26 டிச., 2012

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம், தெரியாத உண்மை!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை, இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது...

1) பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

2) சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு, அபாயகரமான அல்லது
வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

3) சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

4) ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

5) ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.

6) ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

7) கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

8) நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

9) வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

10) கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

11) நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் அப்சர்வ் செய்கிறது, விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

12) நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் சிக்னல் இல்லாத இடங்களிலும் மொபைலின் கீ லாக் செய்யப்பட்ட நிலையிலும், ஏன் சிம்கார்டு இல்லாத நிலையிலும் கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம், மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்

மனித கண்களை பற்றிய சில உண்மைகள்

1] ஒரு சராசரி மனிதன் நிமிடத்துக்கு பன்னிரண்டு முறை கண்
  சிமிட்டுவான்.

2] 2 மில்லியனுக்கும் அதிகமான வேலை செய்யும் பாகங்களை
   கொண்டது.

3] மனிதனுடைய கண் 576 மெகா பிக்சல்.


4] விழி வெண்படலம் திசுக்களுக்கு மட்டுமே ரத்தம் தேவை இல்லை.

5] இது 36000 பிட் தகவல்களை ஒரு மணி நேரத்திற்கு செயல்படுத்த   

   முடியும்.

6] மனிதனின் கண் விழிகள் ஏறத்தாழ 28 கிராம் எடை கொண்டது.

7] கண்ணை துறந்துகொண்டு இரும முடியாது.

8] மனிதன் ஒரு நாளைக்கு 10,000 முறை கண் சிமிடுகிறான்.

மறு பிறவியின் மாயைகள் உண்மையா???

இந்தியாவில் வாழும் சிலர் மறு பிறவி உள்ளதாக நம்புகின்றனர். இப்படி ஒரு தத்துவம் இருக்க முடியுமா? அப்படி இருந்தால் அது இந்த உலகத்திற்கு நன்மை பயக்குமா? அறிவுக்கு ஏற்றதா? என்பது போன்ற கேள்வி களுக்கு பதில் இல்லை எனபதே உண்மை.

ஒரு குட்டி கதையும் அது உணர்த்தும் சம்பவமும்.
ஒரு முற்றும் துறந்த முனிவர் ஒரு சிறுவனை கண்டார். அச்சிறுவனோ ஒரு நாயை கடுமையாக துண்புறுத்திக் கொண்டிருந்தான் அப்போது அந்த முனிவர் அச்சிறுவனை நோக்கி ஏன் இந்த நாயை துண்புறுத்துகின்றாய்
அது ஒரு வாயில்லாத ஜீவன் தானே என்று முனிவர் கேட்டார்.
அதற்கு அச்சிறுவன் என்ன முனிவரே உங்களுக்கு தெரியாதா?
போன ஜென்மத்தில் நான் நாயாகவும் நாய் நானாகவும் இருக்கும் போது இப்படித்தான் செய்தது அப்போது(அந்த ஜென்மத்தில்)யாறும்
கேட்க வில்லை இப்போது ஏன் கேட்கின்றீர் என்றான் அச்சிறுவன்
உடனே முனிவர் வாயடைத்துப் போனார். அச்சிறுவனுக்கு படிக்கும் நீங்களாவது பதில் சொல்லலாமே?????????????????????

இப்போ கேள்வி என்னவென்றால் உதாரணமாக இந்தியாவை
மனுதர்மம் ஆளுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

ஒருவன் ஒரு பெண்னை கற்பழிக்கின்றான் என்று வைத்துக்கொள்ளுங்கள் கையும் மெய்யுமாக பிடித்தாலும் அவனைதண்டிக்க முடியாது ஏன்? அவன் சொல்வான் போன ஜென்மத்தில்நான் அவளாகவும் அவள் நானாகவும் இருக்கும் போது இப்படித்தான்நடந்த்து என்பான்.அப்போது(அந்த ஜென்மத்தில்)யாறும்கேட்க வில்லை இப்போது ஏன் கேட்கின்றீர் இப்படி இது போன்றஅனைத்து தீமைகளையும்செய்து விட்டு இப்படியே ஒவ்வருவரும் சொன்னால் இந்தியா என்னகெதியாகிவிடும் என்பதை அறிவுடையோர் சிந்திக்க வேண்டும்.....???
    மேலும் அதிக விபரத்திற்காகவும் சிந்திப்பவர்களுக்காகவும்
சில கேள்விகள்

மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்துவிடலாம்.
அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும்அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்தப் பிறவியில் ஒருவன்நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான்.
இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக்கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர்.
நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும்பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதேபோன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக் கவனியுங்கள்.
இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்குமுன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர்தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.
மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும்.
அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்துஎத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காகஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகைஉயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒருகோடி உயிரினங்கள் இருந்திருக்கும்.
மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடிஉயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக,மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாகஇருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதியஉயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.
பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடிமக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும்.80 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும்அதிகமாகியுள்ளன.
புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும்பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்குஇதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.
அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப்பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன?
இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால்மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.
ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனைவழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாகஇருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது.
இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில்இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையைஅடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப்பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?
ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலைசெய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில்அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பதுதண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறுதீர்ப்பளிக்கிறது.
அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பதுஎனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாகஇருக்குமா?
எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறு பிறவி சரிப்பட்டு வரவில்லை. காரண காரியத்தோடுஅலசினாலும் சரிப்பட்டு வரவில்லை.

இஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா!

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் ல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். அல்குர்-ஆன் 24 : 2

திருமணம் முடித்த ஒரு நபர் விபச்சாரம் செய்ததற்காக அவருக்கு மரண தண்டணை வழங்கச் சொல்லி நபிகளார் உத்தரவிட்டார்கள். (புகாரி : 6828 ஹதீஸின் கருத்து)

குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினால்தான் குற்றங்கள் குறையும் என்பதும், அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சரியான நீதி கிடைக்கும் என்பதும்தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

குற்றச் செயல்களுக்கு திருக்குர்-ஆன் கூறும் தண்டனைகளை அதிமேதாவிகளும், அறிவுஜீவிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்வோரும் விமர்சனம் செய்து வந்தனர்.

திருடியவர்களுக்கு கையை வெட்டுதல், விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு கசையடி மற்றும் கல்லால் எறிந்து அவர்களை கொலை செய்யும் சட்டங்கள், கொலைக்குக் கொலை, கண்ணுக்கு கண், பல்லுக்குப்பல் என்று இஸ்லாம் கூறும் தீர்வுகள் காட்டுமிராண்டித்தனமானவை. அவைகள் மனித நேயத்திற்கு எதிரானவை.

இஸ்லாம் வழங்கச் சொல்லும் தண்டனைகள் மனிதத்தன்மை அற்றவை. இந்தச் சட்டங்களை பின்பற்றச் சொல்லிவரும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஈவு இரக்கமற்றவர்கள்; பழமைவாதிகள்; அடிப்படைவாதிகள்; பிற்போக்குவாதிகள் என்று குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசினர் இந்த அதிமேதாவிகள்.

எந்த நாவினால் இஸ்லாத்தைக் குறைகூறினார்களோ! எந்த நாவு இந்த சட்டங்களெல்லாம் மனிததன்மையற்ற செயல்கள் என்று சொன்னதோ அதே நாவுகள் இப்போது இஸ்லாம் கூறும் இத்தகைய சட்டங்கள்தான் தற்போது வேண்டும் என்று சொல்கின்றன. வல்ல இறைவன் அவர்களை அவ்வாறு சொல்லவைத்துள்ளான்.

*டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம்:*

கடந்த 16.12.12 அன்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் தனது ஆண் நண்பருடன் நள்ளிரவில் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு திரும்பினார். அவர்கள் இருவரும் கதவுகள் மூடப்பட்ட சொகுசுப்பேருந்தில் பயணித்தனர். அப்போது அந்த 23 வயது மருத்துவக்கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை தாக்கிய
ஐந்து பேர் கொண்ட கும்பல் அதே பேருந்தில் இருந்த அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது. இதைத் தடுக்க முயன்ற அவரது நண்பரை அந்தக் கும்பல் அடித்து தூக்கி வெளியே வீசி விட்டது.

