பார்வை இறைவன் கொடுத்த மாபெரும் வெகுமதி. எதையும் மிகத் துல்லியமாகப் பார்த்து அறிந்துகொள்ள கண்களை அல்லாஹ் படைத்துள்ளான். இன்றைக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட ஒளிப்படக் கருவியின் (கேமரா) அதிகப்பட்ச துல்லிய அளவு (மெகா பிக்சல்) 10 முதல் 15 வரை ஆகும். ஆனால் அல்லாஹ் வழங்கியுள்ள கண்களின் துல்லிய அளவு 576 ஆகும். ஒளிப்படக் கருவியில் அகப்படாத நுண்ணிய பொருள்களையெல்லாம் நம் கண்கள் பார்த்துவிடும். அவ்வளவு கலைநுட்பத்தோடு அல்லாஹ் நம் கண்களைப் படைத்துள்ளான்.
பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அல்குர்ஆன்-(90:8)
பின்னர், (படைப்பாகிய) அதனைச் செப்பனிட்டுத்தன்னுடைய “ரூஹை” அதில்புகுத்தி (உங்களைஉற்பத்திசெய்கிறான்.) உங்களுக்குக் காதுகள், கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகுசிலரே! அல்குர்ஆன்-(32:9)
(பின்னர் ஆண், பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம் தாம் மனிதனை படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காகவே, செவியுடையவனாகவும் பார்வையுடையவனாகவும் அவனை ஆக்கினோம்.
அல்குர்ஆன்- (76:2)
7 நவ., 2020
நம் கண்கள்
28 அக்., 2020
15 ஏப்., 2019
29 டிச., 2018
உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள் !
சுகர்னு docter
கிட்ட போராங்க ..
அவரும் செக் பண்ணிட்டு
1 mg tablet கொடுக்கிறார்.
ஒரு வருஷம் கழிச்சு
சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர்
ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர்
ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார்.
அப்புறம் சுகர் கூட
BP சேர்ந்திடுச்சுனு PRESSURE
மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் கொலஸ்ட்ரால்
சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் கால்ல புண்ணு
வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்.
காலை வெட்டி எடுத்ததும்
ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.
இதுல எந்த இடத்துலயும்
அவன் Doctor ரை திட்டுவதோ,
குறை சொல்வதோ இல்லை.
1.
தான் சாப்பிடற டேப்லெட்
மேல சந்தேகம் வரல.
2.
மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு
அவன் யோசிக்கல.
3.
ஒரு நோய் வந்து அப்புறம்
மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை.
4.
வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.
TABLET சாப்பிட்டா கிட்னி
FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா
எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன்
சிந்திக்கிறதும் இல்லை.
வீட்டுல இருக்கிற
வெந்தயத்தை, காய்கறிகள் வெச்சே
இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.
பாடையில போகற வரைக்கும் அக்கு பிரஷர்,
இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு
ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு
பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.
👆👆👆 இந்த பதிவு நகைசுவையாகவும், யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.
மனம் கெட்டால் உடல்
கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.
அதனால் மனதுக்கும்,
உடலுக்குமான, முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை
நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
சிந்திப்பவர்கள் மட்டுமே
அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..
வாழ்க வையகம்
! வாழ்க வளமுடன் !
ஒருவர் தவறான உணவை
உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே
சென்றுவிடும்!
அதற்குப் பின் அதை
மூளை கவனித்துக்கொள்ளும்.❗
1.
உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.
2.
இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்"
(Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி
விடுவார்.
3.
இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.
4.
நான் என்ன செய்ய அரசே,
இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.
5.
ஆனால் மூளை இறைவன் கொடுத்த
பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.
6.
உடனே மூளையின் சொல்லுக்குக்
கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.
7.
வயிறு கலக்கிக்கொண்டு வரவே
மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.
அவரும் ஒரு
" லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.
8.
உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல்
சொல்லும்.
9.
மூளை அடுத்து சளியாக மாற்றி
வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.
10.
அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough
Syrup) ஒன்றை சாப்பிடுவார்.
11.
நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.
12.
சொறி சிறங்கு முலம் தோல்
வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines)
வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
வெளியேறும் அனைத்து
வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத்
தேடும்.
13.
உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.
கொஞ்ச நாளில் நம்மவர்
ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம்
இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
அது "மூளை கேன்சர்
கட்டி" (Brain Tumor) ஆக மாறும் அபாயம்
உண்டு.
எமது உடலுக்கு எது
தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.
உடலுக்குத் தண்ணீர்
தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
வாய்மொழியைக் கூட
நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி
மொழியால் மூளை பேசுகிறது.
உடலுக்கு சக்தி தேவைப்பட்டால்
பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.
குளிர் வந்தால் போர்த்தச்
சொல்லும்.
வெப்பம் வந்தால் குளிக்கச்
சொல்லும்.
இப்படி உடலுக்குத்
தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம்
போவதில்லை.
பசிக்கிறது மருந்து
தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?
இதை நோய் என்று அறிமுகப்
படுத்தியது யார்?
வயிற்றோட்ட உணர்வை
மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.
இதையும் நோய் என்று
அறிமுகப் படுத்தியது யார்?
சொறி என்று சொன்னாலே
சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.
கையைக் கூட நம்மை
அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?
மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று
நினைப்பது அறியாமை!
இதற்கு மருத்துவம்
செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!
இவைகள் நம் உடல் முழு
ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!
இவைகள் நம் உடல் கழிவுகளை
வெளியேற்றும் அற்புத இறை செயல்!
மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும்
செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே
தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி
புற்று நோய்வரை கொண்டு செல்லும்!
உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!
ஆரோக்யம் அனுபவியுங்கள்.......!.
17 டிச., 2018
மண்ணால் ஆனவன் மனிதன்
மண்ணால் ஆனவன் மனிதன் என்பதற்கு மனிதஉடலில் அங்கம்
வகிக்கும் மண்ணின்மூலச்சத்துகள் சான்றாக உள்ளன.70 கிலோ
கிராம் எடையுள்ள சராசரி மனித உடலை விஞ்ஞானமுறையில்
பகுப்பாய்வு செய்த போது, உடலின்மூலப்பொருட்கள் துல்லியமாகக்கண்டறியப்பட்டன.
வகிக்கும் மண்ணின்மூலச்சத்துகள் சான்றாக உள்ளன.70 கிலோ
கிராம் எடையுள்ள சராசரி மனித உடலை விஞ்ஞானமுறையில்
பகுப்பாய்வு செய்த போது, உடலின்மூலப்பொருட்கள் துல்லியமாகக்கண்டறியப்பட்டன.
மண்ணால் படைக்கப்பட்டவன் மனிதன் என்ற
திருக்குர்ஆனின் வசனத்தை அறிவியல் உலகம் மெய்ப்பித்தது.
ஜான் நம்ஸ்லே எழுதியுள்ள க்ளாரென்டன்பதிப்பகம்,
ஆக்ஸ்போர்ட் வெளியிட்டுள்ள திஎமண்ட்ஸ்
(மூன்றாம் பதிப்பு1998) புத்தகத்திலிருந்து மனித உடலின்
மூலப்பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவலை
வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ளமூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர,
மற்றத்தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.
மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






