின்றி இணைக்கலாம்.