பின்னர் அந்தப் பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் ஒரு பாலத்தில் வீசிச் சென்றுள்ளது. அப்பெண் தற்போது அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியை
பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் அடக்கம்.

(குறிப்பு : மருத்துவக்கல்லூரி மாணவி நள்ளிரவில் ஆண் நண்பருடன் ஊர் சுற்றியது குறித்த தகவல்களை எந்த மீடியாக்களும் கண்டுகொள்ளவுமில்லை; கண்டிக்கவுமில்லை. அதுகுறித்த தகவல்கள்
“பதில்கள்” பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதையும் காண்க..)

தற்போது இந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் போடவேண்டும் என இந்தியா முழுவதுமுள்ள அனைவரும் ஒருமித்து குரல்
எழுப்பியுள்ளார்கள். போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்தப் பெண்ணை கற்பழித்த கயவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று மாதர் சங்க அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும்
இவ்வாறு அவர்களுக்கு வழங்கப்படும் தூக்குதண்டனையை அனைவரும் காணும் வகையில் நிகழ்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டத்தில் குதித்த மாணவிகள் வைத்துள்ளனர்.

*இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வரச் சொல்லும் பா.ஜ.க:*

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சம்பவத்தைப்பற்றி நீண்ட நேரம் விவாதம் நடந்துள்ளது. நாடாளுமன்ற அவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவராக உள்ள பா.ஜ.க.வைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ், மாணவியை பலாத்காரம் செய்த இளைஞர்களை தூக்கிலிட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார். அதே கோரிக்கையை அ.தி.மு.க சார்பில் மைத்ரேயன் வைத்துள்ளார்.

எந்தவிதமான எதிர்ப்புமின்றி அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்தக் கோரிக்கையை வரவேற்றுள்ளனர். உள்துறை அமைச்சர் ஷிண்டேவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்று இஸ்லாம் கூறிய சட்டம் காட்டுமிராண்டித்தனம் என்று கூறியவர்கள்தான் தற்போது இஸ்லாம் கூறும் தீர்வை அரசியலமைப்புச்
சட்டமாக வடிவமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் இஸ்லாம் கூறும் தீர்வை நோக்கி திரும்பியுள்ளது. இஸ்லாம் கூறும் தீர்வுதான் அனைத்து பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வாக அமையும் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் சேர்ந்து தற்போது நிரூபித்துக் கொண்டுள்ளது.

கற்பழிப்பு என்பது பெண்ணின் சம்மதம் இல்லாமல் நிகழ்த்தப்படும் கொடூரச் செயல். விபச்சாரம் என்பது ஆண் பெண் இருவரும் இணைந்து இருவரும் சம்மதித்துச் செய்யும் ஈனச்செயல். கற்பழிப்புக்கு மரணதண்டனை வழங்கச் சொல்லும் இவர்கள் வெகுவிரைவில் விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண் பெண் ஆகிய அனைவருக்கும் பாகுபாடின்றி மரணதண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை
வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

*இதுமட்டுமே தீர்வாகுமா?:*

கற்பழிப்பு நிகழ்த்தியவர்களுக்கு மரணதண்டனை வழங்குவது மட்டுமே இந்த சம்பவங்களுக்கு முழுமையான தீர்வாக அமையாது. மாறாக பாலியல் ரீதியான குற்றச் செயல்களை தூண்டிவிடக்கூடிய வகையில் அமைந்துள்ள அனைத்து மானங்கெட்ட செயல்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நிறுத்தப்பட்டால்தான் இதுபோன்ற குற்றச்செயல்கள் குறையும். இஸ்லாம் அதற்கான வழிகாட்டுதல்களையும் தெளிவாக வழங்குகின்றது.

*இஸ்லாம் காட்டும் வழிமுறைகள்:*

ஆண்களும் பெண்களும் தங்களது பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்

பெண்கள் ஆண்களுடன் குழைந்து பேசக்கூடாது

அந்நிய ஆண்களுடன் பெண்கள் தனித்திருக்கக் கூடாது

பெண்கள் தங்களுக்கு மணம் முடிக்கத்தடை செய்யப்பட்ட ஆண்களைத்தவிர மற்றவர்கள் முன்னிலையில் தங்களது உடல் அழகை வெளிக்காட்டக்கூடாது. பர்தாவைப் பேண வேண்டும்.
இதையும் மீறி யாரேனும் விபச்சாரம் செய்து பிடிபட்டு, அது தகுந்த 4 சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டால் அவர் திருமணம் முடிக்காதவராக இருந்தால் அவரை நூறு கசையடி அடிக்க வேண்டும்.

திருமணம் முடித்தவராக இருந்தால் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். அதை ஒருசாரார் பார்க்க வேண்டும்.

மேற்கண்ட விஷயங்களை சரியாக கடைப்பிடித்தாலே பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு பெண்கள் ஆளாவதை தடுத்துவிடலாம். எய்ட்ஸ் நோயும் பரவாது. எய்ட்ஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கலாம்.

ஆனால் நம் நாட்டில் விபச்சாரத்தை தூண்டிவிடக்கூடிய அத்தனை விஷயங்களுக்கும் லைசென்ஸ் கொடுத்து அவிழ்த்துவிட்டுவிட்டு, இவர்களே பெட்ரோலை ஊற்றி நெருப்பையும் பற்ற வைத்துவிட்டு
அய்யகோ! எரிகின்றதே! என்று கூப்பாடு போடும் நிலைதான் தற்போது நிலவி வருகின்றது.

அதற்குரிய ஆதாரத்தை வேறெங்கும் தேடத்தேவையில்லை. இந்த கற்பழிப்பு செய்தியை கண்டித்த போது பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்வே இதற்குச் சான்று பகர்கின்றது.

*வேதம் ஓதும் சாத்தான்கள்:*


மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டது குறித்து ஹிந்தி நடிகையும், கூத்தாடி அமிதாப்பச்சனின் மனைவியுமான ஜெயாபச்சன் எம்.பி பேசும்போது கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், இந்த நாடாளுமன்றத்தில் உட்கார எனக்கு அவமானமாக உள்ளது.

அடிப்படையில் நான் ஒரு கலைத் துறையைச் சேர்ந்தவள் என்பதால் இந்த சம்பவத்தால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.

எல்லோரும் ஓரிரு நாளில் இந்த சம்பவத்தை மறந்து விடுவார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுவதும் அந்த துயரம் துரத்தி வரும், ஆறாத வடுவாக அது கூடவே இருக்கும்.

மனதளவில் அந்தப் பெண் எவ்வளவு துயரத்தை அனுபவிப்பார். இதற்கெல்லாம் எப்படி ஈடு செய்ய முடியும் என்று கூறியபடி அவர் அழுதுள்ளார் என்று மீடியாக்கள் மிகவும் சோகத்துடன் செய்தி
வெளியிட்டுள்ளன.

இதுபோன்ற மானக்கேடான விஷயங்கள் பரவுவதற்கும், மக்களில் பெரும்பாலானோர் காமவெறி பிடித்த மிருகங்களாக மாறுவதற்கும் ஜெயா பச்சன் போன்ற நடிகைகள் தங்களது சதையை வெளிக்காட்டி ஆட்டம் போடுவதுதான் காரணம் என்பதை யாராலும் மறுக்க இயலுமா? எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஆட்டோ டிரைவரோடு ஓடக்கூடிய அவலங்களுக்குக் காரணம் இது போன்ற நடிகைகள் தங்களது கல்லாவை நிரப்பிக்கொள்வதற்காக ஆபாசமாக நடிக்கும்
திரைப்படங்களும், மெகா சீரியல்களும்தான் என்பதை யாராவது மறுப்பார்களா?

விபச்சாரத்தை தூண்டக்கூடிய வகையில் சதை வியாபாரம் நடத்தும் இத்தகைய சதை வியாபாரிகள்தான் நாட்டில் நடக்கும் கற்பழிப்புகள் உள்ளிட்ட அனைத்துவிதமான பாலியல் ரீதியான குற்றங்களுக்கும் காரணம் எனும்போது காரியத்திற்குக் காரணமான அடிப்படைக் காரணத்தைக் களையாமல் காரியத்தை மட்டும் கண்டித்து எந்தப்பலனும் இல்லை.

