22 அக்., 2015

படித்ததில் பிடித்தது தானே ?

சில சிந்தனைகள் வரிகள்…
நடத்தை
உங்கள் திறமை உங்களை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லலாம்.
உங்கள் நடத்தை தான் அந்த இடத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ளத் துணை  நிற்கும்!
சிரிப்பு
உன்னைச் சிரிக்க வைக்க நினைப்பவர்களை நீயும் சிரிக்க வை!
உன்னைப் பார்த்துச் சிரிப்பவர்களை நீ சிந்திக்கவை!
பிறப்பும் இறப்பும்
நீ காணும் யாவும் உனக்கு மகிழ்ச்சி தரவேண்டுமா?
 இன்று தான் நீ பிறந்தாய் என எண்ணிக் கொள்!
நீ சாதனை புரிய வேண்டுமா?
இன்றோடு நீ இறந்து போவாய் என எண்ணிக் கொள்.
காரணங்கள்
நம் வாழ்வில் நாம் அழுவதற்காக 100 காரணங்கள் உள்ளன!
நாம் சிரிக்க 1000 காரணங்கள் உள்ளன!
வாழ்க்கை :
வாழும் வரை நம்மை யாரும் வெறுக்கக் கூடாது!
நாம் இறந்த பின் நம்மைய யாரும் மறக்கக்கூடாது!
கடிகாரம் :
இலக்கில்லாத வாழ்க்கை  - முள் இல்லாத கடிகாரம் போன்றது!
 ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளில் இரண்டு முறை சரியாக நேரம் காட்டும்!
மனிதனின் குறைபாடுகள் :
மாற்ற முடியாத, திருத்த முடியாத காரியங்களைப் பற்றி அநாவசியமாகக்  கவலைப்படுவது,
தனது நம்பிக்கை, கொள்கைகளைப் பிறர் மேல் வற்புறுத்தி சுமத்துவது,
அற்ப விசயங்களை உதறித் தள்ள மறுப்பது,
மனம் வளர்ச்சியடைய சிந்தித்து செயற்பட இடங்கொடாதிருப்பது.    – இவையனைத்துமே!
மனிதர்கள் தங்கள் செயலை நியாயமானது என்று காட்டவே சிந்தனையை பயன்படுத்துகிறார்கள். சிந்தனையை மறைக்கவே சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நீயே செய்து காட்டு.
பிடித்தமானவர் என்ன தவறு செய்தாலும் அது விருப்பமாகத்தான் இருக்கும்.
வெறுக்கத்தக்க பல குறைகள் நிறைந்திருந்தாலும். தன் உடலில் யாருக்குத் தான் விருப்பமில்லை.
மனதில் பலவீனம் புகுந்துவிட்டால் அங்கே அமைதி ஏற்படும் வரை கோபம் தான் நிறைந்திருக்கும்.
துன்பத்தை பகிர்ந்துகொள்ள ஒரு நண்பன் இருந்தால் துன்பம் பாதியாகக் குறைந்து விடும்.
இன்பத்தை பகிர்ந்து கொள்ள ஒரு துணை இருந்தால் இன்பம் பல மடங்கு அதிகமாகி விடுகிறது.
நமக்கு கிடைக்கும் முதற் சந்தர்ப்பமே தக்க சந்தர்ப்பம்.
அதனால், நமக்கு கிடைக்கும் முதற் சந்தர்ப்பத்தை எப்பொழுதும் நழுவவிடக் கூடாது.
புத்தகங்களைப் படித்து அறிந்து கொள்ளும் அறிவு மட்டும் இந்த நூற்றாண்டின் வாழ்க்கைக்கு போதாது. மனிதர்களைப் படித்து அறிந்து கொள்ளும் ஞானம் தான் இந்தக் காலச் சமூகத்தில் வெற்றி பெறுவதற்கு சரியான கருவி.
ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் பல குழப்பங்கள் நிறைந்த ஒவ்வொரு புத்தகமாகத் தான் இருக்கிறான். அவனைப் படித்து புரிந்து கொள்வது அருமையாக இருக்கும்.
சந்தர்ப்பங்களும் ஆசைகளும் அருகருகே நெருங்கும் போது எத்தனையோ நினைவுகள் தானாகவே எளிதாக நிறைவேறி விடுகின்றன.
நல்லவரைப் பார்க்கும் போது பின்பற்ற நினையுங்கள்.
தீயவரைப் பார்த்தால் உங்கள் இதயத்தைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
மனிதன் தன்னை மட்டுமல்ல இந்த உலகத்தையே மறந்து பல கொடுமையானகாரியங்களைச் செய்வது ஒரு நிமிடம் உணர்ச்சி வசப்படுவதால் தான்.
அதே மனிதனுக்கு பெருமையையும் புகழையும் தேடிக் கொடுப்பது அவன் நிதானமாக கடைப்பிடிக்கும் அந்த ஒரு நிமிடம் தான்.
வெற்றி ஒரு வானவில். எட்டத்தில் இருப்பதால் தான் அதற்கு கவர்ச்சியும் அழகும்.

