29 அக்., 2018

தாய்ப்பாலின் இணையில்லா சிறப்புகள்!



*தாய்ப்பால் கொடுக்க கொடுக்கத்தான் சுரக்கும் *

  தாய்ப்பால் பற்றிய உண்மைகளைத் தெரியாதவர்கள், அதன் மீது அதிக அக்கறை இல்லாதவர்கள் எல்லாம், இஷ்டம்போல ஆலோசனைகளைச் சொல்லி, இயல்பாக நடக்க வேண்டிய ஒவ்வொன்றுக்குமே, செயற்கையான விஷயங்கள் மற்றும் பொருட்கள் மீது கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள்.  

ஹார்மோன் தூண்ட, தாய்ப்பால் சுரக்கும்!

''முதலில் வலியுறுத்த விரும்புவது, தாய்ப்பால் என்பது மனது சம்பந்தப்பட்ட விஷயம். 'ஒல்லியான தாய் என்பதால் பால் சுரக்கவில்லை’, 'குழந்தை மிகவும் குண்டாக இருப்பதால் பால் போதவில்லை’ என்ற பேச்சுக்களில் எல்லாம் துளியும் உண்மையில்லை. குழந்தை பிறந்ததும் தாய் அமைதியான மனநிலையில் இருந்து, 'குழந்தைக்கு பாலூட்ட வேண்டும்’ என்று உளப்பூர்வமாக நினைக்கும்போது, அந்தச் செய்தி மூளைக்கு தெரிவிக்கப்பட்டு, ஆக்சிடோஸின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன்தான் பால் சுரப்பதற்கு மிக முக்கியமானது. மாறாக, குழந்தை பெற்றெடுத்த தாயின் மனநிலை அமைதியில்லாமல் இருந்து, குழந்தைக்குப் பாலூட்டுவது பற்றிய நினைப்பில்லாமல், விருப்பமில்லாமல் இருந்தால், ஹார்மோன் சுரக்காது, தாய்ப்பாலும் சுரக்காது. எனவே, பிரவசத்தில் உடல், மன ரீதியாக துன்புற்று வந்திருக்கும் பெண்ணுக்குத் தேவையான அன்பையும், அமைதியையும் உடனிருப்பவர்கள் தரவேண்டும்.

பிரசவித்த தாய்மார்களுடன் உதவிக்காக இருப்பவர்கள், 'பெண் குழந்தையா போச்சு’, 'ஆபரேஷன் செய்ய வேண்டியதா போச்சு’, 'உனக்கு சுத்தமா பால் இல்ல, ஏன் குழந்தையை அழவிட்டு வேடிக்கை பார்க்குற?’'குழந்தையைத் தூக்கக்கூடத் தெரியல’ போன்ற புலம்பல்களை வெளிப்படுத்துபவர்களாக இருக்கும்பட்சத்தில், பிரபலமான பால் பவுடரின் பெயரைச் சொல்லி, அதை கலக்கி குழந்தைக்குக் கொடுக்கச் சொல்பவர்களை அங்கிருந்து மெதுவாக வெளியேற்றுவதே நல்லது.

மார்பகக் காம்பு... கவனம்!

குழந்தை பெற்ற தாய் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உடல் சுத்தம், மார்பகக் காம்புகள் சுத்தம் மற்றும் சத்தான உணவு. உடல் சுத்தம், சத்தான உணவு பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், மார்பகக் காம்பு சுத்தத்தை பொறுத்தவரை பல பெண்களும் அறியாமையிலேயே இருக்கிறார்கள். கர்ப்ப காலத்திலேயே மார்பகக் காம்புகளுக்கு உரிய பராமரிப்பை தரவேண்டும். காம்பில் புண், பிளவுகள் ஏதாவது இருந்தால் கர்ப்ப காலத்தில் செக்கப் செல்லும்போதே மருத்துவரிடம் தெரிவித்து, சிகிச்சை எடுக்கவேண்டும். சிலருக்கு இயல்பிலேயே காம்புகள் உள் அமுங்கி இருக்கும். இது குழந்தைக்கு பால் குடிக்க ஏதுவாக இருக்காது. அதனால் கர்ப்ப காலத்தில் இருந்தே குளித்து முடித்தபின் மிருதுவாக காம்புகளை வெளியே இழுத்துவிட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது பிரசவ நேரத்தில் காம்புகள் குழந்தை சப்புவதற்கு ஏதுவாக வெளிவந்திருக்கும்.  