எனவே இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டுமெனில் விபச்சாரத்திற்கு இஸ்லாம் கூறும் தண்டனைகளை வழங்குவதுடன் அதைத்தடுக்க இஸ்லாம் காட்டும் வழிமுறைகளையும்
அனைவரும் கையாள்வதே சரியான தீர்வாக அமையும்.

மேலும் விபரங்களுக்கு

http://www.onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/islamiya-satathai-nokki-india/

பாலியல் ரீதியாக பெண்கள் துன்புறுத்தப்படுவதற்கு காரணம்?

பாலியல் ரீதியாக பெண்கள் துன்புறுத்தப்படுவதற்கு ஆடைகள் முக்கிய காரணமாக உள்ளது என்பதை மறுக்கக் கூடியவர்கள் உடைதான் காரணம் என்றால் ஆறு வயது சிறுமி ஏன் பாலியல் வன்முறைக்கு ஆளாக வேண்டும் என்று எதிர்க் கேள்வி கேட்கின்றனர். குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே நல்ல தொடுதல் எது; கெட்ட தொடுதல் எது என்று கற்பிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.
இது சரியா? - சபுரா, சார்ஜா

சிந்தனைக் குறைபாடு காரணமாகவே இதுபோன்ற வாதங்களை முன் வைக்கிறார்கள். பெண்களின் ஆடைகள் காரணமாக பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது என்ற வாதம் பெரும்பான்மையாக அப்படி நடக்கிறது என்ற கருத்தில்தான் வைக்கப்படுகிறது.

அது மட்டுமே ஒரே காரணம் என்ற அர்த்தத்தில் வைக்கப்படுவதில்லை. இது அனைவருக்கும் தெரிந்தாலும் வேண்டுமென்றே அறியாதது போல்
நடித்துக் கொண்டு மேற்கண்ட வாதம் முன்வைக்கப்படுகிறது.

பீடி, சிக்ரெட், புகையிலை பான்பராக் பயன்படுத்தினால் கேன்ஸர் வரும் என்று மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கூறுகிறார்கள்.

மேற்கண்டவைகளைப் பயன்படுத்தாதவர்களுக்கு ஏன் கேன்ஸர் வருகிறது?

மேற்கண்ட பழக்கம் உள்ள அனைவருக்கும் ஏன் வரவில்லை என்று வாதம் வைத்து தாராளமாக புகையிலைப் பொருளை பயன்படுத்துங்கள் என்று அறிவாளிகள் சொல்லமாட்டார்கள்.

ஏடிஸ் என்ற கொசுவின் மூலம் டெங்கு காய்ச்சல் வருகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

டெங்கு காய்ச்சல் வந்த குழந்தையின் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு ஏன் டெங்கு வரவில்லை? அந்த வீட்டில் உள்ள கொசு மற்றவர்களையும் கடித்திருக்காதா? அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் ஏன் வரவில்லை? எனவே ஏடிஸ் கொசுவை தாராளமாக உற்பத்தி செய்யுங்கள் என்று மூளையுள்ள யாரும்
வாதம் செய்யமாட்டார்கள்.

இது போல் ஆயிரமாயிரம் விஷயங்களை சரியாக புரிந்து கொள்ளும்போது இந்த விஷயத்தில் மட்டும் ஏறுக்குமாறாக சிந்திக்கின்றனர்.

ஒரு பெண் ஆண்களுக்கு வக்கிர எண்ணத்தைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்தால் ஆண்களுக்கு சலனம் ஏற்படுமா? ஏற்படாதா?

தனிமை கிடைத்தால் அந்தப் பெண் சீரழிக்கப்படுவாளா? இல்லையா?

உடற்கூறு நிபுணர்களும் இவ்வாறு ஏற்படும் என்கிறார்கள். நடை முறையிலும் இவ்வாறு நடப்பதை நாம் காண்கிறோம்.

கல்வி அறிவு கொடுத்தால் மதவெறி ஒழியும் என்று கூறுகிறார்கள். கல்வி அறிவு உள்ளவர்களே மதவெறி இயக்கங்களை உருவாக்கி வழிநடத்துவதால் கல்வியால் மதவெறி ஒழியாது என்று வாதம்
வைக்கலாமா?

படிப்பறிவு இல்லாததே குற்றங்களுக்குக் காரணம் என்று கூறினால் குற்றங்கள் செய்யும் படித்தவர்களின் பட்டியலை வாசித்துக் காட்டி படிப்பே தேவையில்லை என்று வாதிட்டால் அது சரியாகுமா?

பெண்களின் கவர்ச்சியான உடை ஆண்களை ஈர்க்கும் என்பது இயல்பானது. இவ்வாறு ஈர்க்கப்படும் ஆண்களில் அதிகமானவர்கள் சலனப்படுவதுடன் போய்க் கொண்டு இருப்பார்கள். ஆனால் சிலர்
சலனத்துக்கு ஏற்ப காரியத்திலும் இறங்கி விடுவார்கள். அப்படி இறங்கினால் அந்தச் சம்பவத்துக்கு நிச்சயம் ஆடைதான் காரணம். இந்தக் கருத்தில் சொல்லப்படுவதைத் தான் முற்போக்காளர்கள் திசை திருப்புகிறார்கள்.

இப்படி வாதிடுவோர் பெண்களை பலவாறாக ரசித்து இன்புறும் நோய்க்கு ஆளானவர்களாக இருக்க வேண்டும் அல்லது பெண்கள் பால் ஆர்வமில்லாத ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அல்லது எதையும் மேலோட்டமாக மட்டுமே பார்க்கும் அறிவிலிகளாக இருக்க வேண்டும்.

சராசரி மனிதனுக்கு மேலாக காமவெறி தலைக்கேறிய மிருகங்களும் மனித வடிவில் நடமாடுகின்றனர்.

அவர்களுக்கு சிறுமியாக இருந்தாலும் கிழவியாக இருந்தாலும் முழுமையாக ஆடை அணிந்தவராக இருந்தாலும் எல்லாம் ஒன்றுதான்.இத்தகையவர்களால் சிறுமிகள் சீரழிக்கப்படுவதை
இவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் ஒருவகை மனநோயாளிகள் என்பது கூட இவர்களுக்குத் தெரியவில்லை.

சராசரி மனிதன் அழகான கவர்ச்சியான பெண்களால்தான் ஈர்க்கப்படுவான்.

சராசரிக்கும் கீழே உள்ளவன் பிணத்துடன் கூட உறவு கொள்வான். இவனை அறிவுடையோர் ஆதாரமாகக் காட்டி பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி வாதிடமாட்டார்கள்.

நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்பதை சிறுமிகளுக்கு புரிய வைக்க முடியுமா என்பது ஒரு புறமிருக்கட்டும் . புரிய வைக்க முடியும் என்றாலும் அதனால் என்ன நன்மை? புரிந்து கொள்வதால் மட்டும் மனித மிருகங்களிடமிருந்து தப்பிக்க முடியுமா? சிறுமிகளின்
விருப்பத்துடன் தான் சீரழிவுகள் நடக்கின்றதா? அல்லது கதற கதற சீரழிக்கப்படுகிறார்களா?

சிறுமிகள் என்பது உடல் ரீதியாக பருவமடையாத சிறுமிகளையும் எடுத்துக் கொள்ளும். உடல் ரீதியாக பருவம் அடைந்து நாட்டின் சட்டப்படி மேஜராக ஆகாத 18 வயதுக்கு உட்பட்டவர்களையும்
எடுத்துக் கொள்ளும்.

முதல் வகை சிறுமிகளுக்கு பாலியல் சேட்டைகளால் துன்பம் ஏற்படுவதால் கெட்ட தொடுதல் என்பது தெரிந்துவிடுகிறது. ஆனாலும் மனித மிருகங்களிடமிருந்து அவர்களால் தப்பிக்க முடியவில்லை.

பருவமடைந்த சிறுமிகள்(?) என்றால் கெட்ட தொடுதலை நல்ல தொடுதல் என்று நம்பித்தான் பெரும்பாலும் உடன்படுகிறார்கள். 15வயதுப் பெண் இவனோடுதான் வாழ்வேன் என்று அடம்பிடிக்கும்
சம்பவங்களே இதற்குச் சான்றாகவுள்ளது.