26 மார்., 2015

உம்ரா செய்வது எப்படி ?

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு
'ஒரு உம்ரா செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),   நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
 'ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஆவார்கள். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),   நூல்கள்: நஸயி, இப்னுமாஜா)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்களும் இன்னும் பல ஹதீஸ்களும் உம்ராவின் சிறப்புகளைக் கூறுகின்றன.
இன்று உம்ரா செல்லக்கூடியவர்கள் அதிகரித்துள்ளனர், ஆனால் உம்ராவிற்கான வழிகாட்டுதல்கள் தனியாகத் தொகுக்கப்படாமல் ஹஜ்ஜுடன் சேர்த்து கூறப்பட்டடிருப்பது புதிதாக உம்ராச் செல்லக் கூடியவர்களுக்கு சிரமமாக இருக்கிறது. இக்குறையை நீக்குவதற்காக இங்கு உம்ராச் செய்வதற்கான வழிகாட்டுதல் சுருக்கமாகத் தரப்படுகிறது.
1. இஹ்ராம் :
மீக்காத் எனும் எல்லையை அடைந்ததும் குளித்து விட்டு இஹ்ராம் உடையை அணிந்து கொள்ள வேண்டும்.
(மீக்காத்திலிருந்து கஃபாவை தவாஃப் செய்ய ஆரம்பிக்கும் வரை வலது தோளைத் திறந்த வைத்துக் கொள்வது நபிவழிக்கு மாற்றமானது.)
பர்ளுத் தொழுகையின் நேரமாக இருந்தால் அதனைத் தொழுதுவிட்டு அல்லது உளூவுடைய சுன்னத் இரண்டு ரக்அத்துக்களைத் தொழுது விட்டு உம்ராவுக்கு நிய்யத் வைக்க வேண்டும். (இஹ்ராமிற்கென்று பிரத்தியேகமான எந்தத் தொழுகைக்கும் நபிவழியில் ஆதாரம் இல்லை.)
உம்ராச் செய்வதாக மனதால் நினைப்பதே நிய்யத் எனப்படும்.
அவ்வாறு நினைத்து விட்டு لَبَّيْكَ اَللهُمَّ عُمْرَةً (லப்பைக அல்லாஹும்ம உம்ரதன்) என்றோ
 اَللهُمَّ لَبَّيْكَ عُمْرَةً (அல்லாஹும்ம லப்பைக உம்ரதன்) என்றோ கூற வேண்டும்.
2. உம்ராவுக்கு நிய்யத் வைத்ததிலிருந்து கஃபதுல்லாஹ்வைச் சென்றடையும் வரை தல்பியாவைத் திரும்பத் திரும்பச் செல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஆண்கள் சத்தத்தை உயர்த்தியும் பெண்கள் மெதுவாகவும் தல்பியாவைச் சொல்ல வேண்டும். தல்பியா வாசகங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

لَبَّيْكَ اَللهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لآ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لآ شَرِيْكَ لَكَ

