12 ஜூலை, 2013

ரமலான் மாதத்தின் சிறப்புகள்:


அஸ்ஸலாமு அழைக்கும்

சிறப்புகள்:
  நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது.(திர்மிதீ)

சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. (திர்மிதீ)

ரமளான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.(நஸயீ)

ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும்.(திர்மிதீ)

ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார். (திர்மிதீ)

அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.(புகாரி)

நோன்பு மாதத்தில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும். (நஸயீ)

ஆயிரம் மாதங்களை விட மகத்துவமிக்க ஓர் இரவு (லைலத்துல் கத்ர்) இம்மாதத்தில் தான் இருக்கிறது.

ரமலானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது. ரமலானின் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகிலிருந்து சிலரை விடுதலை செய்கின்றான். (இப்னுமாஜா)

புனிதமிக்க அல்-குர்ஆன் ரமலானில் தான் இறக்கியருளப்பட்டது. (2:185)