மனித
மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில்
சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை
இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல்,செரிமானம், இதயத்துடிப்பு,
கொட்டாவி,போன்ற செயற்பாடுகளையும்,விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.
இதில் மூளையை பாதிக்கும் விஷயங்களும் இருக்கின்றன
. காலை உணவு...
காலையில் உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் ரத்தத்தில் குறைவான அளவே
சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்
சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
அதிகமாகச் சாப்பிடுவது...
மிக அதிகமாகச் சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்கள் இறுகி மூளையின் சக்தி குறைந்து போகிறது.
புகை பிடித்தல்....
புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஸைமர்ஸ் வியாதி வருயதற்கு காரணமாகிறது
சர்க்கரை சாப்பிடுதல் ...
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
சுவாசித்தல்....
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது.
மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால்,
மூளை பாதிப்படையும். தூக்கமின்மை நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும்.
வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது ...
மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவது ...
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க
வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான
ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. நோயுற்ற காலம்உடல் நோயுற்ற காலத்தில் மிக
அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப்
பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
மூளைக்கு வேலைமூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல்
இருப்பது,மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும்
சிந்தனைகளை
மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை
வலிமையான உறுப்பாக ஆகிறது. பேசாமல் இருப்பதுஅறிவுப்பூர்வமான உரையாடல்களை
மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.