 (அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்நிஃமத லக வல் முல்க், லாஷரீக லக்.)
3. தவாஃப் செய்தல்:
மஸ்ஜிதுல் ஹராமை அடைந்ததும் வுழூச் செய்து விட்டு கஃபதுல்லாஹ்வை நோக்கிச் செல்ல வேண்டும். தனது வலது தோளைத் திறந்தவராக ஹஜருல் அஸ்வதின் பக்கம் சென்று, அதனைத் தனது வலது கையினால் தொட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூற வேண்டும். முடிந்தால் அக்கல்லை முத்தமிடலாம். முடியாவிட்டால் கல்லைக் கையினால் தொட்டு கையை முத்தமிட வேண்டும். அதற்கும் முடியவில்லையென்றால் அதனை முன்னோக்கி அல்லாஹுஅக்பர் என்று கூறி தனது வலது கையால் அதன்பால் சுட்டிக்காட்ட வேண்டும். அப்போது கையை முத்தமிடக் கூடாது.
அவ்விடத்திலிருந்து தவாiஃப ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வதிலிருந்து ஆரம்பித்து மீண்டும் ஹஜருல் அஸ்வதை வந்தடைவது ஒரு சுற்றாக கணிக்கப்படும்.
இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்றின் ஆரம்பத்திலும் முடிந்தால் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது அல்லது அதனைத் தொட்டு கையை முத்தமிடுவது அல்லது அதனை நோக்கிக் கையைக் காட்டுவது நபிவழியாகும்.
ஆரம்ப மூன்று சுற்றுக்களிலும் தொங்கோட்டமாகவும், ஏனைய நான்கிலும் சாதாரணமாகவும் செல்ல வேண்டும்.
தவாஃபின் போது (ஹஜருல் அஸ்வதிற்கு முன்னாலுள்ள) ருக்னுல் யமானி என்ற மூலையை அடைந்தால் பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூறி அதனைத் தொட வேண்டும். கையை முத்தமிடக் கூடாது. தொட முடியாவிட்டால் அதற்குக் கையைக் காட்டக் கூடாது.
ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வதை அடையும் வரை,
 رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار
'ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' என்று கூற வேண்டும்.
 (பொருள்: எங்கள் இரட்சகா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைத் தருவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!)
 இது அல்லாமல் தவாஃபின் போது ஒதுவதற்கென்று எந்த துஆக்களும் ஹதீஸ்களில் வர வில்லை. எனவே தான் விரும்பிய துஆக்களைத் தனக்குத் தெரிந்த மொழிகளில் கேட்கலாம். அல்குர்ஆன் ஓதலாம். மேலும் திக்ருகள் செய்யலாம்.
தவாஃப் செய்து முடிந்ததும் வலது தோளை மூடிக் கொள்ளலாம்.
4. தவாஃப் செய்து முடிந்தால்...?: தவாஃப் செய்து முடிந்ததும் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும்.
முதலாவது ரக்அத்தில் சூரத்தல் ஃபாத்திஹாவுடன் குல் யா அய்யுஹல் காபிரூன் சூராவையும், இரண்டாவது ரக்அத்தில் சூரதுல் ஃபாத்திஹாவுடன் குல் ஹுவல்லாஹு அஹத் சூராவையும் ஓத வேண்டும்.
இந்த தொழுகையை மாகமு இப்ராஹீமிற்குப் பின்னால் நின்று தொழுவது சிறந்தது. முடியாவிட்டால் பள்ளியின் எந்த இடத்திலும் தொழலாம்.
தொழுது முடிந்ததும் ஸம்ஸம் தண்ணீரை அதிகமாகக் குடிப்பது சுன்னத்.
5. ஸயீ செய்வது:
தவாஃப் செய்து, தொழுது முடிந்தால் ஸயீ செய்வதற்காக ஸஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும்.
ஸஃபாவை நெருங்கும் போது
, إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِر الله فَمَنْ حَجَّ الْبَيْتَ أَو اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَّطَّوَّفَ بِهِمَا، وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ الله شَاكِرٌ عَلِيْمٌ
'இன்னஸ் ஸஃபா வல்மாவத மின் ஷஆயிரில்லாஹ், ஃபமன் ஹஜ்ஜல் பைத அவிஃதமர ஃபலா ஜுனாஹ அலைஹி அய்யத்தவ்வஃப பிஹிமா, வமன் ததவ்வஅ கைரன் ஃபஇன்னல்லாஹ ஷாகிருன் அலீம்'. (2:158) என்று ஓத வேண்டும்.
பின்னர் கஃபாவைக் காணுமளவுக்கு ஸஃபாவில் ஏறி பின்வருமாறு ஓத வேண்டும்.
لآ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأحْزَابَ وَحْدَهُ
'லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யி வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாஇலாஹ இல்லல்லாஹுவஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'.
பிறகு கையை உயர்த்தி தனக்கு விருப்பமான துஆக்களை (விரும்பிய மொழியில்) கேட்க வேண்டும். துஆக் கேட்டு முடிந்ததும் மேற்படி திக்ரைக் கூறிவிட்டு மீண்டும் கைகளை உயர்த்தி துஆச் செய்ய வேண்டும். இரண்டாவது முறை துஆக் கேட்டு முடிந்ததும் மேற்படி திக்ரை ஓதிவிட்டு மார்வாவை நோக்கிச் செல்ல வேண்டும். பச்சை அடையாளம் இடப்பட்ட தூண்களுக்கு இடையில் ஆண்கள் தொங்கோட்டமாகச் செல்ல வேண்டும்.
(பெண்கள் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும்.)
மர்வாவை அடைந்ததும் அதில் ஏறி கிப்லாவை முன்னோக்கி ஸஃபாவில் செய்தது போன்று (திக்ரு, துஆ) செய்ய வேண்டும்.
ஸஃபாவிலிருந்து மார்வாவுக்குச் செல்வது ஒரு சுற்றாகும். மர்வாவிலிருந்து மீண்டும் ஸஃபாவுக்கு வருவது இரண்டாவது சுற்றாகக் கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். ஏழாவது சுற்று மர்வாவில் முடியும்.
ஸஃபா, மர்வாவில் ஓதுவதற்கென்று ஏற்கனவே கூறப்பட்ட திக்ருகளைத் தவிர ஸயீயில் ஓதுவதற்கென்று குறிப்பாக ஏதும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்பட வில்லை. எனவே தவாiஃப் போன்று குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், துஆச் செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.
ஸயீ செய்வதற்கு வுழு அவசியமில்லை.
6. ஸயீ முடிந்ததும்:
ஸயீ முடிந்ததும் தலை முடியை முற்றாக மழிக்க வேண்டும், அல்லது கத்தரிக்க வேண்டும்.
கத்தரியால் சில முடிகளை மட்டும் வெட்டுவது மிகப் பெரிய தவறாகும்.
இத்துடன் உம்ரா நிறைவு பெறுகிறது.
(குறிப்பு: இஹ்ராமில் தடுக்கப்பட்டவை, இஹ்ராம் கட்டியவர் தவிர்ந்து கொள்ள வேண்டியவை போன்ற மேலதிக விபரங்களை விரிவான நூற்களில் காணவும்.)

