31 மார்., 2013

கொசு விரட்டிகள் _ ஆபத்து ரிப்போர்ட்


கொசுத் தொல்லைகளுக்கு ஆளாகாதவர்களே கிடையாது. பெட்ரூம் முதல் பாத்ரூம்வரை ஏ.சி. பயன்படுத்துபவர்கள் மட்டுமே இதில் இருந்து தப்பிக்கின்றனர். மற்றவர்கள், கொசுக்களிடம் தினமும் கடி வாங்கிக் கொள்கின்றனர்.

அப்படி கடி வாங்கப்போய், சில நோய்களும் இலவசமாக வந்துவிடுவதால், அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள், கிரீம் மற்றும் மேட்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இப்படி பயன்படுத்துவது ஆபத்தில்போய்தான் முடியும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்களும், விஞ்ஞானிகளும்!

கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் கால அளவு, அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இதனால் நமக்கு ஏற்படும் தீங்குகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

பொதுவாக மாலைநேரங்களில்தான் கொசுக்கள் வீடுகளுக்குள் படையெடுக்கும். அந்தநேரத்தில் கதவு, ஜன்னல்களை பூட்டிவிடுவது வழக்கம். அப்படிச் செய்வதால், வீட்டிற்குள் புதிய காற்று வருவது தடை செய்யப்பட்டு விடுகிறது.

காற்று வர வழியில்லாமல் முற்றிலும் அடைபட்ட நிலையில் உள்ள வீட்டின் அறைகளுக்குள் விளக்குகளை எரிய விடுவது, சமைப்பது, அவைகளுக்கு மத்தியிலேயே வீட்டில் உள்ள அனைவரும் சுவாசிப்பதுபோன்றவற்றால் பிராண வாயுவான ஆக்ஸிஜனின் அளவு குறைந்துபோய் விடுகிறது.

இந்த சூழ்நிலையிலும், வீட்டிற்குள் புகுந்துவிடும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச் சுருள், மேட் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். இப்படிச் செய்வதால், அவற்றில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையும், தீங்கு ஏற்படுத்தும் வாயுக்களும் மட்டுமே வீட்டிற்குள் அதிகம் உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது. ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைந்துபோய் விடுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் சுவாசிக்கும்போது, அவர்களின் உடலுக்குள்ளும் காற்றின் வழியாக நச்சுத்தன்மை புகுந்து விடுகிறது.

முன்னறிவிப்பு இன்றி உடலுக்குள் புகுந்த இந்த நச்சுத்தன்மையை விரட்ட உடலானது எதிர்வினை புரிகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜலதோஷம், சளி பிடித்தல், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. சிலருக்கு அலர்ஜி என்கிற ஒவ்வாமையும் இதனால் ஏற்பட்டு விடுகிறது. அத்துடன், மேலும் பல பாதிப்புகளையும் நம் உடல் ஏற்க வேண்டிய நிலை உருவாகிவிடுகிறது.

கொசுவை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச்சுருள், மேட் ஆகியவற்றை பயன் படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை எடுத்துக்கொள்ள இயலாமலும் போய் விட வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகளில் நிருபித்துள்ளனர்.

கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை அப்போது பிறந்த அல்லது பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.

மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, கொசு விரட்டியில் உள்ள டயேக்சின் புற்றுநோயை உருவாக்கக்கூடியது. அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது.

Health Tips


நடத்தையைப் பற்றி _ அல்குரான்


கவர்ச்சி


கைவிரல் ரேகை _ அல்-குர்ஆன் பார்வையில்...

கைவிரல் ரேகையின் முக்கியத்துவத்தையும் அதனை பதிவு செய்யும் முறையையும் கி.பி. 1880-ல் முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஸர் பிரான்சிஸ் கோல்டு என்பவர் தான்.

இவர் கூறுகிறார்” ‘பத்து இலட்சம் நபர்களை எடுத்துக் கொண்டால் அதில் இருவரின் கைவிரல் ரேகைகள்கூட ஒன்று போல இருக்காது’ என்றார். அதனாலேயே இன்று மனிதர்கள் அடையாளத்திற்காகவும், துப்பு துலக்கப்படுவதற்காகவும் இந்த கைவிரல் ரேகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

இத்தகைய சிறப்பம்சம் வாய்ந்த கை ரேகையைப் பற்றி அல்லாஹ்வின் அருள்மறை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சிலாகித்துக் கூறியிருக்கிறது.

அல்லாஹ் கூறுகிறான்: -

“மரித்து (உக்கிப்போன) மனிதனின் எழும்புகளைநாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அல்ல, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்” (அல்குர்ஆன்: 75:3-4)

மனிதன் இறந்து மக்கி மண்ணாகிப் போனபின், அவனை உயிர்ப்பிப்பதோடு, அவனின் கைவிரல் ரேகையைக்கூட இறைவன் செவ்வையாக உருவாக்குவான் என்று கூறுவதன் மூலம் கைவிரல் ரேகையின் இன்றைய அதிமுக்கியத்துவத்தை அன்றே பறைசாற்றி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. (பார்க்கவும் வீடியோ)

இவ்வளவு நுணுக்கமான ரேகைகளை உடைய கையின் “நுனி விரல்களையும் செவ்வையாக உருவாக்குவான்” என்று தன்னுடைய திருமறையில் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறியிருப்பதும் திருமறை தெய்வீக மறை என்பதற்கு அத்தாட்சியாக விளங்குகின்றது.