எனவே முற்போக்காளர்கள் என்பவர்கள் மேலோட்டமாக மட்டுமே சிந்திக்கிறார்கள். இவர்கள் அறிவுடையோர் அல்ல.

http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/unarvu-qa-17-18/

தினமும் இரண்டு வேளை பல் தேய்த்தால்...........

தினமும் இரண்டு வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு வராது.

காலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதயத்தில் ரத்தம் உறையும் நோய் ‘த்ராம்போசிஸ்’ எனப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் லண்டனில் உள்ளது. மாரடைப்பு, ஸ்டிரோக் வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அதில் தெரியவந்த தகவல் பற்றி இதய சிகிச்சை நிபுணர் விஜய் காக்கர் கூறியதாவது:

உடலில் தேவையற்ற கொழுப்பு, லிப்பிட் பொருட்கள் அதிகமானால் ரத்தக்குழாயில் அவை படிகின்றன. ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்துகின்றன என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது. கொழுப்பு, லிப்பிட் மட்டுமல்ல.. வைரஸ் கிருமிகள் மற்றும் நோய்த் தொற்றுகளால்கூட மாரடைப்பு ஏற்படும். பெரும்பாலும் கிருமித் தொற்று பல்லில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.

வாய் வழியாக வயிற்றுக்குள் போய்விடும் உணவுப் பொருட்கள் செரிக்கப்பட்டு சக்தியாகவும் சத்துகளாகவும் மாறுகின்றன. பல்லில் படியும் உணவுத் துகள்கள் கிருமிகளாக மாறுகின்றன. ஒழுங்காக பல் தேய்க்காவிட்டால் இவை உள்ளே சென்று படிப்படியாக மாரடைப்பு உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். தினமும் 2 வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு, ஸ்டிரோக் வரும் வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை குறையும். இதயம் பலமாக இருக்கும்.இவ்வாறு இதய நிபுணர் விஜய் கூறினார்.

25 டிச., 2012

இன்று ஒரு தகவல்

கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி...

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.

ஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.

இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.

இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.

2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.

3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.

         ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,

இளைஞனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதணால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.

இளைஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.

என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆனால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்.

21 டிச., 2012

ஸ்கைப்-ல் நம் குரலை மாற்றி ( Skype Voice Change) வேறு குரலில் பேச

இணைய உலகில் கிடைக்கும் பல நண்பர்க்ளில் ஆண் யார் , பெண் யார் என்று கண்டுபிடிப்பது பல நேரங்களில் தவறாகவே இருக்கிறது. சில நபர்க்ள் தங்களை பெண் என்று அறிமுகம் செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல் பேசவும் செய்கின்றனர் , பெண் குரல் தான் வருகிறது ஆச்சர்யப்படுவதற்கு இதில் ஒன்றும் இல்லை நம் குரலை மாற்றித்தர மென்பொருள்கள் பல உள்ளது அதே போல் இப்போது ஸ்கைப் (Skype) தங்கள் குரலை மாற்ற ஒரு அப்ளிகேசன் இருக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


வெளிநாட்டில் எனக்கு Girl friend ( பெண் நண்பர்கள் ) இருக்கின்றனர் என்று சொல்வதோடு நீயும் அவளோடு  பேசவேண்டுமா அல்லது நான் அவளோடு பேசுவதை கேட்க வேண்டுமா என்று கூறி பல போலி நபர்கள் இணையத்தில் உலாவருகின்றனர் எப்படி இது சாத்தியம் என்றால் நாம் பேசும் குரலை அப்படி மாற்றித்தர பலமென்பொருள்கள் இருக்கிறது அந்த வகையில் ஸ்கைப்-லும் நம் குரலை மாற்றிகொடுக்க ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.
தறவிரக்க முகவரி : http://www.codeplex.com/skypefx
இத்தளத்திற்கு சென்று மென்பொருளை தறவிரக்கி Skype Voice Changer என்பதை சொடுக்கி இயக்கலாம், ஸ்கைப் நம் கணினியில் நிறுவி இருந்தால் இந்த மென்பொருளை இயக்கியதும் ஸ்கைப் திறந்தால் Voice Changer Allow Access என்பதற்கு ஒகே கொடுத்தால் போதும். ஸ்கைப் நம்மிடம் இல்லாவிட்டால் நம் கணினியில் இருக்கும் ஏதாவது ஒரு ஆடியோ பாடலை தேர்ந்தெடுத்து Add effect என்பதில் ஒவ்வொரு Effect ஆக மாற்றி குரலை மாற்றலாம். பல போலியான நபர்கள் இணையத்தில் இதன் துணையுடன் தான் பெண்கள் பேசுவது போல் பேசி அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். உங்களுக்கு தெரிந்த நபர்களிடமும்  இந்தப்பதிவை கொண்டு செல்லுங்கள். இனி ஸ்கைப்-ல் யாரும் ஏமாறாமல் இருக்க இந்தப் பதிவு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

20 டிச., 2012

MS Excel ல் உங்கள் வயதைக் கண்டறிய..

       எம்.எஸ்.எக்ஸலில் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் நாட்களின் வித்தியாசத்தை ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழிப்பதன் மூலம் இலகுவாகக் கணித்து விடலாம். எனினும் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் வித்தியாசத்தை வருடங்களில் மாதங்களில் நாட்களில் எப்படி கண்டறிவது? அதற்கும் ஒரு இலகுவான வழி முறை எக்ஸ்லில் உள்ளது..
    இதற்கு எக்ஸலில் உள்ள Datedif எனும் பங்க்ஸ்ன் (function) பயன் படுத்தப்படுகிறது. இந்த Datedif எனும் பங்ஸனை = Datedif (திகதி1, திகதி2, விடை காண வேண்டிய வடிவம்) {=DATEDIF(Date1, Date2, OutputRequirement)} எனும் ஒழுங்கிலேயே வழங்க வேண்டும். OutputRequirement எனுமிடத்தில் மேற்கோள் குறிகளுக்கிடையே “Y” என வழங்கும் போது வருட வித்தியாசத்தையும் “M” என வழங்கும்போது மாதங்களின் வித்திய்சாத்தையும் “D” என்பது நாட்களின் வித்தியாசத்தையும் தரும். இங்கு திகதி1 ஐ விட திகதி2 பெரிதாக இருக்க வெண்டும் என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்..
     உதாரணமாக 8/8/1990 எனும் திகதிக்கும் 13/05/2008 எனும் திகதிக்கும் இடையில் எத்தனை வருடங்கள் உள்ளன? எத்தனை நாட்கள் உள்ளன? எத்தனை மாதங்கள் உள்ளன எனக் கணக்கிட முதலில் எக்ஸல வர்க் சீட்டில் B3 எனும் செல்லில் 08/08/1990 எனும் திகதியையும் B4 எனும் செல்லில் 13/05/2008 எனும் திகதியையும் உள்ளீடு செய்யுங்கள்.. திகதியை உள்ளீடு செய்யும்போது உங்கள் கணினியில் திகதி உள்ளீடு செய்யும் வடிவத்தையும் (Date format) கவனத்திற் கொள்ள மறந்து விடாதீர்கள் அனேகமாக் விண்டோஸில் MM/DD/YYYY (மாதம் /திகதி/வருடம்) எனும் திகதி வடிவமே இயல்பு நிலையில் இருக்கும்
அடுத்து இரண்டு திகதிகளுக்கிடையிலுள்ள வருட வித்தியாசத்தைக் கண்டறிய B6 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,”Y”) எனும் சமன்பாட்டை டைப் செய்யுங்கள். விடையாக 17 (வருடங்கள்) வரக் காணலாம். அதேபோல் இரண்டு திகதிகளுக்கிடையேயுள்ள மாதங்களின் எண்ணிக்கையைக் காண B7 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,”M”) எனவும் நாட்களின் வித்தியாசத்தைக் காண B8 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,”D”) எனவும் வழங்குங்கள்.
        இன்னும் சற்று மாறுதலாக இன்றைய திகதிக்கு உங்கள் வயது என்ன என்பதைக் கண்டறிய வேண்டுமானால் மேற் சொன்ன சமன்பாட்டில் சிறிய மாற்றத்தைச் செய்ய வெண்டும். .
         உதாரணமாக B2 எனும் செல்லில் உங்கள் பிறந்த திகதியையும் B3 எனும் செல்லில் இன்றைய திகதியையும் டைப் செய்யுங்கள். B5 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,”Y”) எனும் சமன் பாட்டை வழங்கும் போது வருட வித்தியாசம் கிடைக்கும். அவ்வாறே B6 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,”YM”) என வழங்குங்கள். வருடங்கள் நீங்களாக மாத வித்தியாசம் கிடைக்கும். B7 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,”MD”) எனும் சமன்பாட்டை வழங்க வருடங்களையும் மாதங்களையும் தவிர்த்து நாட்களின் வித்தியாச்ம் மாத்திரம் கிடைக்கும்.
இதே சமன்பாட்டை இன்னும் சற்று மாற்றி இன்று உன் வயது …வருடங்கள் … , மாதங்கள் …., நாட்கள் எனவும் காட்டலாம். அதற்கு எக்ஸ்லில் உள்ள TEXT எனும் பங்ஸனையும் பிரயோகிக்க் வேண்டும். இந்த பங்ஸன் என் பெறுமாணத்தை டெக்ஸ்டாக மாற்றி விடுகிறது.
அதற்கு வேறொரு செல்லில் =”இன்று உன் வயது ” & TEXT(B5, “0″) & ” வருடங்கள் ,” & TEXT(B6, “0″) & ” மாதம் ,” & TEXT(B7, “0″) & ” நாட்கள்.” என வழங்குங்கள். இன்று உன் வய்து 19 வருடங்கள் ,1 மாதம் ,19 நாட்கள். எனும் விடையை எக்ஸல் காண்பிக்கும். .