சீம்பால் முக்கியம்!

குழந்தை பிறந்ததும் சுகப்பிரசவமாக இருந்தால் அரை மணி நேரத்துக்குள்ளாகவும், சிசேரியனாக இருந்தால் தாய் மயக்கத்தில் இருந்து கண் விழித்த பிறகு, அல்லது தாய்ப்பால் கொடுக்கும் அளவுக்கு உடல் நிலைக்கு தேறிய பிறகு பால் புகட்ட வேண்டும். பிரசவத்துக்குப் பின் முதன் முதலில் தாய்க்கு சீம்பால் (கொலோஸ்ட்ரம்) சுரக்கும். இது குறைவான அளவே சுரக்கும் என்றாலும், பிறந்த குழந்தையின் வயிறு முதல் நாள் 5 முதல் 7 மில்லி பாலையே தாங்கும் என்பதால், அந்த அளவே குழந்தைக்குப் போதுமானது. அதனால் முதல் நாளில், 'ஐயோ பால் குறைவா இருக்கே’ என்று கவலைப்பட வேண்டியதில்லை.

பிரசவத்துக்குப் பின் தாய் ஏதாவது ஆகாரம் எடுத்துக் கொண்டால்தான் பால் சுரக்கும் என்பதிலும் உண்மையில்லை. பொதுவாக, பிரசவித்த தாய்க்கு பால், இளநீர் என்று கொடுக்கச் சொல்வது, பிரசவம் எனும் பெருநிகழ்வு முடித்து வந்திருக்கும் அவர் உடலுக்கான தெம்புக்காகத்தானே தவிர, பால் சுரப்புக்காக இல்லை. எனவே, பிரசவத்துக்குப் பின் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், பால் சுரப்பு நிகழும் என்பதுதான் இயற்கையின் கொடை.

அச்சப்பட வேண்டியதில்லை அழுகைக்கு!

அடுத்ததாக, குழந்தை அழுவதைப் பார்த்துப் பதற்றப்படும் தாய்மார்கள் அநேகம். பசிக்காக அழுகிறதோ என்று நினைத்து, பால் புகட்டுவார்கள். ஆனால், பசியாறிய பின்னும் குழந்தை அழும். 'பால் பத்தலையோ’ என்றும் மீண்டும் கவலைப்படுவார்கள். காரணம் அதுவல்ல. அதுவரை தாயின் வயிற்றில் இருட்டறையில் இருந்த குழந்தைக்கு, வேளாவேளைக்கு கேட்காமலேயே ஊட்டச்சத்து கிடைத்தது. ஆனால், வயிற்றில் இருந்து வெளிவந்ததும் வெளிச்சம், சத்தம் போன்றவை எல்லாம் புதிதாக இருப்பதாலும், பசித்து அழுதால்தான் பால் கிடைக்கும் என்பதாலும், பிறந்த ஓரிரு நாட்களுக்கு தொடர்ந்தோ, விட்டு விட்டோ குழந்தை அழுவது இயல்பே. அழும் குழந்தைக்கு பால் புகட்டுங்கள். அதற்குப் பின்னும் அழுதால், பதற்றமோ கவலையோ வேண்டாம். கருவறைக்கு ஒத்த பாதுகாப்பாக, தாயின் அரவணைப்புக்குள் குழந்தையைக் கொண்டு வாருங்கள். அழுகை சில நாட்களில் சரியாகிவிடும்.

பால்சுரப்பு அதிகரிக்க..!

அடுத்ததாக, பிரசவத்தை தொடர்ந்த நாட்களில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்ய வேண்டியவற்றைப் பார்ப்போம். குழந்தை தாய் மார்பை சப்ப சப்பதான் பால் சுரப்பு அதிகமாகும். எனவே, தாய்ப்பால் குறைவாக இருக்கிறது என்று தோன்றினாலும், தொடர்ந்து குழந்தைக்கு பால் புகட்டியபடியே இருங்கள். அது பால் சுரப்பை தானாகத் தூண்டும். ஒருவேளை சிலருக்கு மிகமிகக் குறைந்த அளவே பால் சுரப்பு உள்ளது அல்லது சுரக்கவே இல்லை (இது மிக அரிதாகவே நிகழும்) எனில், மருத்துவரின் ஆலோசனைப்படி அந்தத் தாய் பால் சுரப்புக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்'' என்ற டாக்டர்,  

தாய்ப்பாலின் இணையில்லா சிறப்புகள்!

