30 ஜூலை, 2013
மூளையை இனி நல்லா பாதுகாத்துகோங்க
மனித
மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில்
சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை
இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல்,செரிமானம், இதயத்துடிப்பு,
கொட்டாவி,போன்ற செயற்பாடுகளையும்,விழிப்புணர்வு டன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.
இதில் மூளையை பாதிக்கும் விஷயங்களும் இருக்கின்றன
. காலை உணவு...
காலையில் உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் ரத்தத்தில் குறைவான அளவே
சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்
சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
அதிகமாகச் சாப்பிடுவது...
மிக அதிகமாகச் சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்கள் இறுகி மூளையின் சக்தி குறைந்து போகிறது.
புகை பிடித்தல்....
புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஸைமர்ஸ் வியாதி வருயதற்கு காரணமாகிறது
சர்க்கரை சாப்பிடுதல் ...
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
சுவாசித்தல்....
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது.
மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால்,
மூளை பாதிப்படையும். தூக்கமின்மை நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும்.
வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது ...
மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவது ...
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க
வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான
ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. நோயுற்ற காலம்உடல் நோயுற்ற காலத்தில் மிக
அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப்
பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
மூளைக்கு வேலைமூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல்
இருப்பது,மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும்
சிந்தனைகளை
மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை
வலிமையான உறுப்பாக ஆகிறது. பேசாமல் இருப்பதுஅறிவுப்பூர்வமான உரையாடல்களை
மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
29 ஜூலை, 2013
மன இறுக்கமா ? ....
மன இறுக்கத்தை போக்கும் வழிமுறைகள்
1. சத்தான உணவைச் சாப்பிடுங்கள்
கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான
உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே
இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச்
சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும்
செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.
2. நன்றாகத் தூங்குங்கள்
நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம்
செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே
Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச்
சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல்
உடல்நலக்குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத்தூக்கம்
அவசியம்.
3. நடங்கள்! ஓடுங்கள்!
தினமும் அதிகாலை
எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging)
செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி
விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும்.
மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு
செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று
பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.
4. ஓய்வெடுங்கள்.
பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை
நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து
இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான
வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக
இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு
ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.
5. சிரியுங்கள்
மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு.
சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது
நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை
தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.
எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ்
இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.
6. மனம்விட்டுப் பேசுங்கள்.
மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும்.
எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும்
பேசிக்கொண்டிருக்காதீர்கள்.
யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம்
விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத்
தெளிவைத் தரும்.
7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்
இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட
இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது.
ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த
சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.
8. தெளிவாகச் செய்யுங்கள்
எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன்
செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல்
இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை
மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும்
அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை
மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.
9. விளையாடுங்கள்
உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள்.
கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே
கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம்
தரும்.
10. மற்றவர்களையும் கவனியுங்கள்
உங்கள்
விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக்
கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு
வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும்
கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள்,
பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !!!
டீ குடிக்கலாம் வாங்க..
துளசி இலை டீ:
சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
ஆவாரம்பூ டீ:
காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி
எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின்
வெப்பத்தை தணிக்கும்.
செம்பருத்திப்பூ டீ:
ஒற்றை
செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக்
கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச்
சுவைக்கலாம்.
கொத்தமல்லி டீ:
கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.
புதினா இலை டீ:
புதினா இலைகளை நீரிகில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
கொய்யா இலை டீ:
கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.
முருங்கைக் கீரை டீ:
முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை டீ ரெடி.
குறிப்பு:
டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது.
28 ஜூலை, 2013
தொலைக்காட்சி சேனல்கள்
மக்களின் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்தப்பட்ட சாதனங்களில் முதன்மையானதாக தொ(ல்)லைக்காட்சி விளங்குகிறது ஆனால் அதன் மூலம் செய்திகள் உள்ளிட்ட உலக – அறிவியல் – அரசியல் விஷயங்களும் அறிந்து கொள்ளலாம் என்றும், மக்கள் மனங்களை பண்படுத்தும் இது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் தண்டனைக்காக அனுப்பப்பட்டு சிறையில் இருக்கும்போது கைதிகள் கூட T.V. பார்க்கலாம் என்று கருத்து கூறப்பட்டு அது ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டும் வருகிறது.