19 டிச., 2012

பிறப்பு, இறப்பு சான்றிதழ் ஆன்லைனில்....

Good News to get Birth / Death Certificates in ONLINE (PDF Copy) and CORRECTIONS also Possible without spending your time and money. NRI can benefit more by this service.

இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை. இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.

இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் ஆட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் பன்ணி கொள்ளுங்கள். அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு. அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மணி.

உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch

உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0

உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp

உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0

இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........

கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150

கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death - https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151

மதுரை ஆட்களுக்கு - http://203.101.40.168/newmducorp/birthfront.htm

திருச்சி ஆட்களுக்கு - https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu

திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் - http://tirunelvelicorp.tn.gov.in/download.html

எது மோசமான உணவு?


இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!!

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

        விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.

18 டிச., 2012

கடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்ஞான ஆய்வு !!

       அல்லாஹ்வின் தூதர் மூஸா கடலை இரண்டாக பிளந்தார் என்று அல் குர்ஆன் மற்றும் பைபிள் குறிபிடுகின்றது. இந்த நிகழ்வை விஞ்ஞான பூர்வமாக அளவீடுகளை கொண்டு ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞான ஆய்வு நிறுவனமான National Center for Atmospheric Research -NCAR மற்றும் அமெரிக்க பல்கலை கழகமான the University of Colorado ஆகியன இந்த சம்பவம் விஞ்ஞான பூர்வமா சாத்தியமானது என்று தெரிவித்துள்ளது. இவற்றை கம்ப்யூட்டர் கிராபிக் மூலம் விளக்கியுள்ளனர் இதில் இவர்கள் 12 மணித்தியாலங்கள் 63 மைல்கள் வேகத்தில் வீசும் காற்று இரண்டு மீட்டர் ஆழமுள்ள தண்ணீரை புறம் தள்ளகூடியது என்றும் நான்கு மணித்தியாலங்களுக்கு பாதையையும் ஏற்படுத்தும் என்பதை காட்டுகின்றனர் இந்த ஆய்வுக்கு மாற்று கருத்துகள் இன்னும் வெளிவரவில்லை.
           மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்; இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
            இந்த நேரத்தில் தானா? சற்று முன்வரை திடனாக நீ மாறு செய்துகொண்டிருந்தாய். இன்னும் குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய். எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றனர்” அல் குர்ஆன் 10: 90,91,92.

கியாமத் [இறுதி] நாளின் அடையாளங்கள்

♣ மகளின் தயவில் தாய்
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகு
ம் என்பது நபிமொழி.
• அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777, 50

♣ பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு
நாளின் அடையாளங்களில் ஒன்று” என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.
• அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777

♣ ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி
வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள்.
• நூல்: புகாரி 50

♣ குடிசைகள் கோபுரமாகும்
இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
• நூல் : புகாரி 7121

♣ விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
• நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

♣ தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
‘நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது ’எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ’தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று விடையளித்தார்கள்.
• நூல் : புகாரி 59, 6496

♣ பாலை வனம் சோலை வனமாகும்
செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக
மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது
• நூல் : முஸ்லிம் 1681

♣ காலம் சுருங்குதல்
காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.
• நூல் : திர்மிதீ 2254)

♣ கொலைகள் பெருகுதல்
கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
• நூல் : புகாரி 85, 1036, 6037, 7061

♣ நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்
பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
• நூல்: புகாரி 1036, 7121

♣ பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
• நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.

♣ நெருக்கமான கடை வீதிகள்
கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
• நூல்: அஹ்மத் 10306

♣ பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
• நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

♣ ஆடை அணிந்தும் நிர்வாணம்
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.
• நூல் : முஸ்லிம் 3971, 5098

♣ உயிரற்ற பொருட்கள் பேசுவது
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.
• நூல்: அஹ்மத் 11365

♣ பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
• நூல்: அஹ்மத் 1511

♣ தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
• நூல்: ஹாகிம் 4/493

♣ பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்
பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
• நூல்: ஹாகிம் 4/493

♣ சாவதற்கு ஆசைப்படுதல்
இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
• நூல்: புகாரி 7115, 7121

♣ இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
• நூல்: புகாரி 3609, 7121

♣ முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
‘உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ’வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)” என்று கூறினார்கள்.
• நூல்: புகாரி 3456, 7319

♣ யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது ’முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்” என்று பாறைகள் கூறும்.
• நூல்: புகாரி 2926

♣ கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் ’கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்” என்பது நபிமொழி.
• நூல் : புகாரி 5179

♣ யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.
• நூல் : புகாரி 7119

♣ கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
• நூல் : புகாரி 3517, 7117

♣ அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி.
• நூல் : முஸ்லிம் 5183

♣ எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்
கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.
• நூல் : முஸ்லிம் 5191

♣ செல்வம் பெருகும்
செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
• நூல் : புகாரி 1036, 1412, 7121

♣ ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். ’நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று எனக்குத் தேவையில்லை” என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.
• நூல் : புகாரி 1424

♣ மாபெரும் யுத்தம்
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள்
ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.
• நூல் : புகாரி 3609, 7121, 6936

♣ பைத்துல் முகத்தஸ் வெற்றி
யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!
1. எனது மரணம்
2. பைத்துல் முகத்தஸ் வெற்றி
3. கொத்து கொத்தாக மரணம்
4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில் திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு
5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்
6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம். அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள்.
• நூல் : புகாரி 3176

♣ மதீனா தூய்மையடைதல்
துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது என்பது நபிமொழி.
• நூல் : முஸ்லிம் 2451

♣ அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.
• நூல் : முஸ்லிம் 3546

♣ மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 – (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனி’லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
• அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.

♣ புகை மூட்டம்
வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும்.
• (அல்குர்ஆன் 44:10,11)

♣ உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்
பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
• அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி) நூல்: தப்ரானி

♣ யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.
• (அல்குர்ஆன் 21:96)

♣ ஈஸா(அலை) அவர்களின் வருகை
நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.
• (அல்குர்ஆன் 43:61)

♣ மூன்று பூகம்பங்கள்
(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
• அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்

♣ பெரு நெருப்பு
எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச் செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
• அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்

17 டிச., 2012

அன்பின் உறைவிடம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
அன்பின் உறைவிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் நற்குணங்களை முழுமைபடுத்தவே அனுப்பப்பட்டார்கள். நற்குணங்களின் முழு வடிவமாகத் திகழ்ந்த அவர்கள், மனித நேயத்தையும், பண்பாட்டையும், உயரிய ஒழுக் விழுமியங்களையுமே உலகிற்கு போதித்தார்கள். அவர்கள் போதனைகளுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல் தான் போதித்தவைகளை முதிலில் செயல்படுத்துபவர்களாக அவர்களே திகழ்ந்தார்கள். இதற்கு சான்றாக அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுமாறு தூதருக்கு பணிக்கின்றான்:

(நபியே! இன்னும்) ‘மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்.’ என்றும் கூறுவீராக. ‘அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்’ (என்றும் நீர் கூறுவீராக). (39: 11,12).