தாய்ப்பால் உன்னதமானது, சுத்தமானது, சத்துக்கள்  நிரம்பியது. தாய்ப்பாலில் எனர்ஜி, புரோட்டீன்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளதுடன், இது நிமோனியா, டயரியா, அலர்ஜி போன்றவற்றில் இருந்து குழந்தையைக் காக்கிற எதிர்ப்பு சக்தியினை தரவல்லது. தாய்ப்பால் பருகும் குழந்தைகள் மற்ற பால் அருந்தும் குழந்தைகளைவிட திறமையானவர்களாக இருக்கிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாட்டுப் பால் என்பது, அதன் கன்றுக்கானது. உலகத்தில் எந்த ஜீவராசியும் தன் குழந்தைக்கு மற்ற உயிரினத்தின் பாலை தருவதில்லை. ஆனால், நாம் மட்டும்தான் நம் குழந்தைகளுக்கு மாடு, தன் கன்றுக்காக சுரக்கும் பாலை அபகரித்துத் தருகிறோம். பால் பவுடர்களும் மாட்டின் பால் மற்றும் இன்ன பிற பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுவதுதான். இதன் விலையும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பசும்பால், பால் பவுடர் தயாரிப்புகளின்போது ஏற்படும் தவறுகளால் வயிற்றுப்போக்கு, வாந்தி என குழந்தைகளுக்கு அசௌகரியங்களும் ஏற்படலாம்.

எனவே, எண்ணிலடங்கா மற்றும் ஈடு இணையற்ற சத்துக்கள் நிரம்பிய தாய்ப்பாலை தங்கள் குழந்தைக்குக் கிடைக்கச் செய்வது ஒவ்வொரு தாயின் கடமை. ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது, தண்ணீர் கூட கொடுக்கத் தேவையில்லை. குழந்தைக்கான ஊட்டச்சத்து மட்டுமல்ல... பாலூட்டுவதால் தாய்க்கு ஏற்படும் பலன்களும் பல. தாய்ப்பால் கொடுக்கும்போது பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகான ரத்தப்போக்கு நிற்பதோடு, தொடர்ந்து தாய்ப்பாலூட்டி வருவது குறைந்தது ஆறு மாதங்களுக்கு தாய் கருத்தரிப்பதையும் தவிர்க்கிறது. மேலும், தாயின் உடல் எடை இயல்பு நிலைக்குத் திரும்பவும் பாலூட்டுவது அவசியமாகிறது'' என்று வலியுறுத்திய டாக்டர்...

''மொத்தத்தில் கருவுற்றிருக்கும்போதே, 'என் குழந்தைக்கு நான் தாய்ப்பால் மட்டுமே தருவேன்’ என்கிற உறுதியை தாய்மார்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்!''

16 அக்., 2018

பிரண்டை மருத்துவ குணம்

பிரண்டை சூரணம்.

   (1)   தேவையான அளவு பிரண்டை வாங்கி வந்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் மோரில் ஊறப் போடவும்.

மறுநாள் காலை மோரை வடித்து கொட்டி விட்டு பிரண்டையை மட்டும் வெயிலில் காய வைக்கவும் .

ஒவ்வொரு நாளும் புதிய மோர் பயன்படுத்தவும் .

இவ்வாறு ஏழு நாட்கள் செய்த பின்
மோரில் ஊற வைக்காமல் பிரண்டையை மட்டும் நன்கு வெயிலில்
காய வைத்து நன்கு காய்ந்த பின் எடுத்து  அரைத்துத் தூளாக எடுக்கவும்.

2. சுக்குத் தூள்

தேவையான அளவு சுக்கு எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து தூள் செய்து கொள்ளவும்

3. நாட்டு சர்க்கரை  கடைகளில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளவும்.

பிரண்டை
சுத்தி செய்த
சுக்குத் தூள்
நாட்டு சர்க்கரை
ஆகிய மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்துக் கலந்து  ஒரு பாட்டிலில்  சேமித்து வைக்கவும்.