ஆனால் இன்று நடைமுறையில் இந்த தொலைக்காட்சி சேனல்களில் மக்கள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறார்கள்? எந்த சேனல்கள் பெரும்பாலும் ரசித்து மகிழ்கிறார்கள் என்று பார்த்தால், அறிவியல் அரசியல் கூடிய செய்திகளை விடவும் நாடகங்கள் எனப்படும் மெகா சீரியல்களும் – திரைப்படங்களும் ஆடல் பாடல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் தான் முன்னணி வகிக்கின்றன. யுக முடிவுக் காலம் வருவதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உலகம் அதை எந்தளவுக்கு வரவேற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் பெரிய ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டியதில்லை.
ஆம்! இந்த தொலைக்காட்சிகளின் ஜீவ நாடி திரைப்பட உலகம் இதன்மூலம் உருவாக்கப்படும் படங்கள் – நடிகர்கள் – நடிகைகளின் வாழ்க்கை மக்களை எந்தளவுக்கு அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறது? தினமும் செய்தித்தாள்களை புரட்டினால் காதல் ஜோடி ஓட்டம் – காதல் ஜோடி தற்கொலை, கள்ளக்காதலர்களின் காமக் களியாட்டங்கள் – வயது வரம்பு தாண்டி காம வெறிக்கு பலியாகும் மாணவர் இளைஞர்கள்; பணம் செலவுக்கில்லையென்றால் கொலை கொள்ளை இதுவெல்லாம் யார் கற்றுத் தந்த பாடம்? சினிமா தவிர வேறு யார் இதை இவ்வளவு (கேவலமாக) – வேகமாக கற்றுத் தரமுடியும்.
காசிற்காக சினிமாவில் நடிக்கும் இவர்கள் நிஜமாக வாழ்பவர்களுக்கு எதைக் கற்றுத் தரமுடியும்? இதைத்தான் நிஜத்தில் மூட்டை தூக்குபவர்களுக்கு கூலி பத்து ரூபாய் என்றால் மூட்டை தூக்குபவதைப் போல் நடிப்பவர்களுக்கு கூலி கோடி ரூபாய். இவர்களை இனம் காட்ட இவர்களின் வாழ்க்கை குடும்பத்தைப் பாருங்கள். விரல்விட்டு எண்ணிப் பாருங்கள். எத்தனை நடிகர் நடிகை கைப்பிடித்த ஒரே கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். எத்தனை நடிகர் நடிகைகள் லஞ்ச லாவண்யம் பற்றி பேசுபவர்கள் அதைத் தவறு என்று கூப்பாடு போடுவார்கள் – வெறுமனே தாங்கள் நடிப்பதற்காக லட்சக்கணக்கில் – கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார்களே? அதில் எத்தனை பேர் சரியாக வரிகட்டுகிறார்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமர்கள்(?) கறுப்பு பணம் வாங்காமல் மது அருந்தாமல் விபச்சாரம் செய்யாமல் இருப்பவர்கள் யார்? யார்? ஆக அழிவுப் பாதையின் திறவுகோலாக அவதரித்துள்ள ஒவ்வொரு மொழியின் நாட்டின் திரையுலகில் இப்படித்தான் என்பதை யாராவது மறுப்பவர்கள் உண்டா?
திரையுலகம் இப்படி என்றால் சின்னத்திரையுலகம் அழிவுப் பாதையில் ஊன்றுகோளாக உருவெடுத்து விட்டது. ஆபாசங்களை அருவெறுப்பாக கருதாமல் அதை அரங்கேற்றுவதில் ஒவ்வொரு சேனல்களும் நீயா – நானா? என்று போட்டியில் உள்ளன. எத்தனைப் போர்க்குரல்கள் எழுப்பப்பட்டாலும் அதனைக்கண்டு அஞ்சும் நிலையில் எந்த T.V. சேனலும் இல்லை. இதனைக் கட்டுப்படுத்தவேண்டிய அரசாங்கம் தமிழில் பேர் வை; உனக்கு வரிச்சலுகை என்கிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கும் – ஒரே ஒரு சண்டை காட்சிக்கும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வரி வெறும் ஊறுகாய் மாதிரிதான்.