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.
 நன்றி: சுவனதென்றல்

30 மார்., 2013

ஒரே கிளிக் ல் கணினியை Restart செய்ய...




Start மெனுவில் சென்று உங்கள் கணினியை Restart செய்வது தாமதமான
செயலாக இருக்கிறதா ? நீங்கள் விரும்பினால் ஒரே கிளிக்கில் கணினியை Restart செய்ய வைக்கலாம். அது மட்டும் இன்றி எவ்வளவு நேரம் கழித்து Restart ஆகவேண்டும் என்றும் தீர்மானிக்கலாம். அரை நிமிடம் அல்லது ஒரு நிமிடம் என்று அமைத்துக்கொள்ளலாம். இதனால் உங்களின் வேலையும் எளிதாகிறது. நேரமும் குறைகிறது. மின்சார செலவும் குறைய வாய்ப்பல்லவா ? இதை நீங்கள் இயக்கியவுடன் உங்களின் அனைத்து பயன்பாடுகளையும் தானாகவே மூடிவிட்டு Restart செய்கிறது. அனால் எல்லாவற்றையும் முன்பே நீங்கள் சேமித்து கொள்ள வேண்டும்.இந்த வேலையை செய்யுமாறு ஒரு  Shortcut icon  உருவாக்குவது எப்படி மட்டும் பார்ப்போம்.


1.
உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து வரும் பட்டியில்
New -> Shortcut Icon
என்பதை தேர்வு செய்யுங்கள்.


2.
அடுத்தது குறுக்கு விசைக்கான இடத்தை கேட்கும். ( Location ). அதில் கீழ்க்கண்ட வரியை அடிக்கவும்.
shutdown -r -t 30  

(இதில் 30 என்பது விநாடிகளை குறிக்கிறது. உங்களுக்கு ஒரு நிமிடம் கழித்து ஆக
வேண்டும் எனில் 60 என்று கொடுக்கவும். )

3. அடுத்து குறுக்கு விசைக்கான ( Shortcut icon ) பெயரை தரவும். உதாரணமாக
Restart
என்று கொடுத்துவிட்டு முடித்து விடுங்கள்.

4.
இப்போது நீங்கள் இந்த Shortcut icon ஐ கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு
விண்டோஸ் உதவிப்பெட்டி தோன்றி அனைத்தையும் சேமியுங்கள் என்று எச்சரிக்கை செய்தியை அளிக்கும். நீங்கள் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் தானாக Restart ஆகிவிடும்.

5. சரி நீங்கள் தவறாக Restart கொடுத்துவிட்டீர்கள். இதை எப்படி தடுப்பது என்று நினைத்தால்,
Start -> Run சென்று  shutdown -a  என்று அடித்தால் போதும். உங்கள் கணினி Restart ஆவது தடுக்கப்படும்.

VLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்யலாம்!




விஎல்சி மீடியா பிளேயர் ( Vlc Media Player) கணிணியில் அனைத்து வகையான வீடியோக்களையும் இயக்க முதன்மையான மென்பொருளாக இருக்கிறது. எளிமையான இந்த மென்பொருள் புதிய வசதிகளுடன் Version 2 வெளியிடப் பட்டிருக்கிறது. இப்போது இந்த மென்பொருளிலேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிகளை விருப்பப்படி கட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ கட்டராகவும் இந்த மென்பொருள் பயன்படும்.

VLC மென்பொருளைத் திறந்து View மெனுவில் Advanced Controls என்பதனை கிளிக் செய்தால் மென்பொருளின் கீழ்புறத்தில் புதிய வசதிகளுடைய ஐகான்கள் தோன்றும். அதில் முதல் பட்டன் சிவப்பு நிறத்தில் Record என்றிருக்கும். தேவையான பகுதி ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு முறை அந்த பட்டனில் கிளிக் செய்யவும். பிறகு வீடியோ எதுவரை வேண்டுமோ அதுவரை வீடியோவை ஓடவிடவும். மறுபடியும் அதே Record பட்டனைக் கிளிக் செய்தால் தேவையான வீடியோவின் பகுதி கட் செய்யப்பட்டு விடும்.
வெட்டப்பட்ட வீடியோ Mp4 பார்மேட்டில் My Documents->My Videos போல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் உள்ள குறை என்று பார்த்தால் தேவையான பகுதி வீடியோவை ஓட விட்டால் மட்டுமே கட் செய்ய முடியும். இருப்பினும் வேகமாக எளிமையான முறையில் கட் செய்து விடVLC மீடியா பிளேயரைப் பயன்படுத்தலாம்.