உங்களது உம்ராவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!

17 அக்., 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? எஸ்எம்எஸ் மூலம் அறிய

                 வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? எஸ்எம்எஸ் மூலம் அறியலாம்! 
                 வாக்காளர் பட்டியலில் நமது பெயர் உள்ளதா என்பதை எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
                 இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
                "தமிழகம் முழுவதும் நேற்று முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதையும் பொதுமக்கள் அந்த முகாம்களுக்கு சென்று பார்க்கலாம். மேலும், கூடுதலாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்திலும் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 
               அதன்படி, அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தெரிவிக்கப்படும். இது இலவச தொலைபேசியாகும். 
               அதேபோன்று, செல்போன் மூலம் எஸ்எம்எஸ் செய்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். 
               அதற்கு, EPIC என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். 24 மணி நேரத்திற்குள் தேர்தல் அலுவலகத்தில் இருந்து விவரம் தெரிந்து கொள்ளலாம். பெயர் இல்லை என்றாலும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

24 செப்., 2014

Wifi Router ஆக Laptop யை மாற்ற

உங்கள் மடிக் கணினிக்கு கேபிள் மூலமான இணைய இணைப்பை வழங்கியிருக்குறீர்கள். எனினும் அந்த இணைப்பை பயன் படுத்தி உங்களிடம் உள்ள ஏனைய கணினிகளுக்கும்  கருவிகளுக்கும்  கேபிளின்றி வழங்க முடியுமா? அதாவது உங்கள் மடிக்ககணினியை ஒரு a WiFi router ஆகப் பயன் படுத்த முடியுமா? முடியும் என்பதே இக்கேள்விக்குரிய  விடையாகும்.

 இந்த வசதியைப் பெற மடிக்கணினியிலோ அல்லது டெஸ்க்டொப் கணினியிலோ  wifi வசதி இருக்க வேண்டும்.  தற்போது வரும் மடிக் கணினிகளில் wifi வசதியுண்டு. டெஸ்க்டொப் கணினி எனின் wireless network card பொருத்திக் கொள்ள வேண்டும்.  கணினியில் wifi வசதியிருப்பின் உங்கள் கணினியை ஒரு WiFi hotspot ஆக மாற்றிக் கொள்ள முடியும். இதனை விண்டோஸ் இயங்கு தளத்தில் Ad-Hoc Wireless Connection என அழைக்கப்படும். 
விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் ஒரு கணினியை WiFi hotspot ஆக மாற்றுவது எப்படி எனப் பார்ப்போம். முதலில்  Control Panel  ஊடாக அல்லது வேறு வழியில் Network and Sharing Center நுழையுங்கள். அப்போது ஒரு விசர்ட் தோன்றும். அங்கு  Set up a new connection or network என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது திறக்கும் விண்டோவில் Set up a wireless ad hoc (computer-to-computer) network என்பதைத் தெரிவு செய்யுங்கள். அடுத்து  ad-hoc wireless network என்றால் என்ன என்பது பற்றி ஒரு விளக்கக் குறிப்பு காண்பிக்கப்படும். 