அரை குறை ஆடையுடன் என்ன? அதுவும் இல்லாமல் காட்சி தர நான் ரெடி: படம் பிடிக்க – ஒளிபரப்ப யார் ரெடி? என்று சினிமா விபச்சாரிகள் கேட்கின்றனர். சினிமாத் துறையையும் சின்னத்திரை எனப்படும் T.V. சேனல்களையும் தாண்டி மக்களை அழிவின் பக்கம் அடைப்பவர்கள் செய்தித்தாள்கள் மூலம் T.V. க்கு விளம்பரம்; T.V. யை ஒரு முறை பார்ப்பதைவிட செய்தித்தாளை பத்திரப்படுத்தி எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்வார்களே! அதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டையும் ஒருங்கேப் பெற்றுள்ளன. அதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் – தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. அப்புறமென்ன தேசிய வார இதழ்- நாளிதழ் – குடும்ப, வார இதழ் என்று A சர்டிபிகேட் இல்லாமல் கவர்ச்சிப் படங்களை சென்சார் செய்யாமல் வெளியிடும் தைரியம் இந்த குடும்ப(?) இதழ்களுக்குச் சாரும். ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வரும் தினப்பத்திரிகைகளை பார்ப்பவர்களுக்குத் தெரியும். கூச்சப்பட வேண்டி நம்மை நெகிழச் செய்யும் படங்கள் செய்திகள் தான் எத்தனை எத்தனை? யார் கொடுத்தது இந்த குடும்ப தேசிய சர்டிபிகேட்,
சீர்கெடுக்கும் சேனல்களுக்கு பண மழை பெய்ய வறட்சி ஏதும் இல்லை. பணம் வெள்ளமும் – பணப் புயலும் நல்ல அமோக விளைச்சல். அதை சாகுபடி செய்ய மடையர்களாய் மக்கள். T.V. யில் வியாபாரம் இல்லாத எந்தப் பொருளையும் யாரும் வாங்காத நிலை அளவுக்கு தயிர் சாதத்திலிருந்து ஊறுகாய், பால், பவுடர், ஷேம்பு, சோப்பு, பிளேடு, அரிசி – எண்ணை – மாவு முதலி இரு சக்கர வாகனங்களிலிருந்து 4 சக்கர வாகனங்கள் வரை எந்த விளம்பரத்தை யார்தான் விட்டு வைத்தார்கள்? – சலூன் கடைக்கு மட்டும்தான் விளம்பரம் இல்லை.
அடுத்ததாய் மக்களை அழிவின்பால் அறைகூவல் விடுவதாக செல்போன்கள் தயாராகிவிட்டன. பாமரர்களையும் விட்டுவைக்காமல் இந்த செல்போன் சூறாவளி செல் நிறுவனங்களால் சலுகை மலிவு என்ற கோரப்பிடியில் மக்கள் ஆட்படுத்தப்படுத்தப்படுகின்றனர். கம்பியூட்டருக்குப்பின் தயாரித்தது தான் செல்போன். எல்லா தரப்பினரையும் பதம்பார்த்து அழிவின் அடித்தளமாக செல்போன்கள் விளங்குவதை யாரும் மறுக்க இயலாத பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் நீலப்படங்களைக் கூட இதில் பார்க்கும் வசதியும் உண்டு. ஆச்சரியப்பட வேண்டிய விஞ்ஞான விஷயங்கள் ஆபாச அரங்கேற்றங்களால் கைச்சேதப்பட வைக்கின்றன.