அல்லாஹ்வை அஞ்சுபவர்களில், பயப்படுபவர்களில் முதன்மையானவராகவே அல்லாஹ்வின் தூதர் வாழ்ந்தார்கள். அன்னாரது போதனைகளுக்கும், வாழ்க்கைக்கும் மத்தியில் எந்த ஒரு முரண்பாடும் இருக்கவில்லை.

மனித குல மேம்பாட்டிற்கும், உயர்விற்கும் அவர்கள் வழங்கிய உயரிய போதனைகளிலிருந்து சில துளிகளை மாத்திரம் இங்கு தருகின்றோம்.

அல்லாஹ்வின் முன்னிலையில் நீ சிறந்தவனாக மாறி விடு!:

‘நிச்சயமாக உங்களில் மிகச் சிறந்தவர் நற்குணமுடையவரே’ என நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், (புஹாரி).

நன்மைகளின் முழு வடிவமாக உன்னை மாற்றிக்கொள்:

நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) அறிவிக்கின்றார்: ‘நான் அல்லாஹ்வின் தூதரிடம் எது நன்மை? எது தீமை? என கேட்டேன்.அதற்கு அன்னார்: நன்மை என்பது நற்குணங்களாகும். தீமை என்பது உனது உள்ளத்தை உறுத்துவதும், அச்செயலை மக்கள் பார்த்துவிடக்கூடாது என்று வெறுக்கின்றாயே அதுவாகும்’ என பதிலளித்தார்கள். (முஸ்லிம்).

உனது நன்மையின் தட்டை கனமாக்க மிக எளிதான வழி?:

‘நற்குணத்தை விட (நன்மையின்) தராசில் கனமானது வேறு எதுவுமில்லை. உயரிய நற்குணங்களை உடையவர் அவரது நற்குணங்களின் மூலம் நோன்பாளியின், தொழுகையாளியின் அந்தஸ்தை அடைந்துவிடுகின்றார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி), திர்மிதி).

உபரியான வணக்கங்களில் ஈடுபட்டவரின் அந்தஸ்தை நீ பெற வேண்டுமா?:

‘நிச்சயமாக ஒரு இறை நம்பிக்கையாளன் தனது நற்குணங்களின் மூலம் பகல் முழுவதும் நோன்பு நோற்ற, இரவு முழுவதும் நின்று வணங்கியவரின் அந்தஸ்தை பெறுகிறார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், அபூதாவுத்).

நாளை மறுமையில் எமது உயிரை விட மேலான அல்லாஹ்வின் தூதருடன் நீ இருக்க விரும்புகின்றாயா?:
‘உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவர், மறுமை நாளில் எனக்கு மிகவும் நெறுக்கமானவர் உயர்ந்த நற்பண்புகளை உடையவரே’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள், திர்மிதி).

இன்றிலிருந்து ஒரு உண்மை முஸ்லிமாக உன்னை மாற்றிக்கொள்:

‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் பிற மனிதர்கள் ஈடேற்றம் பெற்றிருக்கின்றார்களோ அவரே உண்மையான முஸ்லிமாவார். பிறருடைய செல்வங்களுக்கும், இரத்தத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பிறர் அச்சமற்று வாழ்பவரே உண்மையான இறை நம்பிக்கையாளராவார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நஸாஈ).

நீ ஒரு உண்மையான இறை நம்பிக்கையாளனாக வேண்டுமா?:

‘தான் விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பாத வரையில் உங்களில் ஒருவர் உண்மையான இறை விசுவாசியாக முடியாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி).

அல்லாஹ் விரும்பும் மென்மையை அனைத்திலும் தெரிவு செய்:

‘நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன், அவன் அனைத்து காரியங்களிலும் மென்மையே விரும்புகின்றான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி, முஸ்லிம்).

கோபம் ஷைத்தானின் சூழ்ச்சியில் நின்றும் உள்ளது என்பதை அறிந்து விழிப்புடன் செயல்படு:

‘ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என கேட்டுக் கொண்ட போது, கோபம் கொள்ளாதீர்! என போதனை செய்தார்கள். திரும்ப திரும்ப அவர் உபதேசம் செய்யுமாறு கேட்டுக் கொண்ட போது கோபம் கொள்ளாதீர் என்பதையே போதனை செய்து கொண்டிருந்தார்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி).

வெட்கம் என்ற உயர்ந்த பண்பை உனது அணிகலனாக்கு:

‘வெட்கம் நன்மையைத் தவிர வேறெதையும் கொண்டு வர மாட்டாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி), புஹாரி, முஸ்லிம்).
‘நம்பிக்கைக்கு (ஈமானுக்கு) எழுபது கிளைகள் உள்ளன: அதில் மிக உயர்ந்தது லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை) என்பதாகும், அதில் மிக தாழ்ந்தது பாதையில் மக்களுக்குத் தொல்லை தறுபவைகளை அகற்றுவதாகும், வெட்கமும் நம்பிக்கையின் ஒரு கிளையாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி).

பிற மக்களுடன் எளிதாக நடந்து கொள்:

‘மக்களுடன் எளிதாக நடந்துகொள்ளுங்கள், மக்களுக்கு சிறமப்படுத்தாதீர்கள். மக்களுக்கு நன்மாராயங் கூறுங்கள், அவர்களை வெறுண்டோடச் செய்யாதீர்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி, முஸ்லிம்).
பேசும் ஒவ்வொரு நல்ல வார்த்தைக்கும் தர்மத்தின் கூலி இருக்கின்றது என்பதை மறந்து விடாதே:

‘நீங்கள் பேசும் நல்ல வார்த்தைகளும் தர்மமாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முத்தஃபகுன் அலைஹி).

இஸ்லாத்தின் மிகச் சிறந்த செயலுக்கு நீ சொந்தக்காரனாகி விடு:

‘ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து இஸ்லாத்தில் மிகச் சிறந்தது எது? என்று கேட்டபோது வறியோருக்கு உணவளிப்பதும், அறிந்தவர்கள், அறியாதவர்களுக்கு ஸலாம் சொல்வது (அமைதியை பிரார்த்திப்பது)மாகும்’ என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், புஹாரி).

அன்பை உனது முகவரியாக்கு!:

‘மனிதர்களுக்கு அன்பு காடடாதவருக்கு அல்லாஹ் அன்பு காட்டமாட்டான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், முஸ்லிம்).

‘எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக நீஙகள் நம்பிக்கை கொள்ளாத வரை சுவர்கம் நுழைய முடியாது, நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டீர்கள், உங்கள் மத்தியில் நேசம் உண்டகிவிடுகின்ற ஒரு செயலை அறிவித்து தரட்டுமா? உங்களுக்கு மத்தியில் அதிகம் அதிகம் ஸலாம் சொல்லுங்கள் (நேசம் உண்டாகி விடும்)’ என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், முஸ்லிம்).

‘இரு முஸ்லிம்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் (அன்புடன்) கை குளுக்கிக் கொள்வார்களானால், அவர்கள் இருவரும் பிரிந்து செல்வதற்கு முன் அந்த இருவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: பராஃ (ரலி) அவர்கள், அபூதாவூத்).

மலர்ந்த முகத்திற்கும் அல்லாஹ்விடம் நன்மை இருக்கின்றது என்பதை மறந்து விடாதே:

‘உங்களது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பது உற்பட எந்த ஒரு நன்மையான காரியத்தையும் அற்பமாகக் கருதாதீர்கள்’; என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), முஸ்லிம்).

இது நமது சமூகத்தின் முகவரியாகும்:

‘சிறியவர்களுக்கு இரக்கம் காட்டாதவரும், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தாதவரும் நம்மை சார்ந்தவர்களாக மாட்டார்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ரிப்னு ஷுஐப் (ரலி), அபூதாவூத்).

