12 மே, 2012

உங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை


            இன்றைய சூழ்நிலையில் கணினியை பற்றி சில அடிப்படை விஷயங்களையாவது தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.   இவைகளை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சுலபமாக அறிந்து கொள்ள ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
மென்பொருளின் பயன்கள்:
  • இந்த மென்பொருளினால் கணினியை பற்றி அதிக தகவல்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளலாம்.
  • இந்த மென்பொருளில் உள்ள இன்னொரு வசதி இந்த விவரங்களை Picture, HTML பைல்களாக உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம்.
  • பிரிண்ட் எடுத்தல், ஈமெயில் அனுப்புதல் போன்ற முக்கியமான வசதிகளும் இதில் உள்ளது.
  • இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக இயக்கலாம்.
  • இதில் நம்முடைய கீபோர்டில் Numlock, Capslock, Scroll Lock போன்ற கீகள் செயலில் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியும்.
  • இந்த மென்பொருள் 1.04MB அளவே உடைய ஒரு இலவச மென்பொருளாகும்.
உபயோகிக்கும் முறை:
  • இந்த மென்பொருளை கீழே உள்ள linkல் சென்று   SimpleSysInfo 2.9   உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  • டவுன்லோட் முடிந்ததும் இந்த மென்பொருளை நேரடியாக இயக்குங்கள்.
  • உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் கணினியின் அனைத்து விவரங்களும் வரும்.

இந்த விண்டோவில் சுமார் 10க்கும் மேற்பட்ட Tabகள் இருக்கும் அதில் ஒவ்வொன்றாக click செய்து உங்களுடைய கணினியின் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
link  -  http://wieldraaijer.nl/