அடுத்தபடியாக காமக் களியாட்டங்கள் அரங்கேறும் இடங்களாக சுற்றலாத்தளங்கள். பார்க்குகள் பீச்சுகள் இடம் பெறுகின்றன. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண சுற்றுலாத் தளங்களில் எங்கேயாவது ஒரு காதல் ஜோடியை பார்ப்பது அதிசயம்; அதுவும் ஆள் அரவமற்ற ஒதுக்குப் புறங்களில் பயந்து பயந்து பேசிக் கொள்வதை நாம் கண்டோம். ஆனால் இன்றோ சர்வசாதாரணமாக பஸ்களில் – பஸ் நிறுத்தங்களில் ஆரம்பித்து பார்க் – பீச்சுகளில் மற்றும் பொது இடங்களிலும் கூட காதல் – காம லீலைகள ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து என்று ஆரம்பித்து எழுதக் கூசும் அசிங்கங்கள் நடக்கின்றன. இப்போது நடுநிலையாளர்கள் ஆள் அரவமற்ற இடங்களில் ஒதுங்கிக் கொள்ளும் அவலம் உள்ளது. எனவே இது போன்ற எல்லா அசிங்கங்களுக்கும் மூலகாரணம் சாட்சாத் இந்த சின்னத் திரையும் – திரை உலகமும் தான். இதனைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. வீடு தேடி வரும் இந்த சேலை இந்த அழிவை எதிர்பார்க்கும் உலகத்திற்குத் தேவையா? என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
பொழுது போக்கும் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் உலாவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவதை விட நம்மை நாமே பழுது பார்த்துக் கொள்ள ஒவ்வொரு நொடித் துளியையும் பயன்படுத்திக்கொண்டு பண்படுவோம். அதன் மூலம் இன்புறுவோம். உலகில் எல்லாவற்றையும் துறந்து விடச்சொல்லி இறைவன் சொல்லவில்லை. குடும்பம் – வீடு – வாசல் – தர்மம் – ஆட்சி அதிகாரம் அனைத்திலும் என்னதான் விஞ்ஞானங்கள் வந்தாலும் மெய்ஞானத்தால் இஸ்லாம் கூறும் வழிமுறைகளை அறிந்துணர்ந்து நடப்போமானல் எந்த விபரீதங்களையும் இறைவன் அருளால் எதிர்கொள்ள முடியும். இறைவன் போதுமானவன்.
Thanks to : http://www.dawahworld.com
25 ஜூலை, 2013
18 ஜூலை, 2013
வரி கட்டலாம் வாங்க....
ஒரு இந்தியன் எத்தனை வரி தான் கட்டுவது ??
ஒரு இந்தியன் எவ்வளவு வரி சுமைக்கு ஆளாகப்படுகிறான். வரி
எந்த அளவிற்கு மக்கள் மீது திணிக்க படுகின்றன என்பதற்கு, கீழே உள்ள கேள்வி பதில் சிந்திக்க வேண்டிய உள்ளதாக இருக்கிறது. மிகவும் நகைச்சுவையாக இருக்கும் அதேவேளை இல் இந்த வரி களை நாம் கட்டுகிறோம்
என்பதில் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.
1. என்ன வேலை செய்கிறாய் ?
வியாபாரம் - அப்படியென்றால் PROFESSIONAL TAX கட்டு
2. வியாபாரத்தில் என்ன வேலை செய்கிறாய் ?
பொருட்களை விற்கிறேன்- ஓ அப்படியா SALES TAX ஐ கட்டு.
3. எங்கிருந்து பொருட்களை வாங்குகிறாய் ?
வெளிநாட்டில் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்தது....
1. என்ன வேலை செய்கிறாய் ?
வியாபாரம் - அப்படியென்றால் PROFESSIONAL TAX கட்டு
2. வியாபாரத்தில் என்ன வேலை செய்கிறாய் ?
பொருட்களை விற்கிறேன்- ஓ அப்படியா SALES TAX ஐ கட்டு.
3. எங்கிருந்து பொருட்களை வாங்குகிறாய் ?
வெளிநாட்டில் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்தது....
அப்படியா சரி CENTRAL TAX மற்றும் CUSTOMS DUTY TAX ஐ கட்டு.
4. பொருட்களை விற்பதன் மூலம் உனக்கு என்ன கிடைகிறது ?
நல்ல வருமானம்(INCOME )கிடைக்கிறது. அப்போ INCOME TAX ஐகட்டு
5. பொருட்களை நீயே தயார் செய்து விற்கிறாயா ?
ஆம் . எங்கு தயார் செய்து விற்கிறாய்? FACTORY இல்.
4. பொருட்களை விற்பதன் மூலம் உனக்கு என்ன கிடைகிறது ?
நல்ல வருமானம்(INCOME )கிடைக்கிறது. அப்போ INCOME TAX ஐகட்டு
5. பொருட்களை நீயே தயார் செய்து விற்கிறாயா ?
ஆம் . எங்கு தயார் செய்து விற்கிறாய்? FACTORY இல்.