இது உனக்கு பொறுத்தமல்ல:

‘ஒரு மனிதன் தன் சகோதரனுடன் மூன்று இரவுகளை விட அதிகமாக உறவைத் துண்டித்துக் கொள்வதும், இருவரும் பாதையில் ஒருவரையொருவர் சந்தித்தால் முகம் திருப்பிக் கொள்வதும் அனுமதிக்கப்பட்டதல்ல! எவர் ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்கிறாரோ அவரே அவ்விருவரில் சிறந்தவர் ஆவார்.’ என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ அய்யூபுல் அன்ஸாரி (ரலி) அவர்கள், (ஆதாரம்: புஹாரி,முஸ்லிம்).

பெற்றோரை வெறுப்பவனே! ஒரு நொடி நின்று இதை படித்து விட்டுச் செல்!

‘நன்மைகளில் மிக உயர்ந்தது தனது தந்தையின் நண்பர்களை நேசிப்பதாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள், முஸ்லிம்).

மூக்கை நுழைத்து வீண் பிரச்சினையை விளைக்கு வாங்காதே:

‘தனக்கு தொடர்பில்லாதவைகளை விட்டு விழகி இருப்பது, இஸ்லாத்தில் மிக அழகிய செயல்களில் நின்றும் உள்ளதாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், திர்மிதி).

அல்லாஹ்வின் அருள் யாருக்கு?:

‘பொருளை விற்கும்போதும், வாங்கும்போதும், கடனை அறவிடும்போதும் சிறந்த முறையில் நடந்துகொண்டவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), புஹாரி).

கடன் கொடுத்தவர்களே! உங்களுக்கு இப்படியும் ஒரு நற்பாக்கியமா? :

‘மறுமை நாளில் தன்னை நெறுக்கடிகளிலிருந்து அல்லாஹ் பாதுகாக்க வேண்டுமென விரும்புபவர், (தன்னிடம் கடன் பெற்ற) ஏழைக்கு கால அவகாசம் கொடுக்கட்டும், அல்லது கடனை தள்ளுபடி செய்வதன் மூலம் அவனது சுமையை அகற்றிவிடட்டும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), முஸ்லிம்).

கடன் வாங்கியவர்களே! உங்களுக்கும் இருக்கின்றது நற்பாக்கியம்! :

‘கடனை சிறந்த முறையில் திருப்பி செலுத்துபவரே உங்களில் மிகச் சிறந்தவர்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், முத்தபகுன் அலைஹி).

மக்களுக்கு தொல்லை கொடுத்ததை அகற்றியவருக்கு கிடைத்த உயர்வை பார்த்தீர்களா?

‘பாதையில் முஸ்லிமகளுக்கு தொல்லை கொடுத்த ஒரு மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றிய ஒரு மனிதர் சுவர்க்கத்தில் உலா வருவதை நான் பார்த்தேன்’ என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), முஸ்லிம்).

எவைகளெல்லாம் உங்களுக்கு தர்மத்தின் நன்மையை பெற்றுத் தருகின்றன:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரின் வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரின் வாகனத்தின் மீது அவரின் மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்’. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி).

அல்லாஹ்விடம் உங்களுக்கு எது உயர்வு? :

‘தர்மம் கொடுப்பதன் மூலம் செல்வத்தில் எந்த ஒரு குறைவும் ஏற்படமாட்டாது, தனக்கு செய்த தவறுக்காக பிறரை மன்னிப்பதன் மூலம் அல்லாஹ் அவனது அந்தஸ்தை உயர்த்துகின்றான், அல்லாஹ்விற்காக பணிவுடன் நடந்து கொள்பவரை அல்லாஹ் உயர்த்துகின்றான்’ என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், முஸ்லிம்).

அநாதைகளுக்கு அன்பு செலுத்துமாறு போதித்த அநாதையாக வளர்ந்த மாமனிதர்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள், புஹாரி).

விதவைகளைக் காத்த உத்தமத் தலைவர்:

‘விதவைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் உழைப்பவர் இரவு முழுவதும் நின்று வணங்கி, பகல் முழுவதும் நோன்பு நோற்றவரின் அந்தஸ்துக்குரியவரைப் போன்றாவார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி, முஸ்லிம்).

பிறர் குறையை மறையுங்கள்:

‘எவரொருவர் மற்றொருவரின் குறைகளை உலகில் மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறைகளை நாளை மறுமையில் மறைத்துவிடுவார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்).

மனைவியிடம் சிறந்தவரே உங்களில் சிறந்தவர்:

‘ஈமானில் முழுமைபெற்ற முஃமின் உயர்ந்த நற்குணங்களை உடையவரே. உங்களில் சிறந்தவர் தனது மனைவிக்கு சிறந்தவரே’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், திர்மிதி).

இல்லறம் சிறக்க அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்த வழிகளுல் இதுவும் ஒன்று:

‘நம்பிக்கை கொண்ட (ஒரு கணவர்) நம்பிக்கை கொண்ட (தனது மனைவியை) வெறுத்தொதுக்க வேண்டாம். அவளின் ஒரு தீயகுணம் அதிருப்தியளித்தாலும், அவளிடமிருக்கும் மற்றொரு நற்குணத்தின் மூலம் திருப்தியடையுங்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்).

எது சுய மரியாதை? :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள், புஹாரி).

உழைப்பின் உயர்வு:

‘உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி) அவர்கள், புஹாரி).

உங்கள் உறவினர்களிலிருந்தே ஆரம்பியுங்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.’ (அறிவிப்பர்: ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள், புஹாரி).

உறவைப் பேணாதவனுக்கு சுவர்க்கம் நுழைய முடியாது:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்’. (அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி) அவர்கள், புஹாரி).

உங்களுக்கு உணவில் அபிவிருதிதி வேண்டுமா?

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீடிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி).

அல்லாஹ்வின் உறவு உங்களை விட்டு துண்டிக்கப்பட்டு விடும்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, ‘அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்’ (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி).

உண்மையில் உறவைப் பேணுபவன் யார்?:

‘பகரம் செய்யும் வகையில் உறவைப் பேணக்கூடியவன் முழுமையாக உறவைப் பேணுபவன் அல்லன். பிற உறவினர்கள் தொடர்பறுத்துக் கொண்டாலும், அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுடைய உரிமையை நிறைவேற்றுபவனே முழுமையாக உறவைப் பேணுபவன் ஆவான்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், ஆதராம்: முஸ்லிம்).

உங்களுக்கு அண்டை வீட்டார்கள் உள்ளார்களா? அவர்களுடன் நீங்கள் எப்படி?:

‘அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்’ என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்’ என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூ ஷுரைஹ் (ரலி) அவர்கள், புஹாரி).

அடிமைகளுடன், பணியாளர்களுடன் இபபடியும் நடக்கச் சொன்ன உத்தம புருஷர்:

‘உங்களில் ஒருவருக்கு உங்களின் பணியாளன் உணவைக் கொண்டு வந்து பரிமாறும்போது அவரையும் உங்களுடன் அமரவைத்துக்கொள்ள சிறமமென்றால் ஓரிரு கவல உணவயையாவது கொடுங்கள். உங்களுக்க தேவையான உணவை தயாரிப்பதில் அவரே சிறமமெடுத்துக் கொண்டவர்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) புஹாரி).

அடிமைகள் உங்கள் சகோதரர்களே என்று சொன்ன கருணையின் உறைவிடம்:

‘நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: ‘அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்’ என அபூதர் கூறினார்’ (புஹரி).

உரிமைகளுக்காக குரல் கொடுத்த ஒப்பற்ற தலைவர்:

அபூமஸ்ஊத் அல்அன்சாரீ அல்பத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் அடிமையைச் சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னால் யாரோ, ‘நினைவிருக்கட்டும்இ,அபூமஸ்ஊத்!” என்று கூறியதைக் கேட்டேன். அப்போது நான் கோபத்தில் இருந்ததால், அந்தக் குரலை (நன்கு) விளங்கிக்கொள்ளவில்லை. அவர் என்னை நெருங்கி வந்தபோது (பார்த்தால்) அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது அவர்கள் ‘நினைவிருக்கட்டும். அபூமஸ்ஊத்! நினைவிருக்கட்டும். அபூ மஸ்ஊத்!” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். உடனே நான் என் கையிலிருந்த சாட்டையைக் கீழே போட்டேன். அப்போது அவர்கள் ‘நினைவிருக்கட்டும். அபூமஸ்ஊத்! உமக்கு இந்த அடிமையின் மீதிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது” என்று சொன்னார்கள். நான், ‘இதன் பின்னர் ஒருபோதும் நான் எந்த அடிமை யையும் அடிக்கமாட்டேன்” என (உறுதி) மொழிந்தேன். (முஸ்லிம்).

மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென பதவிகளையும், பொறுப்புகளையும் விரும்புபவர்களே! உங்களைத்தான்:

அல்லாஹ்வின் தூதரின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘இந்த எனது வீட்டிலிருந்து அல்லாஹ்வின் தூதர் பின் வருமாறு பிரார்த்தித்தார்கள்: யா அல்லாஹ்! என்னுடைய சமூகத்தில் பொறுப்புகளை ஏற்று மக்களுக்கு சிறமங்களை கொடுப்பவர்களை நீ சிறமப்படுத்துவாயாக! பொறுப்புகளை ஏற்று மக்களுடன் மென்மையாக நடந்து கொள்பவர்களுடன் நீயும் மென்மையாக நடந்துகொள்வாயாக!’ (முஸ்லிம்).

‘உண்மையில் தனது ஆட்சி பொறுப்பிலும், குடும்ப பொறுப்பிலும், தான் ஏற்றுக் கொண்ட ஏனைய பொறுப்புகளிலும் நீதி செலுத்தியவர் நாளை மறுமையில் அல்லாஹ்வின் சந்திதானத்தில் ஒளியினாலான மேடைகளில் வீற்றிருப்பர்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள், முஸ்லிம்).

மோசடி செய்பவர்களுக்கு இழிவு காத்திருக்கின்றது என்பதில் மிக எச்சரிக்கையாக இருங்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் ஒரு (அடையாளக்) கொடி இருக்கும். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).

‘பிறருக்கு அநியாயம் செய்வதை பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அநியாயங்கள் நாளை மறுமையில் (உங்களுக்கெதிரான) மிகப் பெரிய இருளாக வரும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், முஸ்லிம்).

இதை படிக்கும் உங்களுக்கு ஒரு மனம் திறந்த அழைப்பு! :

ஒட்டு மொத்த உலகிற்கே அன்பையும், நேசத்தையும் போதிக்க வந்த உத்தமத் தூதரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாகும். அதில் தான் மனித வாழ்வுக்குரிய சுபீட்சமும், ஈடேற்றமும் தங்கியிருக்கின்றது. இங்கு அவரின் போதனைகளில் ஒரு துளிகூட முன்வைக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். எனவே அந்த தூய வாழ்வை படிப்பதற்கு முன் வாருங்கள். அதுதான் நமக்கு ஈருலகிலும் நிலையான வெற்றியை பெற்றுத்தரும். நடு நிலையுடன் அந்த மாமனிதரின் தூய வாழ்க்கை வரலாற்றை படித்து அவரை ஏற்று பின்பற்றுங்கள்.

ஏனெனில்
அவர் ஒட்டு மொத்த உலகிற்கும் கடவுளிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவார்.

Mobile Phone


உடல் புத்துணர்ச்சிக்கு இஞ்சி அவசியம்.....!

இஞ்சி உலகம் முழுவதும் ஒவ்வொருவரின் சமையலறையிலும் காணப்படும் ஒரு சிறப்பு சமையல் பொருளாக இருக்கிறது. நம் அன்றாடம் உண்ணும் உணவை காரத்தன்மையுடன் உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் இஞ்சியை தினமும் இரண்டு ஸ்பூன் சாறாக சாப்பிடுவது அவசியம்.

இஞ்சி மருத்துவம்

இஞ்சி சமையலுக்கு மட்டுமே பிரபலமானது அல்ல, இஞ்சியை ஒரு நாளில் ஒரு எண்ணிக்கை என தினமும் சாப்பிடக்கூடிய இயற்கை மருந்தாக கருதப்படுகிறது?

காலை நோய் மற்றும் எரிச்சல்

இஞ்சி டீ குடிப்பது காலை நோயை சமாளிக்க சிறந்த வழி. குறிப்பாக கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகள் இஞ்சி டீ குடிப்பது அவசியம். ஏனெனில் காலை வேளையில் ஏற்படும் மசக்கையை தடுக்க இஞ்சி டீ ஒரு மிக சிறந்த இயற்கை வழியாகும். மாறாக வெறுமனே காலை நோயை போக்க சாதாரண டீ உடன் இஞ்சி பிஸ்கட் சேர்த்து சாப்பிடலாம்.

நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் பெற, இஞ்சியை ஒரு சிறிய துண்டுகளாக மென்று சாப்பிடலாம். இஞ்சி டீ குடிக்க விரும்பாதவர்கள் மாற்றுவழியாக காலை நோயை சமாளிக்க சாதாரண டீ உடன் இஞ்சி பிஸ்கட் சாப்பிடலாம். நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்திலிருந்து விடுதலை பெற ஒரு சிறிய இஞ்சி துண்டுகளை வெறுமனே சாப்பிடலாம்.

மூட்டுவலிகள் மற்றும் வீக்கம்

மூட்டுவலிகள் மற்றும் வீக்கங்களை நீக்கும் பண்புகளை கொண்ட ஒரு சிறந்த இயற்கை வலி கொல்லி இஞ்சி. இது ஆர்த்ரிடிஸ் வலியினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மிகவும் பயன்படுவது. உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்படுவர்கள் உடனடி மருந்தாக இஞ்சி டீ சாப்பிடலாம். இஞ்சி மாதவிடாய் பிடிப்புகளுக்கு ஒரு சக்திவாய்ந்த நிவாரணியாக கருதப்படுகிறது.

தொண்டை புண், குளிர் மற்றும் காய்ச்சல்

குளிர், காய்ச்சல், தொண்டை புண், தலைவலி ஆகியவற்றிக்கு இஞ்சி ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும்.. ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுடு தண்ணீரில் ஆவி பிடிக்கும் போது இஞ்சி துண்டு அல்லது இஞ்சியின் சாறு இரண்டு டீஸ்பூன் விட்டு கொதிநிலையை அடைந்ததும் ஆவி பிடித்தால் ஜலதோஷத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும்.

வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா

வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா போக்க ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, பூண்டு சாறு ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா நிவாரணம் பெறும்.

16 டிச., 2012

எந்த ஒரு மென்பொருளின் துணையும் இல்லாமலேயே உங்கள் ரகசிய கோப்புகள் அடங்கிய கோப்பறைகளை மறைக்கலாம்.



இதற்கான எளிய வழி ஒன்று உள்ளது.
முதல் வழி: Start==>RUN==>cmd
அதாவது Start பட்டனை அழுத்தி அதில் ரன் என்பதை தேர்ந்தெடுக்கவும். தோன்றும் ரன் விண்டோவில் cmd என்று தட்டச்சிடுங்கள்.

Command Prompt
விண்டோ ஓப்பன் ஆகும். அதில் D: என தட்டச்சிடுங்கள். மறைக்க வேண்டிய கோப்பறை உள்ள டிரைவின்(D,E,F) பெயரை உள்ளிடவும்.

E
டிரைவில் வைத்திருந்தால் E: என உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். D என்றால் D: என தட்டச்சிட்டு என்டர் பட்டன் தட்டுங்கள்.

இப்போது D:/> இவ்வாறு தோன்றும். அதனருகில் இடைவெளி இல்லாமல் attrib +h +s foldername என தட்டச்சு செய்யுங்கள்.

உதாரணத்திற்கு D:/>attrib +h +s foldername.

இங்கு folder name என்பதற்கு பதில் நீங்கள் மறைக்க விரும்பும் கோப்பறையின் பெயரைக் கொடுக்கவும். உதாரணத்திற்கு கோப்பறையின் பெயர் songs என இருந்தால் songs என டைப் செய்யுங்கள். D:/>attrib +h +s songs இவ்வாறு உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். இப்போது நீங்கள் மறைக்க விரும்பும் கோப்பறை காணாமல் போய் இருக்கும்.

மீண்டும் பெற விரும்பினால் முன்னது போலவே செய்து + குறிக்கு பதில் – குறி இட்டால் போதும்.

அதாவது D:/>attrib -h -s songs என்பதை டைப் செய்து என்டர் தட்டினால் மறைந்திருந்த கோப்பறை உடனே கண்ணுக்குத் தெரியும்.