அடுத்து தோன்றும் விண்டோவில் உங்கள் கேபிளின்றிய இணைப்புக்கான ஒரு பெயரை வழங்குவதோடு விருப்பமான ஒரு பாதுகாப்பு முறையையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். 
WPA2 எனும் பாதுகாப்பு முறை விரும்பத் தக்கது. மேலும் அதற்கு ஒரு பாஸ்வர்டையும் வழங்குங்கள். பாதுகாப்பு அவசியமில்லை எனின் Open என்பதைத் தெரிவு செய்யலாம். அடுத்து Next க்ளிக் செய்ய விசர்ட் முடிவுக்கு வரும்.  இப்போது wirelss router இன்றி ஒரு  wirelss இணைப்பை உருவாக்கியாயிற்று.
இனி இந்த  இணைப்பைப் பயன் படுத்தி உங்களிடமுள்ள ஏனைய மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசி, டேப்லட் கணினி போன்றவற்றை இணையத்துடன்  கேபிளின்றி இணைக்கலாம். 

23 செப்., 2014

கணினியில் android

இனி உங்கள் whatsapp மற்றும் viber போன்ற ஆண்டிராய்டு அப்ளிகேஷன்களை பயன்படுத்த விலை கொடுத்து ஸ்மார்ட் போன் வாங்கவேண்டிய தேவையில்லை.  உங்கள் வீட்டில் இருக்கும் கணினியைக் கொண்டே ஆண்டிராய்டு அப்ளிகேஷன் அனைத்தையும் பயன்படுத்தமுடியும்.
இந்த சேவையை அமெரிக்காவை சேர்ந்த ப்ளுஸ்டாக்ஸ் (bluestacks)  எனும் நிறுவனம் துவங்கியுள்ளது.  இதற்கு எந்த கட்டணமும் பெறப்படுவதில்லை என்பதுதான் இதன் தனிச் சிறப்பு. இனி இந்த இலவச வசதியினை உங்கள் கணினியில் எவ்வாறு நிறுவலாம் என்பதை விரிவாகக் பார்க்கலாம்.
1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
2. இதை உங்கள் Windows 7 கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இது பல நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.
3. இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன் ஆகி விடும். அப்படி இல்லை என்றால் Desktop Shortcut மூலம் ஓபன் செய்யலாம்.
4. இனி இது Google Play & உங்கள் Android Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும். உங்களுக்கு எந்த App வேண்டுமோ அதன் பெயரை வலது மேல் மூலையில் உள்ள “Search Icon” மீது கிளிக் செய்து தேடலாம்.
5. இன்ஸ்டால் ஆன App- களை My Apps பகுதியில் காணலாம். இணைய இணைப்பை பயன்படுத்தி App-ஐ டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த முடியும்.
6. உங்கள் கணணியில் Viber ஐ பயன்படுத்த வலது கீழ் மூலையில் உள்ள Search Icon இல் Viber என்று தேடுங்கள். பின்னர் Viber App-னை Android Phone – இல் Install செய்வது போன்று Install செய்து கொள்ளுங்கள்.
7. வரும் பகுதியில் BlueStacks – கில் நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர் கொடுத்து Register செய்து கொள்ள வேண்டும். இப்போது உங்களுக்கு Pin Number ஒன்று வந்திருக்கும்.
8. Application – ஐ இன்ஸ்டால் செய்து Pin Number – ஐ கொடுத்து Log In செய்து கொள்ளலாம்.
9. Log – in ஆன உடன் உங்கள் மொபைலில் உள்ள App – களை உங்கள் கணினியில் பயன்படுத்தும் BlueStacks உடன் Sync செய்து கொள்ளும் வசதி இருக்கும்.
இதில் குறிப்பிட்ட ஒரு App அல்லது அனைத்து App – களையும் உங்கள் கணினிக்கு Sync செய்து கொள்ளலாம்.
11. இனி Android App பயன்படுத்த உங்கள் Android Phone – ஐ பயன்படுத்த தேவையில்லை.
அதே போன்று உங்களுக்கு கணணியில் WhatsApp -னையும் பயன்படுத்த முடியும்.
http://www.bluestacks.com/

22 செப்., 2014

இயற்கை வலி நிவாரணி


விரலை அழுத்தினால் எல்லா நோயும் போயே போச்சு!


நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.
உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.

தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, "தலை வலிக்கிறது' என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம்.

மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது?
நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!

அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன.
விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.

மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, "ஆன்டாசிட்' மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.

மலச்சிக்கல் :
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.

கழுத்து வலி :
கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம்.
கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

உயர் ரத்த அழுத்தம் :
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும்.
நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது. காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது.
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது.

இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.