இந்த  சூரணத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து

நாள்தோறும் காலை இரவு  குடித்து வர

மூட்டு வலி வீக்கம்

எலும்பு தேய்மானம்

இடுப்பு எலும்பு வலி

தோள்பட்டை வலி

போன்ற நோய்கள் படிப்படியாகக் குணமாகும்.

  குறிப்பு

பிரண்டை சூரணமும்
சுத்தி செய்த சுக்குத் தூளும் நாட்டு மருந்துக் கடைகளில் தயார் நிலையில் கிடைக்க வாய்ப்புள்ளது.

அப்படிக் கிடைத்தால் மூன்று பொருட்களையும் சம அளவு நாட்டு மருந்துக் கடைகளில் இருந்து வாங்கி வந்து ஒன்றாக சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்......

2 செப்., 2018

26 மார்., 2018

சிறுநீரகங்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!!!

சிறுநீரகங்களைப்பற்றி  ஒவ்வொருவரும் கட்டாயம்   தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்!!! 

தற்போது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால், பலரும் சிறுநீரக நோய்களுக்கு உள்ளாகின்றனர்.

 உடல் உறுப்புக்களில் மிகவும் முக்கியமான ஒன்று தான் சிறுநீரகம்.
இந்த சிறுநீரகம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பல பணிகளை செய்கிறது. 
அதில் பலரும் அறிந்தது, சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை பிரித்து இரத்தத்தை சுத்தம் செய்யும் என்பது மட்டும் தான்.
ஆனால் சிறுநீரகம் வேறுசில பலரும் அறிந்திராத பணிகளையும் செய்து வருகிறது.   ஒருவருக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்படுவதற்கு  இரத்த அழுத்தமும், நீரிழிவும் முக்கிய காரணமாக உள்ளது.  
இந்த இரு பிரச்சனைகளும் கொண்டவர்களுக்கு சிறுநீரக நோய்கள் எளிதில் தாக்கக்கூடும். சரி, இப்போது சிறுநீரகங்களைப் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் பற்றி பார்ப்போமா!!!

 திரவ அளவு   சிறுநீரகங்கள் உடலின் திரவ அளவை நெறிப்படுத்த உதவும். டாக்ஸின்களை வெளியேற்றும் சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் டாக்ஸின்களை பிரித்தெடுத்து, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.  இரத்த அழுத்தத்தை சீராக்கும்  சிறுநீரகங்கள் ரெனின் என்னும் ஹார்மோனை வெளிப்படுத்தி, உடலின் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். 

ஆரோக்கியமான எலும்புகள் :  எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு சிறுநீரகங்கள் தான் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரங்கள் தான் வைட்டமின் டி-யை செயல்படுத்தி, எலும்புகளில் கால்சியம் சத்தை பராமரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. 

இரத்த சிவப்பணுக்கள்  சிறுநீரகங்கள் எரித்ரோபொயட்டின் என்னும் ஹார்மோனைத் தூண்டி எலும்புமஞ்சையில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது.  கனிமச்சத்துக்களை பராமரிக்கும்   சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கனிமச்சத்துக்களான சோடியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்தின் அளவை சீராக பராமரிக்கும். 

30 நிமிடத்திற்கு ஒருமுறை வடிகட்டும் சிறுநீரகங்கள் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒருமுறையும், உடலின் ஒட்டுமொத்த இரத்தத்தையும் வடிகட்டி, கழிவுகள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றும். 

ஒரு சிறுநீரகம் போதும்   மனிதன் உயிர் வாழ்வதற்கு 2 சிறுநீரகங்கள் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஒரே ஒரு சிறுநீரகம் இருந்தால் போதும்.  நீளம் மற்றும் எடை  சிறுநீரகங்கள் ஒவ்வொன்றும் 4.5 இன்ச் நீளமும், 5 அவுன்ஸ் எடையும் கொண்டிருக்கும்.  50 கேலன் இரத்தம் சுத்தமாகும்  ஒவ்வொரு நாளும் சிறுநீரகமானது 50 கேலன் இரத்தத்தை 140 மைல் குழாயின் மூலம் வடிகட்டுகிறது.

5 ஜன., 2018

13 அக்., 2017