அப்படி என்றால், EXCISE DUTY இனை கட்டு .
6. உன்னிடம் FACTORY இருக்கிறதல்லவா ?
ஆம். - அப்படியென்றால், FIRE TAX மற்றும் MUNICIPAL TAX ஐ கட்டு.
7. உன்னிடம் வேலை ஆட்கள் இருகிறார்களா ?
ஆம் -சரி STAFF PROFESSIONAL TAX ஐ கட்டு.
6. உன்னிடம் FACTORY இருக்கிறதல்லவா ?
ஆம். - அப்படியென்றால், FIRE TAX மற்றும் MUNICIPAL TAX ஐ கட்டு.
7. உன்னிடம் வேலை ஆட்கள் இருகிறார்களா ?
ஆம் -சரி STAFF PROFESSIONAL TAX ஐ கட்டு.
8. மில்லியன் கணக்கில் பணம் சம்பாதிகிறாயா ?
ஆம்.அப்படி என்றால் TURN OVER மற்றும் ALTERNATE TAX இனை கட்டு.
ஆம்.அப்படி என்றால் TURN OVER மற்றும் ALTERNATE TAX இனை கட்டு.
9. 25000 உனது வங்கியில் இருந்து மொத்தமாக எடுகிறாயா.
ஆம்.- CASH HANDLING TAX இனை கட்டு .
10. உன்னுடைய CUSTOMER ஐ வெளி இல்(ஹோட்டல்) அழைத்து செல்கிறாயா? ஆம். FOOD மற்றும் ENTERTAINMENT TAX இனை கட்டு .
11. நீ யாருக்காவது சேவை தருவது/ சேவை பெறுவது) என்று இருக்கிறாயா? (service given or taken ) ஆம்.-சரி -SERVICE TAX ஐ கட்டு .
12. யாருக்காவது பரிசு கொடுத்தாயா ?
ஆம். அப்படி என்றால் ,GIFT TAX ஐ கட்டு.
17 ஜூலை, 2013
அணுவைவிட.........
அணுவைவிட மிகச்சிறிய
பொருட்களும் உண்டு!
அறிவியலில் இயற்பியல் என்றொரு பிரிவு இருப்பதை நாம் அறிவோம். இதன் உட்பிரிவுதான் அணுக்களைப் பற்றிய பாடமாகும். அணு என்பது ஒரு பொருளின் மிக மிக சிறிய துகளாகும்.
இந்த அணு என்பதே மிகச்சிறிய பொருள் என்றும், இதை யாராலும் பிளக்க முடியாது என்ற தத்துவத்தை 23 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறியவர் டெமாக்ரேட்ஸ் (Democritus) என்ற கிரேக்க அறிஞர். அரபுலகிலும் சரி உலகின் மற்ற பாகங்களிலும் சரி இந்தக் கொள்கையே பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அறிவியலின் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்ட இக்காலத்து விஞ்ஞான உலகம், ஓர் அணுவை எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியுட்ரான்கள் என பிரிக்க முடியும் என்று நிரூபித்து விட்டனர்.
அணு என்பதற்கு அரபியில் ‘ஜர்ரா‘ என்று அழைக்கப்படுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனால் அருளப்பட்ட அருள்மறை திருக்குர்ஆனில் இந்த அணுவை விடச் சிறிய பொருட்களும் உண்டு என கூறியிருப்பின் இது நமக்கு எல்லோருக்கும் ஆச்சரியமளிக்காதா என்ன? ஆம் திருக்குர்ஆன் இந்த உண்மையையும் கூறுகிறது.
அல்லாஹ் கூறுகிறான்: -
“எனினும் நிராகரிப்பவர்கள் ‘(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது‘ என்று கூறுகிறார்கள். அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும். அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன். வானங்களிலோ பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது. இன்னும் அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹூல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக” (அல்குர்ஆன்: 34:3)
"நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், “குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைந்து விடுவதில்லை. இதை விடச் சிறியதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை" (அல்குர்ஆன்: 10:61)
இவ்வசனத்தில் அணுவை விடச் சிறியதோ அல்லது பெரியதோ என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் அணுவைவிட சிறிய பொருட்களும் உண்டு என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே திருமறை கூறியிருப்பதை நாம் அறியலாம்
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)